சியாமி நிறுவனத்தின் அசத்தலான இரண்டு வகை மி-நோட் வகைகள்

By Super Admin
|

ஸ்மார்ட்போன் வர்த்தக உலகில் இருக்கும் கடும் போட்டியை சமாளிக்கும் வகையில் சமீபத்தில் இந்தியாவிலும் அறிமுகமான சீனாவின் சியாமி (Xiami) நிறுவனம் அவ்வப்போது புதுப்புது மாடல்களை அறிமுகப்படுத்தி வாடிக்கையாளர்களை அசத்தி வரும் நிலையில் விரைவில் ரெட்மி 4 மற்றும் மி-நோட் 2 ஆகிய இருவகை சாதனங்களை அறிமுகப்படுத்தவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

சியாமி நிறுவனத்தின் அசத்தலான இரண்டு வகை மி-நோட் வகைகள்

பெரிய போன், பெரிய பீச்சர்கள் ஆனா விலை கம்மி தான்.!!

ரெட்மி 4 இம்மாதம் 25ஆம் தேதியும், மி-நோட் 2 வரும் செப்டம்பர் 5ஆம் தேதியும் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேற்கண்ட இருவகை சாதனங்களும் வெளிவருவதற்கு முன்பே அதில் இருக்கும் புதிய வசதிகள் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகி வருகிறது. சியாமி மி-நோட் சாதனத்தில் சாம்சங் கேலக்ஸி எஸ்7 எட்ஜ்-இல் இருப்பது போன்ற ஃபிங்கர் பிரிண்ட் ஸ்கேனர் அமைந்துள்ளதாக தெரிகிறது. மேலும் இந்த சாதனங்களில் என்னென்ன வசதிகள் இருக்கின்றன என்பதை பார்ப்போமா?

இரண்டு வித்தியாசமான மாடல்களில் சியாமி மி-நோட் 2:

இரண்டு வித்தியாசமான மாடல்களில் சியாமி மி-நோட் 2:

சமீபத்தில் வெளியான தகவல்களில் இருந்து சியாமி மி-நோட் 2, சாம்சங் எஸ்7 மற்றும் எஸ் 7 எட்ஜில் உள்ளது போன்ற சிறப்பம்சங்கள் உள்ளனவாம். அதுமட்டுமிறி இது ஃபிளாட் ஸ்கிரீன் மாடலிலும், டூயல் கர்வ் டிஸ்ப்ளே மாடலிலும் என இரண்டு வகைகளில் வெளிவரவுள்ளது.

உங்கள் கைரேகையும் இதற்கு முக்கியம்:

உங்கள் கைரேகையும் இதற்கு முக்கியம்:

இந்த சாதனத்தின் அதிநவீன பாதுகாப்பிற்காக ஃபிங்கர் பிரிண்ட் ஆப்சன் இடம்பெற்றுள்ளது. இவை இந்த சாதனத்தின் பாதுகாப்பை உறுதி செய்வதோடு, சாம்சங் சாதனத்தை உபயோகிப்பது போன்ற ஒரு உணர்வை ஏற்படுத்தும்.

பத்து மடங்கு வேகம்:

பத்து மடங்கு வேகம்:

சியாமி மி-நோட் 2, அதிநவீன 'குவால்காம்'(Qualcom) என்ற அதிநவீன பிராஸசர் இணைக்கப்பட்டுள்ளது. இந்து முந்தைய மாடலை விட பத்துமடங்கு வேகமாக இயங்கும் திறன் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இரண்டு ஸ்டோரேஜ் கெப்பாசிட்டி தன்மை கொண்டது:

இரண்டு ஸ்டோரேஜ் கெப்பாசிட்டி தன்மை கொண்டது:

சியாமி மி-நோட் 2, 64ஜிபி மற்றும் 128 ஜிபி ஆகியவை கொண்ட இரண்டு ஸ்டோரேஜ் கெப்பாசிட்டி தன்மையுள்ள மாடல்களில் வெளிவரவுள்ளது. இதில் 6ஜிபி ரேம் உள்ளதால் ஸ்பீடுக்கு பஞ்சமில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 விலை மேலும் கசிந்தது

விலை மேலும் கசிந்தது

தற்போது வந்த தகவலின்படி 64ஜிபி கெப்பாசிட்டி கொண்ட சியாமி மி-நோட் 2, ரூ.25,000 ஆகவும், 128 ஜிபி கொன சியாமி மி-நோட் 2 மாடல் ரூ.28,000 ஆக இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Xiaomi Mi Note 2 has been leaked showing the dual-curved edge screen as the Samsung Galaxy S7 edge. The device seems to arrive with a flat screen version as well. Take a look at the concepts of the device that have hit the web.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X