விலை ரூ.7,000 ஆனாலும் இவைகள் தான் டாப் டக்கரு..!!

By Meganathan
|

இந்திய சந்தை விலை குறைந்த பட்ஜெட் ரக ஸ்மார்ட்போன்களுக்கு பெயர் போனது அனைவரும் அறிந்த ஒன்றே. இந்திய சந்தையில் சீன நிறுவனங்களின் ஆதிக்கம் அதிகமாக இருப்பதே இதற்கு முக்கிய காரணமாக கூற வேண்டும்.

விலை குறைவாக இருப்பதால் இதன் தரமும் குறைவாகவே இருக்கும் என்றே பெரும்பாலானோரும் நினைக்கின்றனர். ஆனால் கொடுக்கும் விலைக்கு ஏற்ற சிறப்பம்சங்கள் கொண்ட தலைசிறந்த கருவிகளும் இந்திய சந்தையில் அதிகளவில் கிடைக்கின்றன.

அந்த வகையில் ரூ.7,000 பட்ஜெட்டில் இந்தியாவில் இன்று வாங்க கூடிய தலைசிறந்த கருவிகள் எவை என்பதை ஸ்லைடர்களில் பாருங்கள்..

யு யுனிக்

யு யுனிக்

4ஜி சேவை கொண்ட மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் துணை பிரான்டு கருவி தான் யு யுனிக். 4.7 இன்ச் எச்டி ஐபிஎஸ் திரை, 1.2 ஜிகாஹெர்ட்ஸ் குவால்காம் ஸ்னாப்டிராகன் 410 குவாட்கோர் பிராசஸர், 1 ஜிபி ரேம் மற்றும் 8 ஜிபி இன்டர்னல் மெமரி இந்த கருவியின் குறிப்பிடத்தக்க சிறப்பம்சங்களாக கூற முடியும்.

இதோடு 8 எம்பி ப்ரைமரி கேமரா, 2 எம்பி முன்பக்க கேமரா மற்றும் ஆண்ட்ராய்டு லாலிபாப் 5.1 இயங்குதளம் 2000 எம்ஏஎச் பேட்டரியும் வழங்கப்பட்டுள்ளது.

லெனோவோ ஏ2010

லெனோவோ ஏ2010

4.5 இன்ச் திரை ஆண்ட்ராய்டு லாலிபாப் 5.1 இயங்குதளம், 1 ஜிகாஹெர்ட்ஸ் குவாட் கோர் பிராசஸர், 1ஜிபி ரேம், 8 ஜிபி இன்டர்னல் மெமரி வழங்கப்பட்டுள்ளதோடு 5 எம்பி ப்ரைமரி கேமரா, எல்ஈடி ப்ளாஷ், 2 எம்பி முன்பக்க கேமராவும் வழங்கப்பட்டுள்ளது.

ஹூவாய் ஹானர் பீ

ஹூவாய் ஹானர் பீ

ஹானர் பீ கருவியில் 4.5 இன்ச் எல்சிடி திரை, 1.2 ஜிகாஹெர்ட்ஸ் குவாட் கோர் பிராசஸர், 1 ஜிபி ரேம், 8 ஜிபி இன்டர்னல் மெமரி, ஆண்ட்ராய்டு கிட்காட் 4.4 இயங்குதளமும் 8 எம்பி ப்ரைமரி கேமரா, எல்ஈடி ப்ளாஷ், 2 எம்பி முன்பக்க கேமராவும் 1730 எம்ஏஎச் பேட்டரியும் வழங்கப்பட்டுள்ளது.

மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் எக்ஸ்பிரஸ் 2

மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் எக்ஸ்பிரஸ் 2

5 இன்ச் எச்டி ஐபிஎஸ் திரை, 1.4 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா கோர் பிராசஸர், 1 ஜிபி ரேம், 8 ஜிபி இன்டர்னல் மெமரியும், 13 எம்பி ப்ரைமரி கேமரா 2 எம்பி முன்பக்க கேமராவும் வழங்கப்பட்டுள்ளது.

மோட்டோரோலா மோட்டோ ஈ (ஜென் 2)

மோட்டோரோலா மோட்டோ ஈ (ஜென் 2)

4.5 இன்ச் திரை, 5 எம்பி ப்ரைமரி கேமரா, 0.3 எம்பி முன்பக்க கேமரா, 8 ஜிபி இன்டர்னல் மெமரி, 3ஜி மாடலில் 1.2 ஜிகாஹெர்ட்ஸ் குவால்காம் ஸ்னாப்டிராகன் பிராசஸரும், 4ஜி மாடலில் 1.2 ஜிகாஹெர்ட்ஸ் குவாட் கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் பிராசஸரும் வழங்கப்பட்டுள்ளது.

யு யுஃபோரியா

யு யுஃபோரியா

5 இன்ச் எச்டி ஐபிஎஸ் திரை, 64-பிட் 1.2 ஜிகாஹெர்ட்ஸ் குவால்காம் ஸ்னாப்டிராகன் குவாட்கோர் பிராசஸர், 16 ஜிபி இன்டர்னல் மெமரி, 8எம்பி ப்ரைமரி கேமரா, எல்ஈடி ப்ளாஷ், 5 எம்பி முன்பக்க கேமரா மற்றும் 2230 எம்ஏஎச் பேட்டரியும் வழங்கப்பட்டுள்ளது.

சியோமி ரெட்மி 2 பிரைம்

சியோமி ரெட்மி 2 பிரைம்

4.7 இன்ச் எச்டி திரை, ஆண்ட்ராய்டு கிட்காட் இயங்குதளம், 1.2 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் ஸ்னாப்டிராகன் பிராசஸர், 2 ஜிபி ரேம், 16 ஜிபி இன்டர்னல் மெமரி, 8 எம்பி ப்ரைமரி கேமரா, 2 எம்பி முன்பக்க கேமரா மற்றும் 2200 எம்ஏஎச் பேட்டரியும் வழங்கப்பட்டுள்ளது.

லெனோவோ ஏ6000

லெனோவோ ஏ6000

5 இன்ச் ஐபிஎஸ் எச்டி திரை, 1.2 ஜிகாஹெர்ட்ஸ் ஸ்னாப்டிராகன் குவாட் கோர் பிராசஸர், 1 ஜிபி ரேம், 8 ஜிபி இன்டர்னல் மெமரி, 8 எம்பி ப்ரைமரி கேமரா, 2 எம்பி முன்பக்க கேமரா மற்றும் 2300 எம்ஏஎச் பேட்டரியும் வழங்கப்பட்டுள்ளது.

பட்டியல்

பட்டியல்

இந்த பட்டியல் இன்றைய நிலரவப்படி அதிக விற்பனை மற்றும் தரம் சார்ந்த புள்ளிகளின் அடிப்படையில் தொகுக்கப்பட்டுள்ளது.

முகநூல்

முகநூல்

மேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.

Best Mobiles in India

English summary
Best smartphones to buy under Rs 7,000. Read More in Tamil.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X