7000எம்ஏஎச் பேட்டரி திறன் கொண்ட ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

கனவில் கூட காணாத அதிரடியான அம்சங்கள் மற்றும் விலையில் - எம்2017 கருவி.

Written By:

ஜியோனி நிறுவனத்தின் பிரீமியம் ஸ்மார்ட்போன் ஆன எம்2017 கருவியானது ஒரு மிகப்பெரிய அடிப்படை விலையில், அதாவது சுமார் ரூ.68,400 என்ற விலையில் சீனா தொடங்கப்பட்டது. இப்போது, அந்த புதிய ஜியோனி எம்2017 உலகின் மற்ற பகுதிகளில் வெளியிடப்பட்டுள்ளதா அல்லது சீனாவில் மட்டும் பிரத்தியேகமாக வெளியிடப்பட்டுள்ளதா என்பது சார்ந்த எந்த தகவலும் இல்லை.

உடன் இத்தாலிய கஸ்டம் அலிகேட்டர் லெதர் பேக் பேனல் கொண்ட மற்றொரு ஜியோனி எம்2017 பதிப்பும் சுமார் ரூ.1,66,000/-க்கு வெளியிடப்பட்டுள்ளது. ஜியோனி எம்2017 ஸ்மார்ட்போன் சீனாவில் முன்பதிவுகளுக்கு உள்ளாக்கப்பட்டுள்ள அதேவேளையில் ஜியோனி இணையதளத்தில் ஏற்கனவே "அனைத்து கருவிகளும் பதிவு செய்யப்பட்டு விட்டது என்று காட்டுகிறது" இதற்கு ஒரு முக்கியமான காரணம் இருக்கிறது - அதுதான் இக்கருவியின் அதிரடியான அம்சங்கள்.!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

இரண்டு 3500எம்ஏஎச் பேட்டரி

ஜியோனி எம்2017 கருவியானது ஒரு பாஸ்ட் சார்ஜ் 3.0 ஆதரவு உடன் 7000எம்ஏஎச் மொத்த பேட்டரி திறன் வழங்கும் இரண்டு 3500எம்ஏஎச் பேட்டரிகளை கொண்டுள்ளது. எம்2017 ஸ்மார்ட்போன் ஆனது 25.89 மணி நேர வீடியோ பின்னணி நேரம் மற்றும் 915.42 மணி நேரம் ஸ்டான்ட்பை கொடுக்கிறது.

டிஸ்ப்ளே

இரட்டை சிம் ஆதரவு கொண்ட இக்கருவி அமோஎல்இடி மற்றும் கர்வுடு டிஸ்ப்ளே கொண்ட ஒரு 5.7-அங்குல க்யூஎச்டி (1440x2560 பிக்சல்கள்) டிஸ்ப்ளே, மற்றும் 518பிபிஐ என்ற ஒரு ஈர்க்கக்கூடிய பிக்சல் அடர்த்தியும் கொண்டுள்ளது உடன் ஆக்டா-கோர் க்வால்காம் ஸ்னாப்டிராகன் 653, 6ஜிபி ரேம், ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மெல்லோ அடிப்படையிலான அமிகோ 3.5 யூசர் இன்டர்பேஸ் ஆகியவைகளை உள்ளடக்கியுள்ளது.

கேமிரா

கேமிரா துறையை பொறுத்தவரை எம்2017 கருவியில் செல்ஃபிகளுக்காக 8 மெகாபிக்சல் முன்பக்க கேமிரா மற்றும் 2Xஆப்டிகல் ஜூம் மற்றும் 8xடிஜிட்டல் ஜூம் கொண்ட ஒரு இரட்டை கேமிரா அமைப்பு (12 மெகாபிக்சல் + 13 மெகாபிக்சல்) கொண்ட முதன்மை கேமிரா உள்ளது. உடன் மைக்ரோஎஸ்டி அட்டை வழியாக நீட்டிக்கும் ஆதரவு கொண்ட 128ஜிபி உள்ளடங்கிய சேமிப்பையும் இக்கருவி வழங்குகிறது.

இணைப்பு வசதி

அளவீடுகளில் 155.2x77.6x10.78எம்எம் மற்றும் 238 கிராம் எடையுள்ள இக்கருவி மேம்பட்ட பாதுகாப்பு முன் வரிசையில் ஒரு கைரேகை ஸ்கேனர் கொண்டுள்ளது மற்றும் கடினமான வடிவமைப்பும் கொண்டு வருகிறது. உடன் 4ஜி, ஜிபிஎஸ், ப்ளூடூத், வைஃபை ஆகிய இணைப்பு வசதிகளையும் வழங்குகிறது.

கருப்பு மற்றும் தங்க நிற மாறுபாடு

சுவாரஸ்யமாக, இந்த தொலைபேசி ஒரு 3.5எம்எம் ஹெட்ஜாக் கொண்டு வரப்பிடவில்லை ஆனால் ஒரு யூஎஸ்பி டைப் போர்ட் கொண்டுள்ளது. ஜியோனி எம்2017 கருவியானது கருப்பு மற்றும் தங்க நிற மாறுபாடுகளில் கிடைக்கிறது.

மேலும் படிக்க

ஜியோனி பி7 : வோல்ட் ஆதரவுடன் ரூ.9,999/- என்ற விலைக்கு அறிமுகம்.!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

Read more about:
English summary
Gionee M2017 Smartphone With 7000mAh Battery Launched. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்