பிளாக்பெர்ரி போன் : எப்படி போனேனோ.. அப்படியே வந்துட்டேன்.!

பிளாக்பெர்ரி மெர்க்குரி என்று கூறப்படும் ஆண்ட்ராய்டு போன் தான், பிளாக்பெர்ரியின் முதல் ஆண்ட்ராய்டு போன் ஆகும்.

By Siva
|

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் பிளாக்பெர்ரி போன் வைத்திருப்பது என்பதே ஒரு பெருமையாக கருதப்பட்டது. பெரிய பெரிய தொழிலதிபர்களிடம் மட்டுமே பிளாக்பெர்ரி போன் இருந்தது. ஆனால் காலப்போக்கில் பிளாக்பெர்ரி நிறுவனத்திற்கு ஏற்பட்ட ஒருசில விஷயங்களால் திடீரென போன் தயாரிப்பையே நிறுத்திவிட்டது.

பிளாக்பெர்ரி போன் : எப்படி போனேனோ.. அப்படியே வந்துட்டேன்.!

இந்நிலையில் மீண்டும் ஒரு புதிய மாடல் மூலம் தனது முந்தைய மார்க்கெட்டை பிடிக்க முயற்சி செய்துள்ளது. இந்நிறுவனத்தின் புதிய மாடல் குறித்து கசிந்து வரும் தகவல்கள் குறிது பார்ப்போம்

ரெட்மீ நோட் 4 : ப்ளிப்கார்டில் பிரத்தியேக வெளியீடு எப்போது.!?

பிளாக்பெர்ரி மெர்க்குரி என்று கூறப்படும் ஆண்ட்ராய்டு போன் தான், பிளாக்பெர்ரியின் முதல் ஆண்ட்ராய்டு போன் ஆகும். ஆனாலும் மெரிக்குரி என்ற பெயரை பிளாக்பெர்ரி அதிகாரபூர்வமாக வெளியிடவில்லை என்றாலும் இந்த பெயர் தான் என்பதை பல தகவல்கள் உறுதி செய்கின்றன.

இந்தியாவை டிஜிட்டல் மயமாக்க 'நம்ம' சுந்தர் பிச்சையின் 8 முயற்சிகள்.!

பிளாக்பெர்ரி மாடலின் தரம், அதில் அமைந்துள்ள சிறப்புகள், விலை குறித்து பார்ப்போமா

பிளாக்பெர்ரியின் ஆஸ்தான கீபோர்டு

பிளாக்பெர்ரியின் ஆஸ்தான கீபோர்டு

மற்ற போன்களில் இருந்து பிளாக்பெர்ரி போன் வித்தியாசப்படுத்துவதே அதன் கீபோர்டுதான். இந்த புதிய மாடல் பிளாக்பெர்ரி மெர்க்குரி ஸ்மார்ட்போனிலும் அதே கீ போர்டுதான் உள்ளது. இந்த தகவலை டிசிஎல் நிறுவனத்தின் தலைவர் தனது டுவிட்டரில் உறுதி செய்துள்ளார். எனவே பிளாக்பெர்ரியின் ஆதரவாளர்களுக்கு இது ஒரு நல்ல செய்தி என்பதில் சந்தேகம் இல்லை

பிளாக்பெர்ரி மெர்க்குரியின் பிராஸசர் என்ன?

பிளாக்பெர்ரி மெர்க்குரியின் பிராஸசர் என்ன?

பிளாக்பெர்ரி மெர்க்குரி ஸ்மார்ட்போன் நிச்சயம் பிராஸசர் விஷயத்தில் நல்ல கவனத்துடன் உள்ளது. குவால்கோம் ஸ்னாப்டிராகன் 625 பிராஸசர் இந்த ஸ்மார்ட்போனில் அமைந்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளது.

இந்த பிராஸசர் தற்போது நடைமுறையில் உள்ள வெற்றிகரமான பிராஸசர் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் ஸ்மார்ட்ப்போனின் போட்டி சந்தையில் பிளாம்பெர்ரி களம் குதிக்க தகுதி பெற்றுவிட்டதாக கருதப்படுகிறது.

ஆண்ட்ராய்டு 7.0 நெளகட்

ஆண்ட்ராய்டு 7.0 நெளகட்

பிளாக்பெர்ரி மெர்க்குரி ஸ்மார்ட்போனின் அடுத்த சிறப்பு அம்சம் என்னவெனில் இந்த போன் லேட்டஸ்ட் டெக்னாலஜியான ஆண்ட்ராய்ட் 7.0 நெளகட் வகையை சேர்ந்ததாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தகவல் விரைவில் உறுதி செய்யப்பட உள்ளது.

பேட்டரியின் தரம் எப்படி இருக்கும்ன்னு தெரியுமா?

பேட்டரியின் தரம் எப்படி இருக்கும்ன்னு தெரியுமா?

பிளாக்பெர்ரியை பொருத்தவரையில் அந்த போனை கையில் எடுத்து கொண்டு மூன்று நாட்கள் கூட சார்ஜ் செய்யாமல் தாக்கு பிடிக்கும் வகையை சார்ந்தது. எனவே இந்த பிளாக்பெர்ரி மெர்க்குரி ஸ்மார்ட்போனிலும் சக்திவாய்ந்த பேட்டரியை இணைக்க பிளாக்பெர்ரி முடிவு செய்துள்ளது. இந்த போனில் 3400 mAh பேட்டரி இருக்கும் என்றும், இதனால் நல்ல சார்ஜ் திறனை கொண்டிருக்கும் என்றும் கூறப்படுகிறது.

பிங்கர்பிரிண்ட், 4.5 டிஸ்ப்ளே உள்பட பல அம்சங்கள்

பிங்கர்பிரிண்ட், 4.5 டிஸ்ப்ளே உள்பட பல அம்சங்கள்

பிளாக்பெர்ரி மெர்க்குரி ஸ்மார்ட்போன் மாடலில் 4.5 இன்ச் டிஸ்ப்ளே ஸ்க்ரீன் இருப்பதாகவும், முக்கியமாக தற்போதைய லேட்டஸ்ட் டெக்னாலஜியான பிங்கர் பிரிட்ன் சென்சார் இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் வால்யும் மற்றும் ஸ்க்ரீன்களை லாக் செய்யும் வகையில் பட்டன்களும் உள்ளது. மேலும் யூஎஸ்பி டைப் C போர்ட், இரண்டு சக்தி வாய்ந்த தரமான ஸ்பீக்கர்களும் உள்ளது.

ஸ்டோரேஜ் கெப்பாசிட்டி எப்படி?

ஸ்டோரேஜ் கெப்பாசிட்டி எப்படி?

ஒரு ஸ்மார்ட்போனுக்கு மிக முக்கியமானதாக கருதப்படும் ஸ்டோரேஜ் கெப்பாசிட்டி இந்த பிளாக்பெர்ரி மெர்க்குரி ஸ்மார்ட்போனில் 3GB ரேம் வரை இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இண்டர்னல் ஸ்டோரேஜ் ஆக 32 GB என்றும் கூறப்படுகிறது.

கேமிராவின் தரம் எப்படி இருக்கும்?

கேமிராவின் தரம் எப்படி இருக்கும்?

பிளாக்பெர்ரி மெர்க்குரி ஸ்மார்ட்போனில் 18 MP பின்கேமிரா உள்ளதாகவுமதில் LED பிளாஸ்ஹ் வசதியும் இருப்பதாகவும், மேலும் 8 MP செல்பி கேமிரா உள்ளதாகவும், செல்பி கேமிராவின் தரம் ஆச்சரியத்தக்க வகையில் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

சரி, எப்போது இந்த வரும்?

சரி, எப்போது இந்த வரும்?

இந்த பிளாக்பெர்ரி மெர்க்குரி ஸ்மார்ட்பொன் இந்த ஆண்டு பிப்ரவரியில் வெளிவரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனாலும் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவந்த பின்னரே இதுகுறித்து உறுதியாக கூற முடியும்

எல்லாம் ஓகே தலைவா, என்ன ரேட்?

எல்லாம் ஓகே தலைவா, என்ன ரேட்?

இவ்வளவு அம்சங்கள் இருந்தும் இந்த போனின் விலை என்ன? என்பதே பலரது கேள்வி. இப்போதைக்கு இதில் உள்ள சிறப்பு, மற்றும் வசதிகளை வைத்து பார்க்கும்போது இந்த பிளாக்பெர்ரி மெர்க்குரி ஸ்மார்ட்போனின் விலை $500 என்றும் இந்திய மதிப்பில் சுமார் 34000 என்றும் கூறப்படுகிறது. ஆனால் இந்தியாவில் இந்த போன் இப்போதைக்கு வெளிவர வாய்ப்பில்லை என்றே பிளாக்பெர்ரி வட்டார தகவல்கள் கூறுகின்றன.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

Best Mobiles in India

English summary
BlackBerry Mercury to launch on MWC 2017. Take a look at all the rumors till date.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X