ரூ. 7,499 க்கு 6.95 இன்ச் பேப்ளட் இந்தியாவில் வெளியானது, உங்களுக்கு தெரியுமா ?

Written By:

கடந்த ஒரு வருடத்தில் பேப்ளட்களின் விற்பனை இரு மடங்கு அதிகரித்திருக்கின்றது, இதற்கு காரணம் வாடிக்கையாளர்களை பேப்ளட்கள் கவர்ந்திருப்பது தானே தவிற வேறு காரணங்கள் இருக்க முடியாது. இதை சரியாக புரிந்துகொண்ட ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் விலை குறைந்த பேப்ளட்களை வெளியிட ஆரம்பத்து விட்டனர் என்பதோடு இந்த எண்னிக்கை இந்தியா மற்றும் சீனாவில் அதிகரித்திருக்கின்றது.

ரூ. 7,499 க்கு 6.95 இன்ச் பேப்ளட் இந்தியாவில் வெளியானது...!

அந்த வகையில் செல்கான் பேப்ளட் தயாரிப்பாளர்களில் இணைந்து XION S CT6595 பேப்ள்ட்டை வெளியிட்டது. செல்கான் வெளியிட்டதில் பெரிய போனாக இது 6.95 இன்ச் டிஸ்ப்ளே கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளதோடு இது ஐபோன் 6+ விட பெரியது என்பதும் குறிப்பிடத்தக்கது.

செல்கான் XION S CT6595 6.95 இன்ச் ஸ்கிரீன் 1.2 ஜிகாஹெர்ட்ஸ் டூயல்கோர் பிராசஸர் மற்றும் ஆன்டிராய்டு 4.4.2 கிட்காட் மூலம் இயங்குகிறது. இதோடு 1 ஜிபி ராம், 8 ஜிபி இன்டெர்னல் மெமரி மற்றும் கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது.

கேமராவை பொருத்த வரை 5 எம்பி ப்ரைமரி கேமரா மற்றும் முன்பக்க கேமரா இருப்பதோடு 2500 எம்ஏஎஹ் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. மற்ற ஆப்ஷஷன்களை பொருத்த வரை 3ஜி / 2ஜி, வைபை, ப்ளூடூத், ஜிபிஎஸ் மற்றும் டூயல் சிம் கொண்டு இயங்குகிறது.

XION S CT6595 மூலம் செல்கான் பெகிய ஸ்மார்ட்போன் மற்றும் சிறிய லகை டேப்ளட்டை தயாரித்திருப்பதோடு இதை ரூ.7,499 என்ற விலையில் அனைவரும் வாங்கும்படியான விலையை நிர்ணயத்துள்ளது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
English summary
Celkon 6.95-Inch Phablet Launched in India At Rs 7,499. Here you will find the full specifications and the price rates.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்