முதன்முதலாக ஆப்பிள் உருவாக்கி வரும் டிரான்ஸ்பேரண்ட் ஐபோன்.!

ஆப்பிள் ஐபோன் 8 மாடல் இதுவரை உலகில் வெளிவராத மாடல் ஒன்றின் உரிமையை பதிவு செய்துள்ளது.

By Siva
|

ஆப்பிள் நிறுவனத்தின் ஒவ்வொரு புதிய மாடல் ஐபோன் வரும்போதும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கும். ஆனால் வெளிவந்தவுடன் கிட்டத்தட்ட அனைத்து மாடல்களின் டிசைனும் ஒரே மாதிரியாக இருப்பதால் ஆப்பிள் ஐபோன் வாடிக்கையாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

இந்த அதிருப்தியை சரிசெய்யும் வகையில் ஆப்பிள் ஐபோன் 8 மாடல் இதுவரை உலகில் வெளிவராத மாடல் ஒன்றின் உரிமையை பதிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த தகவல் மட்டும் உண்மை என்றால் ஐபோன் வாடிக்கையாளர்களுக்கு இதைவிட வேறு சந்தோஷமான விஷயம் இருக்க போவதில்லை

ரெட்மீ நோட் 4 போனால் என்ன.? உங்களுக்கு பல ஆப்ஷன்கள் இருக்கு.!
ஆப்பிள் ஐபோன் 8 மாடல் நிச்சயம் வித்தியாசமான டிசைனாக இருக்கும் என்று நாம் ஏற்கனவே கூறியபடி இந்த முறை மிக மிக வித்தியாசமான மாடலுடன் வெளிவர உள்ளது. இந்த மாடல் குறித்து வெளிவந்துள்ள வதந்திகள் குறித்து தற்போது பார்ப்போமா..

டெக்னாலஜி:

டெக்னாலஜி:

ஆப்பிள் ஐபோன் உள்பட இதுவரை வெளிவந்த அனைத்து போன்களிலும் உள்ளே என்னென்ன இருக்கின்றது என்பதை வெளியில் இருந்து பார்க்க முடியாது. ஆனால் முதல்முறையாக உள்ளே இருக்கும் பொருட்களை பார்க்கும் வகையில் உள்ள டெக்னாலஜி அடங்கிய மாடலை ஆப்பிள் வெளியிட உள்ளதாம். டிஸ்ப்ளே வழியாக இதுவரை நாம் மற்ற விஷயங்களை மட்டுமே பார்த்து வந்தோம்.

ஆனால் முதல்முறையாக டிஸ்ப்ளே வழியாக போனின் உள்ளே இருக்கும் பாகங்களையும் வாடிக்கையாளர்கள் பார்க்கும் வகையிலான பேடண்ட் உரிமையை ஆப்பிள் பெற்றுள்ளதாம். அதாவது கிட்டத்தட்ட டிரான்ஸ்பேரண்ட் மாதிரியான டெக்னாலஜி பயன்படுத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த போனின் லுக் எப்படி இருக்கும்?

இந்த போனின் லுக் எப்படி இருக்கும்?

உள்ளே இருக்கும் பொருட்களை பார்க்கும் வகையில் என்றால் ஒரு சிறிய ஓட்டை இருக்கும் என்றும் அதன் மூலம் பார்க்கலாம் என்று ஒருசிலர் அர்த்தம் புரிந்து கொள்கின்றனர். அப்படி கிடையாது. OLED டிஸ்ப்ளேவை அடுத்து ஒரு பவர்புல் கண்ணாடி இருக்கும்.

அந்த கண்ணாடியின் மூலம் உள்ளே இருக்கும் பொருட்களை பார்க்க முடியும். உள்ளே உள்ள பொருட்கள் மட்டுமின்றி போனின் மறுபுறம் உள்ள உங்கள் கையையும் பார்க்க முடியும் என்றால் இதன் லுக் எப்படி இருக்கும் என்பதை உங்கள் கற்பனைக் குதிரையை ஓட விட்டு பார்த்து கொள்ளுங்கள்

லுக் ஓகே, அப்ளிகேசனின் வித்தியாசம் இருக்குமா?

லுக் ஓகே, அப்ளிகேசனின் வித்தியாசம் இருக்குமா?

AR features என்று சொல்லக்கூடிய Augmented reality இந்த ஆப்பிள் ஐபோன் 8ல் இதுவரை இல்லாத வகையில் அதிநவீன டெக்னாலஜி பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும், இந்த போனின் அப்ளிகேசன் அனைத்துமே இதுவரை வேறு எந்த போனிலும் கேள்வியே பட்டிராத வகையில் இருக்கும் என்றும் வதந்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

ஆனால் அதே நேரத்தில் ஆப்பிள் இதுபோன்ற வசதிகளுடன் தான் ஆப்பில் ஐபோன் 8 வருகிறது என்ற எந்த கேரண்டியையும் இதுவரை அதிகாரபூர்வமாக தெரிவிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

Best Mobiles in India

English summary
As the year 2017 marks the 10th anniversary of Apple iPhone, the upcoming iPhone 8 is expected to revolutionize the smartphone once again.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X