கைரேகை ஸ்கேனர் இருந்தும் விலை குறைந்த ஸ்மார்ட்போன்கள்..!!

Written By:

ஸ்மார்ட்போன்களில் அதிக சிறபப்பம்சங்கள் தினந்தோரும் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றது. அடிப்படை தேவைகளை கடந்து இன்று பெரும்பாலான வேலைகளை ஸ்மார்ட்போன்களின் மூலம் முடிக்க முடிகின்றதே இதற்கு எடுத்துக்காட்டு.

இப்படி இருக்க சமீபத்தில் விலை உயர்ந்த கருவிகளில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் அம்சம் தான் கைரேகை ஸ்கேனர். கருவிகளுக்கு அதிக பாதுகாப்பு வழங்கும் இந்த அம்சம் விலை குறைந்த கருவிகளிலும் கிடைக்கின்றது.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

ஸ்வைப் ஃபேப்ளெட் சென்ஸ்

கைரேகை ஸ்கேனர் கொண்ட விலை குறைந்த கருவி என்ற பொருமை கொண்டிருக்கின்றது ஸ்வைப் ஃபேப்ளெட் சென்ஸ். 5.5 இன்ச் டிஸ்ப்ளே, 1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட் கோர் பிராசஸர், 1 ஜிபி ரேம் கொண்டிருப்பதோடு ஆண்ட்ராய்டு 4.4.2 கிட்காட் மூலம் இந்த கருவி இயங்குகின்றது.

கூல்பேட் நோட் 3

சீனாவின் கூல்பேட் நிறுவனம் சமீபத்தில் தான் நோட் 3 ஃபேப்ளெட் கருவியை வெளியிட்டது. ரூ.8,999க்கு கிடைக்கும் இந்த கருவியில் 5.5 இன்ச் டிஸ்ப்ளே, ஆண்ட்ராய்டு 5.1 லாலிபாப், 1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் சிப்செட் போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது.

சோலோ க்யூ2100

ரூ.9,800க்கு கிடைக்கும் இந்த கருவியில் ஆண்ட்ராய்டு கிட்காட் இயங்குதளம், 5.5 இன்ச் திரை, 1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் சிப்செட் மற்றும் 1 ஜிபி ரேம் போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.

எலிபோன் பி5000

ஹாங்-காங் சார்ந்த எலிபோன் பி5000 ஸ்மார்ட்போன் சந்தையில் ரூ.13,999க்கு கிடைப்பதோடு 1.7 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் பிராசஸர் மற்றும் 2 ஜிபி ரேம் கொண்டிருக்கின்றது.

ஐபெரி ஆக்சஸ் ப்ரைம் பி8000

5.5 இன்ச் திரை 4160 எம்ஏஎச் பேட்டரி, ஆண்ட்ராய்டு லாலிபாப் இயங்குதளம், 3 ஜிபி ரேம் கொண்டிருக்கும் இந்த கருவியின் விலை ரூ.14,999.

முகநூல்

மேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

Read more about:
English summary
Cheapest Smartphones with Fingerprint Sensors. Read More in Tamil.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்