எதிர்காலத்தில் வரவுள்ள ஸ்மார்ட்போனின் 10 ஆச்சரியத்தக்க டெக்னாலஜிகள்ல்

செல்போன் என்பது மனித வாழ்க்கைக்கு இன்றியமையாத ஒன்றாகிவிட்ட நிலையில் கடந்த பத்து வருடங்களுக்கு முன் இருந்த செல்போன்களுக்கும் தற்போது உள்ள ஸ்மார்ட்போன்களுக்கும் மிகுந்த வித்தியாசங்கள் உள்ளன.

By Siva
|

செல்போன் என்பது மனித வாழ்க்கைக்கு இன்றியமையாத ஒன்றாகிவிட்ட நிலையில் கடந்த பத்து வருடங்களுக்கு முன் இருந்த செல்போன்களுக்கும் தற்போது உள்ள ஸ்மார்ட்போன்களுக்கும் மிகுந்த வித்தியாசங்கள் உள்ளன.

எதிர்காலத்தில் வரவுள்ள ஸ்மார்ட்போனின் 10 ஆச்சரியத்தக்க டெக்னாலஜிகள்ல்

கடந்த சில வருடங்களுக்கு முன்னர் பேசிக் மாடல்கள் மட்டுமே இருந்த நிலையில் தற்போது இண்டர்நெட், கேம்ஸ் உள்பட பல வசதிகள் கொண்ட ஸ்மார்ட்போன்கள், ஐபோன்கள் வந்துவிட்டன. மேலும் இது ஒரு தொடக்கமே.

சாம்சங் வடிவமைப்பை 'ஈ அடிச்சான் காப்பி' அடிக்கும் ஆப்பிள்.!?

இன்னும் வருங்காலங்களில் நாம் கற்பனை செய்து கூட பார்த்திராத ஸ்மார்ட்போன்கள் வெளிவர வாய்ப்பு உள்ளது. 2017ஆம் ஆண்டில் பெரிய மாற்றங்கள் கொண்ட ஸ்மார்ட்போன் வர வாய்ப்பில்லை என்றாலும் 2010ஆம் ஆண்டு அல்லது அதற்கு பின்னர் வரவிருக்கும் செல்போன்கள் நிச்சயம் ஸ்மார்ட்போன் சந்தையை பிரமிக்க வைக்கும் என்று கூறப்படுகிறது.

பிஎஸ்என்எல் ரூ.99/-, 149/- மற்றும் ரூ.339/- பேக் : ஏர்டெல், ஜியோவிற்கு சரியான போட்டி.!

வித்தியாசமான டிசைன்கள், கற்பனைக்கும் எட்டாத வசதிகள், சார்ஜ் செய்வதில் புதுமைகள் ஆகியவைதான் எதிர்கால செல்போன்கள். இதுகுறித்து தற்போது விரிவாக பார்ப்போம்

லித்தியம்-ஏர் பேட்டரிகள்

லித்தியம்-ஏர் பேட்டரிகள்

வருங்காலத்தில் தற்போது உள்ளது போல தினமும் சார்ஜ் செய்ய வேண்டிய நிலை ஏற்படாது. ஏனெனில் லித்தியாம் ஏர் ஆக்சிஜன் செல்ஸ் என்று கூறப்படும் லித்தியம் ஏர் பேட்டர்கள் வரவுள்ளன. இந்த பேட்டரிகளை ஸ்மார்ட்போன்களில் பயன்படுத்தினால் தற்போதுள்ள பேட்டரிகளின் சக்தியை விட பத்து மடங்கு அதிகளவு இருக்கும். எனவே மாதம் இரண்டு முறை சார்ஜ் செய்தால் போதுமானதாக இருக்கும்,

மோஷன் சார்ஜிங்

மோஷன் சார்ஜிங்

இப்போது சார்ஜ் செய்ய வேண்டுமானால் ஒரு இடத்தில் பிளக் பாயிண்டை பார்த்து சார்ஜ் ஆகும் வரை பகக்த்திலேயே உட்கார்ந்திருக்க வேண்டும். ஆனால் வரும் காலத்தில் நடந்து கொண்டோ அல்லது ஓடிக்கொண்டோ சார்ஜ் செய்யலாம். தற்போது ஆப்பிள் வாட்சில் இதுபோன்று உள்ளது. இதேபோல் கையில் கட்டிக்கொண்டு ஓடினாலே போதும் தானாகவே சார்ஜ் செய்யும் முறை விரைவில் வரவுள்ளது.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

இந்த முறையிலும் பேட்டரிகள் வருவதற்கு வாய்ப்பு

இந்த முறையிலும் பேட்டரிகள் வருவதற்கு வாய்ப்பு

நாம் தற்போது பயன்படுத்தும் எலக்ட்ரானிக் வாட்ச், கால்குலேட்டரில் உபயோகிப்பது போல தனியாக பேட்டரியும் பயன்படுத்தும் முறை வெகுதூரத்தில் இல்லை. செல்போன்களுக்கு என தனியாக சின்ன பேட்டரிகள் பயன்படுத்த வாய்ப்பு உள்ளது. இது சோதனை முறையில் தற்போது செய்து பார்க்கப்பட்டு வருகிறது. இந்த வழிமுறை வெற்றி பெற்றால் இனி சார்ஜ் செய்ய வேண்டிய நிலை ஏற்படாது. அவ்வப்போது யூஸ் அண்ட் த்ரோ பேட்டரியை வாங்கி உபயோகித்து கொள்ளலாம்.

வளைந்த டிசைனில் போன்

வளைந்த டிசைனில் போன்

ஆப்பிள் ஐபோனின் அடுத்த தலைமுறை போன்களில் நிச்சயம் வளைந்த டிசைன் போனாகத்தான் இருக்கும் என்று எத்ரிபார்க்கப்படுகிறது. ஏற்கனவே சாம்சங் கேலக்ஸி S6 மற்றும் S7 மாடல்களில் வளைந்த டிஸ்ப்ளே வந்துவிட்ட நிலையில் வெகுவிரைவில் வளைந்த டிசைனிலும் ஸ்மார்போன்கள் வந்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை

பெண்டிங் செய்யும் வகையில் ஐபோன்

பெண்டிங் செய்யும் வகையில் ஐபோன்

பிளக்ஸபிள் என்று சொல்லப்படும் பெண்ட் செய்யும் வகையிலான போன் மாடலை ஆப்பிள் நிறுவனம் சோதனை செய்து வருகிறது. இவ்வாறு பெண்ட் செய்யும் வகையில் ஆப்பிள் நிறுவனத்தின் புதிய மாடல் ஐபோன் வெகுவிரைவில் வெளிவரவுள்ளதால் மற்ற நிறுவனங்களும் இதேபோன்ற மாடல்களை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கிராபேன் போன்கள்

கிராபேன் போன்கள்

பென்சில் உள்பட ஒருசில பொருட்களில் கிராபைட் என்ற பொருள் பயன்படுத்தப்பட்டிருப்பது உங்களுக்கு தெரிந்திருக்கும். இதேபோல் கிராபேன் என்ற ஒரே ஒரு அணுவை கொண்டு ஸ்மார்ட்போனின் உள்பாகங்கள் தயாரிக்கப்பட உள்ளன. இந்த வழிமுறை வெற்றி பெற்றால் ஸ்மார்ட்போன் அகலம் மிகவும் குறைந்துவிடும். மிக மெல்லிய ஸ்மார்ட்போன்களை நாம் பயன்படுத்தும் காலம் வெகுதூரத்தில் இல்லை.

மனிதனின் தலைமுடியை விட மில்லியன் மடங்கு சிறியதான இந்த கிராபைன் மூலம் ஹார்டுவேர் மற்றும் எலக்ட்ரிக்கல் பொருட்கள் செய்யப்படும் காலம் வந்துவிட்டால் மிகச்சிறிய சைஸில் ஸ்மார்ட்போன் செயல்பட தொடங்கிவிடும். அதுமட்டுமின்றி சோலார் செல் பயன்படுத்தும் ஸ்மார்ட்போன்களும் இதில் செய்யலாம்

முடிவில்லா டிஸ்ப்ளே

முடிவில்லா டிஸ்ப்ளே

எட்ஜ்லெஸ் டிஸ்ப்ளே கொண்ட ஸ்மார்ட்போன்கள் மற்றும் ஐபோன்கள் குறித்த முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. பார்ப்பதற்கு மிக அழகாகவும் வித்தியாசமாகவும் இருக்கும் இந்த எட்ஜ்லெஸ் டிஸ்ப்ளே மார்க்கெட்டுக்கு வந்துவிட்டால் தற்போதுள்ள முக்கிய மாடல்களும் காலாவதி ஆகிவிடும் என்பது உண்மை

3D டிஸ்ப்ளே

3D டிஸ்ப்ளே

அனைவரும் எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கும் டிஸ்ப்ளேக்களில் ஒன்று 3D டிஸ்ப்ளே. இதுவரை நாம் 3D அனுபவத்தை திரையரங்குகளில் மட்டுமே பார்த்திருக்கின்றோம். ஒருசிலர் மட்டுமே 3D தொலைக்காட்சியை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் 3D டிஸ்ப்ளே கொண்ட செல்போன் வந்துவிட்டால் ஒவ்வொருவரும் 3D விஷுவலை பார்த்து மகிழலாம்.

பெஸல் லெஸ் டிசைன்

பெஸல் லெஸ் டிசைன்

ஏற்கனவே பெஸல் லெஸ் டிசைன் கொண்ட போன்களான நூபியா ZT மாடல் உள்பட ஒருசில மாடல்கள் வந்துவிட்ட நிலையில் இனி எதிர்காலத்தில் கிட்டத்தட்ட அனைத்து போன்களும் பெஸல் லெஸ் டிசைன்களாக வர வாய்ப்பு உள்ளது.

கலர் பிரிவுகள்

கலர் பிரிவுகள்

தற்போது உள்ள மாடல்களிலேயே தெளிவான இமேஜ் கொண்ட கேமிராக்கள் வந்துவிட்ட நிலையில் எதிர்காலத்தில் லைட் ஸ்பிளிட்டர் என்று கூறப்படும் கலர் பிரிவுகள் கொண்ட கேமிராக்கள் வரவுள்ளது. இதில் சிகப்பு, பச்சை மற்றும் புளு கலர்கள் கொண்ட கியூப் இருக்கும் என்பதால் இந்த வசதி உள்ள ஸ்மார்ட்போனால் எடுக்கப்படும் புகைப்படங்கள் மிக துல்லியமாக இருக்கும். குறிப்பாக இரவில் எடுக்கப்படும் புகைப்படங்களை பார்க்கும்போது நமக்கு வித்தியாசமான உணர்வுகள் ஏற்படும்.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

Best Mobiles in India

English summary
In future, it is known that the smartphones will arrive with a slew of new features. Going by the speculations, we have compiled a list of amazing future technologies that the iPhones might arrive with. Take a look!

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X