மிக விரைவில் இந்தியாவில் அறிமுகமாகவுள்ள நூபியாவின் பெஸல் லெஸ் ஸ்மார்ட்போனின் சிறப்பு அம்சங்கள்

Written By:

ஸ்மார்ட்போன் தொழில்நுட்பத்திற்கு 2016ஆம் ஆண்டு ஒரு சிறந்த ஆண்டு என்றே கூறலாம். வாடிக்கையாளர்களை கவரும் பலவித புதுப்புது மாடல்கள் வெளிவந்து வெற்றியை பெற்றது.

மிக விரைவில் இந்தியாவில் அறிமுகமாகவுள்ள நூபியாவின் பெஸல் லெஸ் ஸ்மார்ட்

அந்த வகையில் ஸ்மார்ட்போனில் ஃபிரேம் இல்லாத ஸ்மார்ட்போன் வெளிவரும் ஆண்டாகவும் இது அமைந்துள்ளது. இதை ஆங்கிலத்தில் Bezel less என்று கூறுவதுண்டு.

அட.. ஜியோஃபை வாங்குனா, இவ்வளவு சலுகைகளா.??

ஏற்கனவே சியாமி நிறுவனத்தின் மி மிக்ஸ், என்ற சீன நிறுவனத்தின் மாடலில் பெஸல் லெஸ் டிஸ்ப்ளேவுடன் வெளிவந்தது. இந்த மாடல்களுக்கு வாடிக்கையாளர்கள் நல்ல வரவேற்பு அளித்ததை அடுத்து ZTE கார்ப்பரேஷன் என்ற சீன நிறுவனம் புதிய நூபியா பெஸல் லெஸ் மாடல் ஒன்றை இந்தியாவில் வெளியிட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

வாட்ஸ்ஆப் வீடியோ கால் செஞ்சீங்களே, அதுல இதெல்லாம் செஞ்சீங்களா.?

பிரேம் இல்லாத இந்த நூபியா புதிய மாடலில் என்னென்ன சிறப்பு அம்சங்கள் உள்ளது என்பதை தற்போது பார்ப்போம்

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

முதல் சிறப்பு அம்சம் பெஸல் லெஸ் டிஸ்ப்ளேதான்

மற்ற எட்ஜ் இல்லாத பெஸல் லெஸ் மாடல்களை விட இந்த நூபியா ஸ்மார்ட்போனில் வித்தியாசமான டிஸ்ப்ளே உருவாக்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் இந்த டிஸ்ப்ளே குறித்து இப்போது விபரமாக விவரிக்க முடியாத நிலை இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இந்த போன் இந்தியாவில் வெளிவந்தால் கண்டிப்பாக சியாமியின் மி மிக்ஸ் மாடலுக்கு சரியான போட்டியாக இருக்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

ஃபிரேம் ஊடுருவும் தொழில்நுட்பம் (Frame Interactive Technology )

நூபியா மாடலின் மற்றொரு சிறப்பு அம்சமாக ஃபிரேம் ஊடுருவும் தொழில்நுட்பம் இதில் அமைந்துள்ளதாகவும், இதன் காரணமாக இடது மற்றும் வலது ஓர பிரேம்களை அழுத்துவதன் மூலம் பல ஆப்சன்கள் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது. இந்த டெக்னாலஜி ஏற்கனவே நூபியா Z9 மாடலில் உள்ளது என்பது அந்த ஸ்மார்ட்போனை உபயோகித்தவர்களுக்கு தெரியும்.

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

கேமிராவின் சிறப்பு அம்சம் என்ன?

சோனி IMX298 சென்சார் அடங்கிய 16 எம்பி பின் கேமிரா இந்த மாடலில் இருப்பதாகவும், இதில் உள்ள சென்சார் மூன்று ஃபோகஸ் மற்றும் நான்கு ஷட்டர் மோட்-ஐ கொண்டதாக இருப்பதாகவும், இதன் காரணமாக உயர் தொழில்நுட்பத்தில் தயாரான புரபொசனல் கேமிராவுக்கு இணையாக இதில் எடுக்கப்படும் புகைப்படம் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. செல்பி கேமிரா குறித்து இதுவரை எவ்வித அதிகாரபூர்வ தகவல்களும் இல்லை என்றாலும் 8 எம்பி செல்பி கேமிரா இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சரி, சாப்ட்வேரில் என்ன என்ன உள்ளது?

இந்த நூபியா புதிய பெஸ்ல லெஸ் மாடல் ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்ட் 6.0 மற்றும் நூபியா UI4.0 அமைந்துள்ளதாக கூறப்படுகிறது

பிராஸசர் எப்படி இருக்குது?

ஸ்னாப்டிராகன் 821 CPU பிராஸசர் மற்றும் 6 ஜிபி ரேம் ஆகிய பிராஸசரின் முக்கிய அம்சம் ஆகும். மேலும் ஸ்னாப்டிராகன் 820 பிராஸசரில் 4/6 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி இண்டர்னல் ஸ்டோரேஜிலும் இதே மாடல் வெளிவரவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்English summary
Find out what Nubia has to offer with its Bezel-less smartphone
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்