ஆண்ட்ராய்டு துணையோடு வெளியாகியிருக்கும் ப்ளாக்பெரி.!!

Written By:

சந்தையில் மீண்டும் தன்னை நிரூபிக்கும் முயற்சியில் ப்ளாக்பெரி நிறுவனம் தீவிரம் காட்டுவதன் விளைவாக வெளியாகியிருப்பது தான் ப்ளாக்பெரி ப்ரிவ். ப்ளாக்பெரி நிறுவனத்தின் முதல் ஆண்ட்ராய்டு கருவியாக அறிவிக்கப்பட்டிருக்கும் ப்ளாக்பெரி ப்ரிவ் கருவியில் வழங்கப்பட்டிருக்கும் சிறப்பம்சங்களை தொடர்ந்து பார்ப்போம்.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

திரை

ப்ளாரக்பெரி ப்ரிவ் கருவியில் 5.4 இன்ச் டூயல் கர்வ்டு க்யூஎச்டி ஏஎம்ஓஎல்ஈடி டிஸ்ப்ளே 2560*1440 பிக்சல் ரெசல்யூஷன் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 4 கொண்டு பாதுகாக்கப்பட்டுள்ளது.

சிப்செட்

ஹார்டுவேர் அம்சங்களை பொருத்த வரை ஹெக்ஸா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 808 64-பிட் பிராசஸர் மற்றும் 600 எம்எச்இசட் அட்ரினோ 418 ஜிபியு வழங்கப்பட்டுள்ளது.

மெமரி

மெமரியை பொருத்த வரை 3ஜிபி ரேம், 32ஜிபி ரோம் மற்றும் கூடுதலாக 2000 ஜிபி வரை நீட்டிக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.

கேமரா

கேமராவை பொருத்த வரை 18 எம்பி ப்ரைமரி கேமரா, டூயல்-டோன் ப்ளாஷ், OIS, PDAF, f/2.2 6P லென்ஸ், 4கே வீடியோ வசதி, 5 எம்பி முன்பக்க கேமரா f/2.8 அப்ரேச்சர், 1.7-மைக்ரான் பிக்ஸல் வழங்கப்பட்டுள்ளது.

இயங்குதளம்

ப்ளாக்பெரி ப்ரிவ் கருவியில் முன்பு குறிப்பிடப்ப்டுள்ளதை போன்றே ஆண்ட்ராய்டு 5.1 லாலிபாப் மற்றும் ப்ளாக்பெரியின் வழக்கமான சேவைகளும் வழங்கப்படுள்ளது.

கனெக்டிவிட்டி

கனெக்டிவிட்டி ஆப்ஷன்களை பொருத்த வரை 4ஜி எல்டிஈ, வைபை 802.11 a/b/g/n/ac MIMO, ப்ளூடூத் 4.1 LE, GPS, NFC, மற்றும் யுஎஸ்பி 2.0 போன்ற கனெக்டிவிட்டி ஆப்ஷன்களோடு 3410 எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகின்றது.

விலை

இந்திய சந்தையில் ப்ளாக்பெரி ப்ரிவ் ரூ.62,990க்கு விற்பனை செய்யப்படுவதோடு, இதனை வாடிக்கையாளர்கள் அமேசான் இந்தியா மற்றும் ப்ளாக்பெரி இந்தியா ஸ்டோர்களில் ஜனவரி 30 முதல் வாங்கி கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முகநூல்

மேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம். 

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

English summary
Blackberry's First Android Smartphone Comes to India Tamil.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்