Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English हिन्दी ಕನ್ನಡ മലയാളം తెలుగు
 
Share This Story

ஐஓஎஸ் 6 மற்றும் ஆன்ட்ராய்டு 4.1 இயங்குதளங்கள் ஒரு ஒப்பீடு!

Posted by:
Updated: Wednesday, March 20, 2013, 16:01 [IST]

நாம் பயன்படுத்தும் செல்போன்களின் அடிப்படையாக இருந்து மொத்தத்தையும் செயல்படவைப்பது, இயங்குதளங்களே! ஸ்மார்ட்போன்கள் தான் என்றில்லை சாதாரண போன்களில்கூட இயங்குதளங்கள் இருக்கும். இவை மொபைல் போன்கள் தயாரிக்கும் நிறுவனத்தைப் பொறுத்தது.

ஆனால் தற்பொழுதுள்ள நிலையில், கூகுள் வெளியிட்ட ஆன்ட்ராய்டு இயங்குதளத்தையே பல்வேறு செல்போன் தயாரிப்பு நிறுவனங்கள் பயன்படுத்துகின்றன. இதற்கு காரணம், ஆன்ட்ராய்டு இலவசமாக கிடைக்கிறது மற்றும் வேகமான செயல்பாடு கொண்டது என்பதுதான்.

ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன் தயாரிப்புகளுக்கு ஐஓஎஸ் என்ற இயங்குதளத்தை பயன்படுத்தும். இது ஆப்பிள் நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்டது. இங்கே ஐஓஎஸ் 6 மற்றும் ஆன்ட்ராய்டு 4.1 ஆகிய இரு இயங்குதளங்களுக்கான ஒரு ஒப்பீடு தரப்பட்டுள்ளது.

உலகின் விலையுயர்ந்த செல்போன்கள் இவைதான்!

ஆன்ட்ராய்டு 4.1

ஆன்ட்ராய்டு இயங்குதளமானது கூகுள் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது என்பதும் இது இலவசமாக கிடைக்கும் என்பதும் அனைவரும் அறிந்ததே. இந்த ஆன்ட்ராய்டு இயங்குதளம் பல பதிப்புகளை கொண்டது.

ஒவ்வொன்றும் ஒவ்வொரு பெயருடன் வருகிறது. உதாரணத்திற்கு, ஜிங்கர் பிரெட், ஜெல்லிபீன், ஐஸ்கிரீம் சாண்ட்விட்ச். இதில் நாம் பார்க்கவிருப்பது ஆன்ட்ராய்டு ஜெல்லிபீனின் 4.1 பதிப்பைப் பற்றியது.

 

ஆன்ட்ராய்டு 4.1

இந்த ஆன்ட்ராய்டு ஜெல்லிபீன் 4.1 என்ற இயங்குதளமானது பின்வரும் சிறப்புகளை தன்னகத்தே கொண்டது..

  • மிகவும் வேகமானது,
  • கூகுள் தேடுபொறியை எளிதில் பயன்படுத்தலாம்.
  • பயன்படுத்துவதற்கு எளிதானது,
  • இதில் கிபோர்ட் தன்மை சிறப்பாக இருக்கும்,

 

ஆன்ட்ராய்டு 4.1

மேலும் இதில் பல்வேறு வகையான புதிய ஆன்ட்ராய்டு அப்ளிகேசன்கள் இடம்பெற்றுள்ளது. முகப்புத்திரை பல மாற்றங்களுக்கு உற்படுத்தப்பட்டு, அழகாகவும் சிறப்பாகவும் இருக்கிறது. புதிய எழுத்துருக்களை கொண்டது. கூகுளின் கிளவ்ட் வசதியை பெறலாம்.

ஐஓஎஸ் 6

ஆப்பிள் வழங்கும் ஐஓஎஸ் 6 இயங்குதளமானது ஐபோன்களில் பயன்படுத்தப்படும் ஒன்று. மேலும் ஐபேட், ஐபாட் போன்ற சாதனங்களிலும் இந்த இயங்குதளம் உபயோகப்படுத்தப்படுகிறது. இந்த இயங்குதளத்திற்கும் பதிப்பு எண்கள் உள்ளது. நாம் பார்க்கவிருப்பது ஐஓஎஸ் 6க்கான தகவல்கள்.

ஐஓஎஸ் 6

ஐஓஎஸ் 6 இயங்குதளத்தின் சிறப்புகள் கீழே!

மேப்களை 3டி என்ற முறையில் பார்க்கலாம்,
ஃபேஸ்புக் பயன்படுத்துவது மிகவும் சுலபமானது.
போட்டோக்களை ஷேர் செய்வது சுலபமானது,
ஈமெயில் பயன்பாட்டில் சிறப்பான செயல்பாடு.

 

ஐஓஎஸ் 6

மேலும் ஐஓஎஸ் 6 ஆனது,

இது மிக வேகமான செயல்பாடு கொண்டது,
சஃபாரி உலவியை கொண்டது,
பாதுகாப்பான பயன்பாட்டிற்கு உதவுகிறது.
மேலும் பல சிறப்பம்சங்களை கொண்டது.

ஆன்ட்ராய்டு 4.1 இயங்குதளம் மற்றும் ஐஓஎஸ் 6 இவற்றில் கூகுளின் ஆன்ட்ராய்டே சிறப்பானதாகும். ஏனெனில் இலவசம் மற்றும் விலை குறைந்த போன்களில் கூட கிடைப்பதால் அனைவராலும் பயன்படுத்த முடியும்.

 

Story first published:  Wednesday, March 20, 2013, 16:00 [IST]
கருத்தை எழுதுங்கள்
Click here to type in Tamil

Also Read

Opinion Poll