ரூ.5,999/-க்கு 1 ஆண்டு இலவச இண்டர்நெட் உடன் 3ஜி6 ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

நம்பி வாங்கலாமா.? பிற ஸ்மார்ட்போன்களுடன் ஒப்பிடுகையில் இக்கருவியின் அம்சங்கள் எப்படி.?

|

டேட்டாவிண்ட் நிறுவனம் இந்தியாவில் அதன் புதிய கருவியான மோர்ஜிமேக்ஸ் 3ஜி6 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய அக்கருவியின் ஒரு மிகப்பெரிய சிறப்பம்சமாக ஒரு ஆண்டு இலவச இண்டர்நெட் வசதியுடன் உடன் இக்கருவி வருகிறது என்பது தான்.

இந்த நிறுவனம் அதன் ஊடக நுகர்வை ஊக்குவிக்கும் வண்ணம் இந்த புதிய கையடக்க கருவியை ரூ.5,999/- என்ற விலை நிர்ணயத்தில் வெளியிடுகிறது. இந்த கைப்பேசிகளின் கிடைக்கும் விவரங்கள் வெளியிடப்படவில்லை என்றாலும் கூட இக்கருவி சார்ந்த அம்சங்கள் வெளியாகியுள்ளன.

6 அங்குல திரை

6 அங்குல திரை

டேட்டாவிண்ட் மோர்ஜிமேக்ஸ் 3ஜி6 கருவியை பொறுத்தமட்டில் திரை தீர்மானம் பற்றிய எந்த குறிப்பும் இல்லை என்றாலும் ஒரு 6 அங்குல காட்சி இடம்பெறுகிறது. இந்த 6 அங்குல திரையானது ரூ.5,999/- என்ற விளையாடு ஒப்பிடும்போது எந்த சந்தேகமும் இன்றி சாதனத்தின் சிறப்பம்சம் என்றே கூறலாம்.

செயலி

செயலி

உடன் 1ஜிபி ரேம் இணைந்த 1.3ஜிகாஹெர்ட்ஸ் க்வாட்-கோர் செயலி மூலம் இயக்கப்படுகிறது. மற்றும் மைக்ரோஎஸ்டி அட்டை வழியாக விரிவாக்க ஆதரவு கொண்ட 8ஜிபி உள்ளடக்கிய சேமிப்பு கொண்டு வருகிறது.

இணைப்பு விருப்பங்கள்

இணைப்பு விருப்பங்கள்

ஜிபிஆர்எஸ் / எட்ஜ், 3ஜி, ப்ளூடூத், வைஃபை மற்றும் மைக்ரோ யூஎஸ்பி ஆகியவைகள் அடங்கும். இந்த கருவியின் பலவீனமாக 4ஜி மற்றும் வோல்ட் ஆதரவு இல்லை என்பதேயாகும்.

மெகாபிக்சல்

மெகாபிக்சல்

இரட்டை சிம் ஆதரவு கொண்ட இக்கருவியின் கேமரா துறையை பொறுத்தம்மட்டில் 8 மெகாபிக்சல் பின்புற கேமரா மற்றும் ஒரு 2 மெகாபிக்சல் முன்பக்க கேமரா உள்ளது. நிறுவனம் இதன் பேட்டரி திறன் மற்றும் இயங்குதளம் (ஆண்ட்ராய்டு பதிப்பு) சார்ந்த தகவலை வெளியிடப்படவில்லை.

ரிலையன்ஸ்

ரிலையன்ஸ்

இந்த கனடிய நிறுவனம் ரிலையன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து 12 மாதங்களுக்கான இலவச இணைய வழங்கலை பயனர்களுக்கு வழங்கும். இந்த இலவச இணைய அணுகல் மூலம் நீங்கள் உங்கள் கைபேசியில் இயல்புநிலை ப்ரவுஸர் வழியாக மட்டுமே உலாவ இயலும் என்பது குறிப்பிடத்தக்கது.

உலாவி வழியாக

உலாவி வழியாக

நிறுவனத்தின் படி பயனர்கள் எந்த விதமான இண்டர்நெட் ரீசார்ஜும் செய்ய வேண்டாம். ஸ்மார்ட்போனின் யூபிசர்பர் (UbiSurfer) உலாவி வழியாக இலவச வரம்பற்ற இணைய உலாவுதலை ஒரு ஆண்டுக்கு பெறலாம். அதனை கொண்டு ஆடியோ / வீடியோ ஸ்ட்ரீமிங் அல்லது லோக்கல் டவுண்லோட் ஆகியவைகளை நிகழ்த்த இயலாது என்பது குறிப்பிடத்தக்கது.

நேரடி போட்டி

நேரடி போட்டி

டேட்டாவிண்ட் மோர்ஜிமேக்ஸ் 3ஜி6 கருவியானது மிகவும் பிரபலமான சியோமி ரெட்மீ வரிசையில் வெளியாகியுள்ள புதிய கருவியான ரெட்மீ 4ஏ கருவிக்கு நேரடி போட்டியாக (இரண்டும் ஒரே விலை) இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.

மேலும் படிக்க

மேலும் படிக்க

ரூ.5,999/-க்கு இதைவிட வேறென்ன அம்சங்கள் வேண்டும்.?!

Best Mobiles in India

Read more about:
English summary
DataWind MoreGMax 3G6 Smartphone With 1-Year Free Internet Launched at Rs 5,999. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X