உலகில் முதல் முறை டூயல் ஸ்கிரீன் கொண்ட ஃப்ளிப் போன் அறிமுகம்.!!

By Meganathan
|

ஸ்மார்ட்போன் சந்தையை திரும்பி பார்க்க வைக்கும் விதமாக ஜியோனி நிறுவனம் ஆண்ட்ராய்டு இயங்குதளம் கொண்ட ஃப்ளிப் போன் ஒன்றை அறிவித்துள்ளது. ஏற்கனவே அறிவித்திருந்ததை போன்றே அந்நிறுவனம் டூயல் திரை கொண்ட ஸ்மார்ட்போனினை அறிவித்திருக்கின்றது.

சீனாவில் CNY 3,999 (இந்திய சந்தையில் ரூ.41,000) விலைக்கு ஏற்கனவே இந்நிறுவனத்தின் முன்பதிவுகள் சீனாவில் மட்டும் துவங்கப்பட்டுள்ளது. மற்ற நாடுகளில் இந்த கருவியின் வெளியீடு குறித்து எவ்வித தகவல்களும் இல்லை. ஜியோனி W909 கருவி தான் கைரேகை ஸ்கேனர் கொண்ட உலகின் முதல் ஃப்ளிப் போன் ஆகும்.

இரு டிஸ்ப்ளே

இரு டிஸ்ப்ளே

இந்த ஸ்மார்ட்போன் கருவியில் 4.2 இன்ச் எச்டி ஐபிஎஶ் டிஸ்ப்ளே 720*1280 பிகஸல்களும், இரு டச் ஸ்கிரீன் திரைகளும் கொண்டிருக்கின்றது. வெளிப்புற டிஸ்ப்ளே 2.5டி கிளாஸ் வழங்கப்பட்டுள்ளது.

 வடிவமைப்பு

வடிவமைப்பு

ஜியோனியின் ஃப்ளிப் போன் மெட்டல் மூலம் வடிவமைக்கப்பட்டுள்ளது. 207 கிராம் எடை மற்றும் கைரேகை ஸ்கேனர் கொண்டிருக்கின்றது.

பிராசஸர்

பிராசஸர்

ஜியோனி W909 கருவியானது 1.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ P10 பிராசஸர் மற்றும் 4 ஜிபி ரேம் கொண்டுள்ளது.

மென்பொருள்

மென்பொருள்

இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 5.1 லாலிபாப் இயங்குதளம் கொண்டு இயங்குகின்றது. மார்ஷ்மல்லோ அப்டேட் குறித்த எவ்வித தகவலும் இல்லை.

கேமரா

கேமரா

ஜியோனி W909 கருவியில் 16 எம்பி ப்ரைமரி கேமரா, எல்இடி ப்ளாஷ், மற்றும் 5 எம்பி முன்பக்க கேமராவும் வழங்கப்பட்டுள்ளது.

மெமரி

மெமரி

இந்த கருவியில் 64 ஜிபி இன்டர்னல் மெமரியும், மைக்ரோ எஸ்டி கார்டு மூலம் 128 ஜிபி வரை நீட்டிக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.

பேட்டரி

பேட்டரி

இந்த ஸ்மார்ட்போனானது 2530 எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகின்றது. இந்த பேட்டரியானது 29.7 மணி நேர டாக்டைம் மற்றும் 408 மணி நேர ஸ்டான்ட்பை கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனெக்டிவிட்டி

கனெக்டிவிட்டி

கனெக்டிவிட்டியை பொருத்த வரை 4ஜி எல்டிஇ, ப்ளூடூத் வி4.0, ஜிபிஎஸ், வை-பை மற்றும் யுஎஸ்பி டைப்-சி கனெக்டிவிட்டி வழங்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க

மேலும் படிக்க

வாட்ஸ்ஆப்பில் அழிக்கப்பட்ட குறுந்தகவல்களை மீட்பது எப்படி.??

அமெரிக்கர்கள் கையில் இந்திய போன் : சச்சின் ஆசை நிறைவேறுமா.??

Best Mobiles in India

English summary
Gionee has unveiled an Android flip smartphone with dual screen Tamil

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X