Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English हिन्दी ಕನ್ನಡ മലയാളം తెలుగు
 
Share This Story

அதிரடியா 5 ஸ்மார்ட்போன்களை களமிறக்கும் ஜிஃபைவ்!

Updated: Monday, March 25, 2013, 17:18 [IST]

gfive launches 5 android smartphones with g cloud technology
புதிய ஸ்மார்ட்போன்களின் வருகையையே காணோமே என்று நினைத்து வருத்தப்படும் வாடிக்கையாளர்களுக்கு இதோ வந்துவிட்டது புதிய ஜிஃபைவ் ஸ்மார்ட்போன்கள்.

ஒரே சமயத்தில் 5 ஸ்மார்ட்போன்களை வெளியிட்டுள்ளது ஜிஃபைவ். அதுவும் இந்த 5 ஸ்மார்ட்போன்களும் ஆன்ட்ராய்டு இயங்குதளத்தையும்,  டியூவல் சிம் தொழில் நுட்பத்தையும் கொண்டவை. இந்த ஸ்மார்ட்போன்கள் பற்றி ஆராய்ந்து பார்த்தால் பல புதிய தொழில் நுட்பங்களும் உள்ளது.

ஏ-79, ஏ-86, ஐ-88 +, ஜி-95 மற்றும் ஜி-3டி என்ற ஸ்மார்ட்போன்களை வெளியிட்டுள்ளது ஜிஃபைவ் நிறுவனம். இந்த ஸ்மார்ட்போன்கள் ஜி-க்ளவுடு வசதியினையும் வழங்கும். அதுவும் 5.5 ஜிபி வரை இலவசமாக க்ளவுடு வசதியினையும் கொடுக்கும்.

கடந்த நிதியாண்டில், மொபைல்போன் மார்கெட்டில் ஜிஃபைவ் நிறுவனம் 670 கோடி வருவாயினை கொடுத்திருக்கிறது. சமீபமாக நிறைய சிறந்த தொழில் நுட்பம் கொண்ட படைப்புகளை கொடுத்து கொண்டு வருகிறது ஜிஃபைவ் நிறுவனம்.

இப்போது வெளியிட்டிருக்கும் இந்த 5 புதிய ஸ்மார்ட்போன்களின் தொழில் நுட்ப விவரத்தினை பற்றி பார்ப்போம். ஜிஃபைவ் ஏ-79 ஸ்மார்ட்போன் 4.0 எச்விஜிஏ தொடுதிரை வசதியினை கொண்டது. இந்த ஸ்மார்ட்போன் ஆன்ட்ராய்டு 2.3 ஆப்பரேட்டிங் சிஸ்டம் வசதியினை கொடுக்கும். இதன் இயங்குதளம் சிறப்பாக இயங்க 832 மெகாஹெர்ட்ஸ் பிராசஸரும் கொடுக்கப்பட்டுள்ளது.

5 மெகா பிக்ஸல் கேமராவின் மூலம் சிறப்பான தொழில் நுட்ப வசதியினை ஏ-79 ஸ்மார்ட்போன் பெற முடியும். 3ஜி நெட்வொர்க், வைபை என்று முக்கிய தொழில் நுட்ப வசதிகளை சிறப்பாக வழங்கும். சிறந்த தொழில் நுட்ப வசதிகளுக்கு சப்போர்ட் செய்ய இதன் 1850 எம்ஏஎச் பேட்டரி ஒத்துழைக்கும்.

ஏ-86 ஸ்மார்ட்போன், ஏ-79 ஸ்மார்ட்போனின் இயங்குதளத்தைவிட ஒரு படி மேலே சென்று சிறப்பான ஆன்ட்ராய்டு 4.0 ஐஸ்கிரீம் சான்ட்விச் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை வழங்கும். டியூவல் கேமரா வசதியினை இந்த ஸ்மார்ட்போன் வழங்கும்.

ஏ-86 ஸ்மார்ட்போன் 8 மெகா பிக்ஸல் கேமராவையும், 0.3 மெகா பிக்ஸல் முகப்பு கேமாரவையும் கொடுக்கும். இதனால் புகைப்படம் மற்றும் வீடியோ ரெக்கார்டிங் வசதியினை பற்றி கேட்கவே வேண்டாம். இந்த ஸ்மார்ட்போனில் 4 இஞ்ச் அகன்ற திரையும் கொடுக்கப்பட்டுள்ளது. அருமையாக தொழில் நுட்ப வசதிகளுக்கு நீண்ட நேரம் உழைக்கும் வகையில் இதில் 2,800 எம்ஏஎச் பேட்டரியும் கொடுக்கப்பட்டு்ள்ளது.

ஐ-88 + ஸ்மார்ட்போன் 4.3 இஞ்ச் தொடு திரை வசதியை கொண்டதோடு மட்டும் அல்லாமல் ஆன்ட்ராய்டு 4.0 ஐஸ் கிரீம் சான்ட்விச் இயங்குதளத்தினையும் வழங்கும். இந்த ஸ்மார்ட்போனிற்கு 1 ஜிகாஹெர்ட்ஸ் பிராசஸரும் பொருத்தப்பட்டுள்ளது. இதில் உள்ள 8 மெகா பிக்ஸல் கேமரா அழகான புகைப்படம் மற்றும் வீடியோ ரெக்கார்டிங் வசதியினையும் பெறலாம்.

மேல் கூறப்பட்டுள்ள ஜிஃபைவ் ஸ்மார்ட்போன்களையும்விட ஜி-95 ஸ்மார்ட்போன் 5.3 அகன்ற திரையினை கொண்டது. இந்த திரையின் மூலம் 480 X 800 பிக்ஸல் திரை துல்லியத்தினை பெறலாம். ஆனால் இந்த ஸ்மார்ட்போன் அகன்ற திரையினை கொண்டிருந்தாலும், இதன் துல்லியம் இன்னும் கொஞ்சம் அதிகாமானதாக இருந்திருக்கலாம் என்று தோன்றுகிறது.

ஜி-95 ஆன்ட்ராய்டு 4.0 ஐஸ் கிரீம் சான்ட்விச் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை கொண்ட இந்த ஸ்மார்ட்போன், 8 மெகா பிக்ஸில் அட்டகாசமான கேமராவினையும் வழங்கும். ஜி-3டி ஸ்மார்ட்போன் என்ற இன்னொரு புதிய ஸ்மார்ட்போனையும் ஜிஃபைவ் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

ஜி-3டி ஸ்மார்ட்போன் 4.3 இஞ்ச் திரை வசதி கொண்ட இந்த ஸ்மார்ட்போனும் ஐஸ் கிரீம் சான்ட்விச் இயங்குதளம் கொண்டது தான். ஆனால் இதில் இன்னும் ஒரு கூடுதல் வசதி என்வென்றால், இந்த ஸ்மார்ட்போன் 3டி தொழில் நுட்பத்துக்கும் சப்போர்ட் செய்யும்.

ஏ-86 ஸ்மார்ட்போன் ரூ. 7,999 விலை கொண்டதாகவும், ஐ-88 + ஸ்மார்ட்போன் ரூ. 8899 விலையயும் கொண்டது. ஜி-95 ஸ்மார்ட்போன் ரூ. 9,499 விலையிலும், ஜி-3டி ஸ்மார்ட்போன் ரூ. 11,799 விலையிலும் கிடைக்கும். இங்கு கொடுக்கப்பட்டுள்ள 5 ஸ்மார்ட்போன்களுமே தொழில் நுட்பத்தில் மட்டும் அல்லாமல் விலையிலும் வாடிக்கையாளர்களை எளிதாக கவரும் என்று தோன்றுகிறது.

Story first published:  Wednesday, July 18, 2012, 11:24 [IST]
கருத்தை எழுதுங்கள்
Click here to type in Tamil

Also Read

Opinion Poll