பிளாக்பெரி இசட்3 முக்கிய ஆப்ஷன்கள் மற்றும் சிறப்பம்சங்கள்

By Meganathan
|

ஒரு காலத்தில் தரமான ஸ்மார்ட் போன்களை வழங்குவதில் தனக்கென்று நிலையான பெயரை வைத்திருந்த பிளாக்பெரி நிறுவனம் ஆப்பிள் மற்றும் சாம்சங் நிறுவனங்களின் வளர்ச்சியால் சற்று பின் தங்கியிருப்பது ஒரு புறம் இருந்தாலும் கார்ப்பரேட் துறையில் மற்ற நிறுவனங்களை விட பிளாக்பெரி இன்றும் சிறந்து விளங்குவதில் சந்தேகமே இருக்க முடியாது.

பிளாக்பெரி இசட்3 முக்கிய ஆப்ஷன்கள்

கடந்த வாரம் பிளாக்பெரி நிறுவனம் இசட்3 மாடல் போன்களை இந்தியாவில் வெளியிட்டுள்ளது. சந்தைகளில் ஆன்டிராய்டு ஓஎஸ் போன்களின் தாக்கத்தை வரையறுக்க நடுத்தர ஸ்மார்ட் போனை தயாரித்துள்ளது பிளாக்பெரி நிறுவனம். பிளாக்பெரி இசட்3 நடுத்தர வகையை சேர்ந்தாலும் சந்தையில் இருக்கும் மற்ற ஆன்டிராய்டு ஸ்மார்ட் போன்களுக்கு கடும் போட்டியாக இது இருக்கும். ரூ.15,990 ரூபாய் விலையில் புது பிளாக்பெரி இசட்3 சந்தையில் கிடைக்கின்றது.

பிளாக்பெரி இசட்3 முக்கிய ஆப்ஷன்கள்

பிளாக்பெரி இசட்3 - வடிவமைப்பு, டிஸ்ப்ளே மற்றும் இயங்கு தளம்

அனைவரையும் கவர்ந்திழுக்கும் வடிவமைப்பு. பிளாக்பெரி இசட்10 மற்றும் இசட்30 மாடல்களை போன்றே இசட்3 மாடலையும் பாக்ஸ்கான் தான் தயாரித்துள்ளது. பிளாஸ்டிக் மூலம் தயாரிக்கப்பட்டாலும் சிறப்பான தோற்றம் மற்றும் உணர்வை இசட்3 நமக்கு கொடுக்கின்றது.

பிளாக்பெரி இசட்3 முக்கிய ஆப்ஷன்கள்

போனின் மேல் பகுதியில் ஸ்பீக்கர் க்ரில் மற்றும் பிளாக்பெரி லோகோவும், இடது புறத்தில் சிம் மற்றும் மைக்ரோ எஸ்டி ஸ்லாட்டும் வலது புறத்தில் பவர் மற்றும் வால்யூம் பட்டன்கள் பொருத்தப்பட்டுள்ளன.

பிளாக்பெரி இசட்3 முக்கிய ஆப்ஷன்கள்

பின்புறத்தில் டாட் அமைப்பு கச்சிதமாக பொருந்தியிருப்பதோடு, போனை கையாளும் போது நல்ல உணர்வை கொடுக்கின்றது, பேட்டரி மற்றும் பின்புறத்தை கழற்ற முடியாவிட்டாலும் இசட்3 நன்கு காட்சியளிப்பதற்கு பிளாக்பெரியை பாராட்டியே தீர வேண்டும்.

பிளாக்பெரி இசட்3 முக்கிய ஆப்ஷன்கள்

பிளாக்பெரி இசட்3 மாடலின் வடிவமைப்பு அனைவரையும் கவர்ந்தாலும் 5 இன்ச் ஸ்க்ரீன் பார்வையாக இல்லை என்று தான் கூற வேண்டும். எதிர்பார்த்தப்படி இல்லை என்றாலும் 5 இன்ச் டிஸ்ப்ளேவில் 720 பிக்சல் ரெசலியூஷனாவது கொடுக்கப்பட்டிருக்க வேண்டும் இருப்பினும் வீடியோ பார்கும் போது நன்றாக தான் இருந்தது.

பிளாக்பெரி இசட்3 பிளாக்பெரி 10.2 மொபைல் ஓஎஸ் மூலம் இயங்குகிறது. இசட்3 அன்லாக் செய்ய கீழிருந்து மேல்புறமாக இழுக்க வேண்டும்.

பிளாக்பெரி இசட்3 முக்கிய ஆப்ஷன்கள்

யுஐ ஜெஸ்ட்யூர் கொண்ட போனில் நீங்கள் ஒவ்வொரு முறை ஹோம் ஸ்கிரீனுள் செல்லும் போதும் நீங்கள் கடைசியாக பயன்படுத்திய நான்கு அப்ளிகேஷன்களை காண முடியும். புதிய பிளாக்பெரி மூலம் உங்கள் நண்பர்களுடன் புதுமையாக உரையாட முடியும்.

பிளாக்பெரி இசட்3 முக்கிய ஆப்ஷன்கள்

பிளாக்பெரி 10 ஓஎஸின் பெரிய குறைப்பாடு குறைவான அப்ளிக்ஷன்கள் தான். இந்த ஓஎஸ் மூலம் சந்தையில் பிரபலமான அப்ளிகேஷன்களை கண்டறிவது உங்களுக்கு சற்று சிரமமாகவே இருக்கும். அப்ளிகேஷன்களை விட உங்களுக்கு சில கேம்களும் கொடுக்கப்பட்டுள்ளது. தேவைப்பட்டால் பிளாக்பெரி ஆப்ஸையும் நீங்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

<center><iframe width="100%" height="360" src="//www.youtube.com/embed/L2C-9yB17xQ?feature=player_embedded" frameborder="0" allowfullscreen></iframe></center>

Best Mobiles in India

English summary
New BlackBerry Z3 Phone Hand on and First look

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X