நோக்கியா 3310 இந்த முறையாவது வருமா? அல்லது 2014 போல் ஆகுமா?

வருமா? வராதா இந்த நோக்கியா 3310 மாடல்?

By Siva
|

இந்தியா உள்பட மொபைல் போன்களை மக்களுக்கு அறிமுகம் செய்ததே நோக்கியா நிறுவனம் என்று கூறலாம். ஆரம்பகாலத்தில் பலவித மாடல்களில் வெளிவந்து கொண்டிருந்த நோக்கியா, பின்னர் புதிய நிறுவனங்களின் போட்டிகள், மற்றும் ஆண்ட்ராய்டுக்கு பதிலாக விண்டோஸ் ஓஎஸ் தேர்வு ஆகியவை அந்த நிறுவனத்தை பாதாளத்திற்கு தள்ளிவிட்டது.

நோக்கியா 3310 இந்த முறையாவது வருமா? அல்லது 2014 போல் ஆகுமா?

ஆனால் எந்த அளவுக்கு பாதாளத்திற்கு தள்ளப்பட்டதோ அதே அளவுக்கு பீனிக்ஸ் பறவை போல் புத்துணர்ச்சியுடன் தற்போது மீண்டும் சந்தையில் போட்டி போட வந்துள்ளது. ஆம் 2017 MWC தொழில்நுட்ப கண்காட்சியில் தனது புதிய தயாரிப்புகளை வெளியிடும் அறிவிப்புகள் மூலம் மீண்டும் இழந்த பெயரை நோக்கியா மீட்டுள்ளது எனலாம்

அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கும் நோக்கியா 8 மாடல் மிக விரைவில் அறிவிக்கப்படும் நிலை உள்ளது. அதிவிரைவில் ஒரு பிரமாண்டமான நிகழ்ச்சியில் இந்த போனை நோக்கியா அறிமுகம் செய்ய உள்ளது.

நோக்கியா 3310 இந்த முறையாவது வருமா? அல்லது 2014 போல் ஆகுமா?

இந்நிலையில் நோக்கியாவின் மலரும் நினைவுகளில் மாடல்களில் ஒன்றான 3310 மீண்டும் புதுவடிவம் பெற்று சந்தைக்கு வரவுள்ளது குறித்து பார்ப்போம்

ரஜினியின் 'பாட்ஷா' போன்ற திரைப்படங்கள் டிஜிட்டல் புத்துயிர் பெற்று வெளிவருவது போல கடந்த 2000ஆம் ஆண்டில் மக்களின் மனதை கவர்ந்த நோக்கியா 3310 மாடல் போன் தற்போதைய ஜெனரேஷன் மக்களுக்கு ஏற்றாற்போல் புதுவடிவம் பெற்றுள்ளது. ஏற்கனவே இந்த மாடல் குறித்த தகவல்களை நாம் பார்த்துள்ளோம் என்பது குறிப்பிடத்தக்கது.

சிறப்பு.. அதுக்குள்ள அடுத்த வாட்ஸ்ஆப் அப்டேட்.?!

கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் அதாவது 2014ஆம் ஆண்டு ஏப்ரல் 1 அன்று நோக்கியா 3310 மாடலின் புதிய வடிவம் வெளிவரவுள்ளதாக அறிவித்திருந்தது. விண்டோஸ் ஆபரேட்டிங் சிஸ்டம், 41MP பியூர்வியூ கேமிரா உள்பட பல சிறப்பு அம்சங்களுடன் இந்த மாடலை வெளியிட நோக்கியா திட்டமிட்டதாம்.

மேலும் இந்த புதிய மாடலில் WXGA டிஸ்ப்ளே, 1.5 GHz டூயல்கோர் சிப்செட், 2GB ரேம், 32 GB இண்டர்னல் ஸ்டோரேஜ் மற்றும் 3G சப்போர்ட், வைபை புளூடூத் ஆகிய அனைத்து அம்சங்களும் இந்த நோக்கியா 3310 மாடலில் இருக்கும் என்று செய்திகள் வெளிவந்தது.

ஆனால் நடந்தது என்ன? இந்த மாடல் ஏப்ரல் 1ஆம் தேதி வெளிவரும் என மூன்று வருடங்களுக்கு அனைவரும் காத்திருக்க பின்னர் அது ஏப்ரல் 1, முட்டாள் தின அறிவிப்பு என்று பின்னர் தெரிய வந்தது. இந்நிலையில் ஏப்ரல் மாதம் நெருங்கி வரும் இந்த வருடமும் இதே போன்ற ஒரு அறிவிப்பு வெளிவந்து கொண்டிருக்கின்றது.

இந்த முறையாவது உண்மையிலேயே நோக்கியா 3310 வெளிவருமா? அல்லது இதுவும் முட்டாள்கள் தின அறிவிப்பாகுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

Best Mobiles in India

English summary
What if we say yes? What if Nokia had actually planned to relaunch the Nokia 3310 back in 2014? Don"t believe us? Keep reading to find it out for yourselves!

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X