லுமிங்கன் டி3 : உலகின் முதல் நைட் விஷன் ஸ்மார்ட்போன்.!!

Written By:

உலக ஸ்மார்ட்போன் சந்தையை திரும்பி பார்க்க வைக்கும் விதமாக லுமிங்கன் என்ற நிறுவனம் புதிய அம்சம் கொண்ட ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. நைட் விஷன் கேமரா கொண்ட உலகின் முதல் ஸ்மார்ட்போன் என்ற பெருமையை கொண்டிருக்கும் லுமிங்கன் டி3 ஸ்மார்ட்போன் குறித்த விரிவான தகவல்கள் ஸ்லைடர்களில்..

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

01

டென்மார்க் நாட்டில் வடிவமைக்கப்பட்ட டி3 ஸ்மார்ட்போன் மெரைன்-கிரேடு 316 ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் மூலம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கருவியாது நீரில் நனைந்தாலும் எதுவும் ஆகாதபடி வடிவமைக்கப்பட்டுள்ளது.

02

4.8 இன்ச் எச்டி திரை மற்றும் 720*1280 பிக்சல் ரெசல்யூஷன் கொண்டிருப்பதோடு கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 மூலம் பாதுகாக்கப்படுகின்றது.

03

லுமிங்கன் டி3 கருவியில் 2.2 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா கோர் பிராசஸர், 3ஜிபி ரேம் மற்றும் ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மல்லோ இயங்குதளம் வழங்கப்பட்டுள்ளது.

04

128 ஜிபி இன்டர்னல் மெமரியும், மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. மேலும் டூயல் சிம் ஸ்லாட் வழங்கப்பட்டுள்ளது.

05

லுமிங்கன் டி3 ஸ்மார்ட்போனில் 13 எம்பி /4கே ப்ரைமரி கேமரா, ஆட்டோஃபோகஸ் அம்சம், வேகமான ஃபேஸ் டிடெக்ஷன் அம்சம் வழங்கப்பட்டுள்ளது. இதோடு 5 எம்பி FHD முன்பக்க செல்பீ கேமராவும் வழங்கப்பட்டுள்ளது.

06

4 எம்பி நைட் விஷன் கேமரா இரண்டு IR எல்இடி மூலம் இயங்குகின்றது. இதன் மூலம் முழுமையான இருளிலும் தெளிவான போட்டோ மற்றும் வீடியோக்களை பதிவு செய்ய முடியும். இதனை எளிதாக செட் செய்ய பிரத்யேக ஆக்ஷன் கீ வழங்கப்பட்டுள்ளது.

07

இந்த கருவியின் பின்புறம் ஸ்வைப் செய்து புகைப்படம், செல்பீ மற்றும் இணைய தேடல்களை மேற்கொள்ள முடியும்.

08

லுமிங்கன் டி3 கருவியானது 4ஜி எல்டிஇ, ப்ளூடூத் வி4.1, என்எஃப்சி, ஐஆர் பிளாஸ்டர் மற்றும் மைக்ரோ-யுஎஸ்பி போன்ற கனெக்டிவிட்டி அம்சங்கள் கொண்டிருக்கின்றது.

09

ஹோம் பட்டன் மற்றும் கைரேகை ஸ்கேனர் கொண்டிருக்கும் இந்த கருவி கருப்பு, வெள்ளை மற்றும் ஆரஞ்சு நிறங்களில் கிடைக்கின்றது. இதோடு 24-கேரட் கோல்டு எடிஷன் ஒன்றும் விற்பனைக்கு வர இருக்கின்றது.

10

லுமிங்கன் டி3 கருவியானது $740 இந்திய மதிப்பில் ரூ.49,500 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது, மற்ற நாடுகளில் இதன் விலை மற்றும் விற்பனை குறித்த தகவல்கள் ஏதும் வழங்கப்படவில்லை.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

English summary
Attracting Features of World's First Night Vision Camera Phone Tamil
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்