கூகுள் நெக்சஸ் 6 அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது, முக்கிய அம்சங்களை பாருங்க

Written By:

கூகுள் நெக்சஸ் 6 ஸ்மார்ட்போன் அறிவிப்பு வெளியானது, மோட்டோரோலா தயாரித்த நெக்சஸ் 6 32 ஜிபியின் விலை 649 டாலர்களாகவும், 64 ஜிபி 669 டாலர்களாகவும் நிர்ணயக்கப்பட்டுள்ளது. 5.96 இன்ச் கியு எஹ்டி ஸ்மார்ட்போன் இன்னும் சில வாரங்களில் உலகளவில் 28 நாடுகளில் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படும் நிலையில் அமெரிக்காவில் நவம்பர் மாதம் வெளியாகும் என்றும் கூறப்படுகின்றது.

ஸ்மார்ட் போன் கேலரிக்கு இங்கு க்ளிக் செய்யவும்

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

1

இப்ப ஸ்மார்ட்போன் வாங்கும் பலரும் முதலில் டிஸ்ப்ளேவை தான் பார்க்கின்றனர், அந்த வகையில் கூகுள் நெக்சஸ் 6 இல் 5.96 இன்ச் ஸ்கிரீன் மற்றும் கியுஎஹ்டி ரெசல்யூஷனும் உள்ளது.

2

புதிய நெக்சஸ் 6 பார்க்க அழகாகவும் கச்சிதமாகவும் இருக்கின்றது, மேலும் அலுமினியம் கொண்ட பக்கவாட்டுகள் உண்மையில் மெய்சிலிர்க்க வைக்கின்றது

3

அம்சங்களை பொருத்த வரை சந்தையில் நிலவும் சிறந்த அம்சங்களை நெக்சஸ் 6 கொண்டிருக்கின்றது, மேலும் 3,220 எம்ஏஎஹ் பேட்டரியும் இதில் குறிப்பிடத்தக்க ஒன்று.

4

புதிய நெக்சஸ் 6 மாடலில் 13 மெகாபிக்சல் ப்ரைமரி கேமராவும், டூயல் எல்ஈடி ரிங் ப்ளாஷ் சிஸ்டமும் உள்ளது

5

நெக்சஸ் 6 சந்தேகமே இல்லாமல் ஆன்டிராய்டு 5.0 லாலிபாப் மூலம் தான் இயங்குகிறது.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

மோட்டோரோலா தயாரித்த நெக்சஸ் 6 நிர்ணயக்கப்பட்ட விலைக்கு ஏற்றவாரு பெரிதாகவும், அருமையாகும் வடிவமைக்கப்பட்டுள்ளது. எல்ஜி தயாரித்த பழைய நெக்சஸ் போன்களை விட தரமாக காட்சியளி்கும் புதிய நெக்சஸ் ஸ்மார்ட்போன்கள் பார்க்க இரண்டாம் தலைமுறை மோட்டோ எக்ஸ் போன்று காட்சியளிக்கின்றது.

புதிய ஸ்மார்ட் போன் செய்திகளுக்கு இங்கு க்ளிக் செய்யவும்

6.27 இன்ச் மற்றும் 10.3 எம்எம் தட்டையாக இருக்கும் நெக்சஸ் 6 ஸ்மார்ட்போனின் 5 சிறந்த அம்சங்களை பார்ப்போமா

English summary
Google Nexus 6 Officially Announced, Best Specs available in Nexus 6. Here is a best specs of New Google Nexus 6.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்