ஆதார் அட்டைக்கு பல்பு கொடுக்க வருகிறது ஐரிஸ் ஸ்கேனிங் மொபைல்கள்.!

ஆதார் தோல்வியை போக்க கருவிழி ஸ்கேனிங் மொபைல் உபகரணங்கள் இந்தியாவில் வருமா?

By Siva
|

ஸ்மார்ட்போன்களில் பிங்கர் பிரிண்ட் சென்சார் வைத்து பாதுகாப்பை வலுப்படுத்தியதை போலவே அடுத்த தலைமுறை ஸ்மார்ட்போனின் கண்ணின் கருவிழி மூலம் மொபைல் போனை பாதுகாக்கும் வழிமுறை வரவுள்ளது.

ஆதார் அட்டைக்கு பல்பு கொடுக்க வருகிறது ஐரிஸ் ஸ்கேனிங் மொபைல்கள்.!

இந்த கருவிழி பாதுகாப்பை மொபைல் போனுக்கு வழங்கும் நிறுவனம் தன் டெல்டா ஐடி என்ற நிறுவனம். இந்த நிறுவனம் இனி வருங்காலத்தில் ஆதார் அட்டை பதிவுக்கான கண்ணின் கருவிழிக்கும் உதவ உள்ளது. இதனால் ஆதார் அட்டையின் தரம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்தில் தெலுங்கானா மாகாணத்தில் ஆதார் அட்டையில் பயோமெட்ரிக் பாதுகாப்பு தோல்வி அடைந்தது. இதனால் தற்போது நாடு முழுவதும் டெல்டா ஐடி நிறுவனம் ஆதார் அட்டைக்காக பணிபுரிய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதார் அட்டைக்கு பல்பு கொடுக்க வருகிறது ஐரிஸ் ஸ்கேனிங் மொபைல்கள்.!

இதுகுறித்து டெல்டா ஐடி நிறுவனத்தின் சி.இ.ஓ சலீல் பிரபாகர் கூறியபோது, 'இந்தியாவின் 'உதய்' திட்டம் உள்ப்ட உலகின் பல பயோமெட்ரிக் பாதுகாப்பு பணிகளில் கண்ணின் கருவிழி மூலம் சோதனை செய்யப்பட்டு வருகிறது. சமீபத்தில் கிடைத்த தோல்விகள் மூலம் பாடம் கற்ற நாங்கள் எதிர்காலத்தில் கருவிழி பாதுகாப்புடன் கூடிய மொபைல் போன் உற்பத்தியில் பெரும் பங்கு வகிப்போம்' என்று கூறியுள்ளார்

அனைவரின் மனதிலும் எழும் இன்னொரு கேள்வி இந்த கருவிழி பாதுகாப்புடன் கூடிய மொபைல் அதிக விலையுள்ள ஸ்மார்ட்போன்களில் மட்டுமே இருக்குமா? அல்லது பட்ஜெட் போன் வாடிக்கையாளர்களுக்கும் கிடைக்குமா? என்பதுதான். இதற்கு பதிலாக வருவது இதுதான்.

முதலில் பிங்கர் பிரிண்ட் சென்சார் என்பது உயர்வகை மொபைல் போன்களில் மட்டுமே இருந்தது. ஆனால் தற்போது ரூ.10000க்கும் குறைவான போன்களிலும் பிங்கர்பிரிண்ட் சென்சார் உள்ளது. அதைபோலவே ஆரம்பத்தில் அதிக விலையுள்ள போன்களில் மட்டுமே கருவிழி பாதுகாப்பு வந்தாலும் விரைவில் பட்ஜெட் போனிலும் வந்துவிடும் என்று கூறப்படுகிறது.

ரூ.1500/-ஐ கையில் வைத்துக்கொள்ளுங்கள் : மலிவான 4ஜி போன்கள் ரெடி.!

ஆதார் அட்டைகளுக்கு உதவக்கூடிய கருவிழி பாதுகாப்பு கருவிகள் தற்போது அதிக விலையில் உள்ளது. ஆனால் டெல்டா ஐடி இந்த செலவை மிகப்பெரிய அளவில் குறைக்கும் என கருதப்படுகிறது. கடந்த ஆண்டு மே மாதம் சாம்சங் நிறுவனம் தனது முதல் கருவிழி பாதுகாப்புடன் கூடிய டேப்ளட்டை வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த கருவிழி டெக்னாலஜி வெகுவிரைவில் மொபைல் போன்களில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. எல்.ஜி நிறுவனத்தின் அடுத்த மாடலான

எல்ஜி G6 மாடலிலும், சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்8 மாடலிலும் இந்த டெக்னாலஜி வருவதற்கு வாய்ப்பு உள்ளது.

அதேபோல் ஆதார் அட்டை உள்பட அரசு அடையாள அடையாள அட்டைகளிலும் இந்த பயோமெட்ரிக் கருவிழி படலம் டெக்னிக் வெகுவிரைவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது.

பிங்கர் பிரிண்ட் சென்சாரில் பல நெகட்டிவ் அம்சங்களை சந்தித்த நிலையில் பயோமெட்ரிக் கருவிழி படலத்தில் அந்த நெகட்டிவ் அம்சங்கள் இருக்காது என்றே எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக கருவிழி படல முறைக்கு வயது வித்தியாசம் இல்லாமல் அனைத்து வயதினர்களுக்கும் ஒரே முறையான ரிசல்ட்டை தரும் வகையும் அமையும் என்பது இதன் கூடுதல் சிறப்பு

தற்போது நம் முன் நிற்கும் ஒரே கேள்வி இந்த டெக்னாலஜியை நமது அரசு எந்த அளவுக்கு சீக்கிரம் உபயோகப்படுத்த போகின்றது என்பதுதான். இந்த டெக்னாலஜியை இந்திய அரசு உபயோகப்படுத்த தொடங்கும் நாள் வெகு தொலைவில் இல்லை என்றும் அதன் பின்னர் நாடு பயோமெட்ரிக் டெக்னாலஜியில் வல்லமை படைத்த நாடாக இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

Read more about:
English summary
Delta Id , a firm based out of California working to bring secure biometric authentication believes that iris integrated solutions can better address the Aadhaar authentication

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X