நோக்கியாவுடன் மறைமுக மோதல் : ஐபோன் 8 காப்புரிமை லீக்ஸ்.!

நோக்கியா ஆண்ட்ராய்டு கருவிகளின் வருகையை தொடர்ந்து ஆப்பிள், சாம்சங், எல்ஜி, சோனி. மோட்டோரோலா என அனைத்து நிறுவனங்களுக்கும் ஒரே போட்டியாக நோக்கியா ஆண்ட்ராய்டு கருவிகள் தான் எதிர் நிற்கின்றன.!

Written By:
பொதுவாக ஆப்பிள் நிறுவனமும் சாம்சங் நிறுவனமும் தான் கடுமையாக போட்டி போட்டுக்கொள்ளும் - ஆனால் அதெல்லாம் போன மாசம் நடந்த கதைகள். நோக்கியா ஆண்ட்ராய்டு கருவிகளின் வருகையை தொடர்ந்து ஆப்பிள், சாம்சங், எல்ஜி, சோனி. மோட்டோரோலா என அனைத்து நிறுவனங்களுக்கும் ஒரே போட்டியாக நோக்கியா ஆண்ட்ராய்டு கருவிகள் தான் எதிர் நிற்கின்றன.!

ஆப்பிள் நிறுவனமானது அதன் லாபம் சார்ந்த செய்திகளையும், அறிக்கைகளையும் வெளியிட்ட போதிலும் சமீப கால ஐபோன் கருவிகள் மீதான ஆர்வம் குறைந்துகொண்டே வருகிறது என்பது தான் நமக்கு தெரிந்த உண்மையாகும். ஆக ஆப்பிள் நிறுவனமும் முதன்மை பெற போரடிக்கொண்டுதான் இருக்கிறது. இதற்கிடையில் நோக்கியா ஆண்ட்ராய்டு அறிமுகங்கள் வேறு - என்ன செய்ய போகிறது ஆப்பிள், இதோ வெளியாகியுள்ளது அடுத்த ஐபோன் கருவியின் பேடண்ட் சார்ந்த தகவல்கள்.!

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

காப்புரிமை

அடுத்த தலைமுறை ஐபோன் கருவியில் ஹோம் பட்டன் மற்றும் கைரேகைகள் ஸ்கேன் ஆகியவைகள் திரையில் இருக்காது என்பதை புதிதாக வெளியிடப்பட்ட காப்புரிமை வெளிப்படுத்தியுள்ளது.

புதிய தொழில் நுட்பம்

புதிதாக வழங்கப்பட்ட காப்புரிமையின்படி எதிர்வரும் ஆப்பிள் ஐபோன் திரையின் கீழே அதாவது உட்பொதிக்கப்பட்ட ஒரு கைரேகை ஸ்கேனர் இருக்கும் என்று வெளிப்படுத்தியுள்ளது. இதன் மூலம் ஒரு புதிய தொழில் நுட்பம் சார்ந்த வேலையில் ஆப்பிள் நிறுவனம் ஈடுபட்டுள்ளதையும் இந்த பேடண்ட் லீக்ஸ் வெளிப்படுத்தியுள்ளது.

விரல் நிலை

இந்த காப்புரிமையின் லக்ஸ்வூ தொழில்நுட்பம் ஆனது ஆப்பிள் நிறுவனத்தினால் 2014-ல் வாங்கபட்ட காப்புரிமை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பேடண்ட் ஆனது விரல் ரேகையானது ஆர்ஜிபிஎல்ஈ சென்சார்கள் இணைந்த அகச்சிவப்பு உமிழ்வு மூலம் ஸ்கேன் செய்யப்பட்டு திரையில் விரல் நிலை கண்டறியப்படும்.

டச் டிஸ்ப்ளே

இத்தகைய ஒளி உமிழ்வுகள் ஆனது சாதனத்தின் ஒட்டுமொத்த பரிமாணங்களை குறைத்து டச் டிஸ்ப்ளேவை உள்ளே ஒருங்கிணைக்க முடியும். இருப்பினும் இந்த புதிய தொழில்நுட்பம் ஆனது அடுத்த ஐபோனில் அறிமுகப்படும் என்ற எந்த உத்தரவாதமும் கிடையாது.

சிறிய பெஸல்கள்

அடுத்த ஆப்பிள் கருவியான ஐபோன் 8 அல்லது "ஐபோன் எக்ஸ்" கருவியில் முக்கிய வடிவமைப்பு மாற்றங்கள் அதாவது சிறிய பெஸல்கள் மற்றும் வளைந்த ஓல்இடி காட்சி, ஆகியவைகளை எதிர்பார்க்கலாம்.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

English summary
Apple patent reveals fingerprint scanner built inside iPhone display. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்