தண்ணீரில் மிதக்கும் உலகின் முதல் ஸ்மார்ட்போன்!!

தண்ணீரில் நனைந்தால் எதுவும் ஆகாத ஸ்மார்ட்போன்களுக்கு அடுத்தத் தலைமுறை தொழில்நுட்பத்தினைப் பெங்களூரு இளைஞர் கண்டறிந்துள்ளார்.

Written By:

கையில் எண்ணெய் ஊற்றியது போல் எப்போதும் கையில் இருப்பதைத் தவற விடுபவர்களுக்கான, புதிய ஸ்மார்ட்போன் மிக விரைவில் உதயமாகின்றது.

புறா மூலம் தகவல் அனுப்பி வந்த காலம் போய் இன்று உள்ளங்கை அளவு கருவி மூலம் உலகையே கையில் வைத்திருக்கின்றோம் என்றால் தொழில்நுட்பம் தான் அதற்கு முக்கியக் காரணம் ஆகும்.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

புதிய தொழில்நுட்பம்

மொபைல் போன், கேமரா போன் இன்று வாட்ட்ர் ப்ரூஃ போன்களை நாம் பயன்படுத்துகின்றோம். இவற்றைப் பின்னுக்குத் தள்ளி புதிய தொழில்நுட்பம் மூலம் தண்ணீரில் மதிக்கும் ஸ்மார்ட்போன் ஒன்றை பெங்களூரு இளைஞர் வடிவமைத்திருக்கின்றார்.

இது உண்மை தாங்க நம்புங்க..

 

கோமெட் கோர்

பெங்களூருவைச் சேர்ந்த பிரசாந்த் ராஜ் நிறுவிய பாலோ ஆல்டோ சார்ந்த நிறுவனம் தான் கோமெட் கோர். இவர் தான் உலகின் முதல் மிதக்கும் ஸ்மார்ட்போனினை கண்டறிந்துள்ளார்.

மிதக்கும்

இவர் கண்டறிந்திருக்கும் புதிய தொழில்நுட்பம் கொண்ட ஸ்மார்ட்போன் நீச்சல் குளம், கிணறு எனத் தண்ணீரிர் விழுந்தால் மூழ்காமல், தண்ணீரில் மிதக்கும் திறன் கொண்டுள்ளது.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

நிதி

இன்டிகோகோவில் அதிகளவு நிதியைப் பெற்று வரும் கோமெட் பயோயண்ட் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் ஆகும். இதில் எவ்வித மிதக்கும் கருவியும் பொருத்தப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

பேட்டி

'பேஜகர்களில் இருந்து ஆன்டெனா போன்கள் -- கேமரா போன்கள் -- ஸ்மார்ட்போன்கள் -- வாட்டர் ரெசிஸ்டண்ட் போன்கள் என்ற வரிசையில் அடுத்து கோமெட்டின் பயோயண்ட் ஸ்மார்ட்போன்கள் வாட்டர் ரெசிஸ்டண்ட் போன்களுக்கு அடுத்தத் தலைமுறை கருவியாக விளங்கும்' எனப் பிரசாந்த் கருத்துத் தெரிவித்துள்ளார்.

அம்சங்கள்

இந்த ஸ்மார்ட்போனில் 16 எம்பி பிரைமரி கேமரா, 4.7 இன்ச் ஸ்கிரீன், 2.0 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 810 பிராசஸர், 4 ஜிபி ரேம் கொண்டுள்ளது. கருப்பு, வெள்ளை மற்றும் கோல்டு நிறங்களில் கிடைக்கின்றது.

தயாரிப்பு

இந்தப் போனின் தயாரிப்புப் பணிகள் இன்னும் துவங்கவில்லை என்றாலும் பயனர்கள் கருவியை முன்பதிவு செய்ய முடியும். இதன் விலை இந்திய மதிப்பில் 32 ஜிபிக்கு ரூ.16,000 என்றும் 64 ஜிபி மாடல் ரூ.19,000 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

வீடியோ

உலகின் முதல் மிதக்கும் ஸ்மார்ட்போன் காணொளி வடிவில். 

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்English summary
Bengaluru Guy Created The World’s First Smartphone That Floats On Water
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்