ஸ்மார்ட்போனிற்கு தேவையான பொருட்களை வாங்க அதிகமாக செலவழிப்பதாக உணர்கிறீர்களா

ஸ்மார்ட்போனிற்கு தேவையான பொருட்களுக்காக அதிகமாக செலவழிக்கிறீர்களா-செலவுகளை குறைக்க எளிய வழிகள்.!

By Ilamparidi
|

நமக்கு தேவைப்படுகின்ற பொருட்களுக்குத்தகுந்த விலையைத் தவிர்த்து அதற்குமேலாக விலை கொடுத்து நாம் ஒருபோதும் அப்பொருளை வாங்க விரும்புவதில்லை இது ஸ்மார்ட்போன் வாங்குவதற்கும் பொருந்தும்.

ஸ்மார்ட்போன் வாங்குகையில் நாம் அனைவரும் அழகானதாகவும் பெரியதாகவும் விலை உயர்ந்ததாகவுமே வாங்க விரும்புகிறோம்அதற்கு தேவையான பொருட்களை வாங்குவதில் போதிய கவனம் செலுத்துவதில்லை அப்படி கவனம் செலுத்தினோமெனில்தேவையின்றி பணம் வீணாவதை தவிக்கலாம் அதுகுறித்த தகவல்கள் கீழே..

தவறான பிளான்:

தவறான பிளான்:

தற்சமயம் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் டேட்டா வாய்ஸ் கால் மெசேஜ் உள்ளிட்டவைக்கு பல பலன்களை வழங்குகின்றன அவற்றில் நமக்கு தேவையில்லாதவற்றையோ அல்லது தேவைக்கு அதிகமானவற்றையோ தேர்ந்தெடுத்தோமானால் அதிகமானபணத்தினை இழக்க வேண்டியிருக்கும் எனவே இத்தகைய பிளான்களை தேர்ந்தெடுக்கையில் கவனம் தேவை.

அடிக்கடி புதிய போன்களை வாங்குகிறீர்களா❓

அடிக்கடி புதிய போன்களை வாங்குகிறீர்களா❓

உபயோகிரா போன் மெதுவாகச் செயல்படுவதால் அல்லது ஏதேனும் பிரச்னைகளுக்கு உள்ளானால் புதிய ஸ்மார்ட்போனை வாங்குபவரா நீங்கள்அவ்வாறு அடிக்கடி புதிய போன்களை வாங்குவதால் பணம்தான் அதிகமாகச் செலவாகும் அதற்குப் பதிலாக தற்போது உபயோகிக்கிற போனையே அப்டேட் செய்துகொள்வதன் வழியாக நமக்கு பணம் மீதமாகும்.

போனுக்கான கவர்களை உபயோகப்படுத்துங்கள்:

போனுக்கான கவர்களை உபயோகப்படுத்துங்கள்:

அதிகமான விலைகொடுத்து வாங்கப்படுகிற ஸ்மார்ட்போன்கள் பார்ப்பதற்கு அழகானதாகவும் மெல்லியதாகவும் இருக்கும் அதேவேளையில் கை தவறி கீழே விழுமாயின் முழுமையாகவோ அல்லது பகுதி அளவிலோ உடைந்துபோகக்கூடிய வாய்ப்புகள் அதிகம்
ஆகவே போனுக்கேற்ற கவர்களை பயன்படுத்துவதின் மூலம் இத்தகைய ஆபத்திலிருந்து தப்பிக்கலாம்.

ஆன்லைன் ஷாப்பிங்கை தவிர்த்திடுங்கள்:

ஆன்லைன் ஷாப்பிங்கை தவிர்த்திடுங்கள்:

மொபைல் வழியாக ஆன்லைன் ஷாப்பிங் செய்வது மிகுந்த ஆபத்து நிறைந்தது ஏனெனில் தவறாக தேவையற்ற ஆப்ஷன்களின் மீது கைப்பட்டுவிட்டாலோ அல்லது விளம்பரங்கள் எதனையும் சப்ஸ்கிரைப் செய்துவிட்டாலோ நாம் நமது அக்கௌன்ட்டிலிருந்து பணத்தை இழக்க வேண்டியிருக்கும் எனவே ஆன்லைன் ஷாப்பிங்கை தவிர்த்திடுங்கள் அல்லது கவனத்துடன் ஷாப்பிங் செய்யுங்கள்.

இன்சூரன்ஸ்:

இன்சூரன்ஸ்:

இப்போது பெரும்பாலானோர் தங்களது மொபைளுக்கான இன்சூரன்ஸ் செய்துகொள்ளுகின்றனர் எதிர்பாராத போது உடைந்தாலோ அல்லது சேதாரமுற்றாலோ இன்சூரன்சைப் பயன்படுத்தி மொபைலை சரிசெய்வதற்கான தொகையை பெற்றுக்கொள்ளலாம் அவ்வாறு இல்லாமல் மிகுந்த கவனமுடன் மொபைலை கையாள்பவராயின்இன்சூரன்ஸ் செய்ய வேண்டிய தேவை இல்லை.

இன்டெர்னல் ஸ்டோரேஜ்:

இன்டெர்னல் ஸ்டோரேஜ்:

இப்போதைய புதிய ட்ரெண்ட் ஸ்மார்ட்போன்கள் அதிக இன்டெர்னல் ஸ்டோரேஜ் கொண்டே வருகின்றன அத்தகு ஏற்றாற்போல் அவற்றின் விலையும் அதிகம் ஆகவே நமக்கு தேவையான அளவுள்ள இன்டெர்னல் ஸ்டோரேஜ் கொண்ட ஸ்மார்ட்போன்களை வாங்கினாலே போதும்.

கேபிள்கள்:

கேபிள்கள்:

உங்களது ஸ்மார்ட்போன்களுக்கு கேபிள்கள் தேவையெனில் தேவையானவற்றை தரமுல்லாத நீடித்து உழைப்பதா எனச் சோதித்து வாங்கினால் போதும் இவற்றிற்காக அடிக்கடி நம் செலவு செய்யவேண்டிய சூழல் ஏற்படாது.

Best Mobiles in India

Read more about:
English summary
Are you overspending while buying smart phone. Read more about this on Tamil Gizbot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X