ஆப்பிள் ஐபோன் 8 குறித்து கசிந்து வரும் அபூர்வமான தகவல்கள்

உலகின் முன்னணி ஐபோன் நிறுவனமான ஆப்பிள் ஐபோன் நிறுவனத்திற்கு 2017ஆம் ஆண்டு மிகச்சிறந்த வருடமாக இருக்கும், ஆம், ஆப்பிள் ஐபோன் நிறுவனம் தொடங்கி 10வது ஆண்டு சிறப்பு விழா கொண்டாடப்படும் ஆண்டு.

By Siva
|

உலகின் முன்னணி ஐபோன் நிறுவனமான ஆப்பிள் ஐபோன் நிறுவனத்திற்கு 2017ஆம் ஆண்டு மிகச்சிறந்த வருடமாக இருக்கும், ஆம், ஆப்பிள் ஐபோன் நிறுவனம் தொடங்கி 10வது ஆண்டு சிறப்பு விழா கொண்டாடப்படும் ஆண்டு.

ஆப்பிள் ஐபோன் 8 குறித்து கசிந்து வரும் அபூர்வமான தகவல்கள்

இந்த 10ஆம் ஆண்டு சிறப்பு ஆண்டில் ஆப்பிள் ஐபோன் 8 வெளிவரவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த ஐபோனில் இதுவரை இல்லாத அளவில் பல அதிசயத்தக்க அம்சங்கள் இருப்பதாகவும் வதந்திகள் கசிந்து வருகின்றன.

எந்த நெட்வொர்க் உடனாகவும் அன்லிமிடெட் கால்ஸ், இலவச 1ஜிபி தரவு.!

இந்த வதந்திகள் மூலம் ஐபோன் 8 பயனாளிகளுக்கு பல அற்புதமான அனுபவங்களை கொடுக்கும் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. இந்த அபூர்வ தகவல்களை தற்போது பார்ப்போம்

இரண்டு அல்ல, மூன்று வித்தியாசமான சைஸ்களில் வெளிவரவுள்ளது.

இரண்டு அல்ல, மூன்று வித்தியாசமான சைஸ்களில் வெளிவரவுள்ளது.

இதுவரை வெளிவந்த ஆப்பிள் ஐபோனின் வகைகள் இரண்டு விதமான மாடல்களில் மட்டுமே வெளிவந்தது. ஆனால் 2017-ல் மூன்று விதமான மாடல்கள் மற்றும் அம்சங்களுடன் வெளிவரவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

4.7 இன்ச், 5.5 இன்ச் மற்றும் 5.8 இன்ச் என மூன்று அளவுகளில் ஆப்பிள் ஐபோன் 8 வெளிவரவுள்ளது. ஆப்பிள் ஐபோன்களின் அனாலிஸ்ட்டுக்களின் கருத்துக்களின்படி 4.7 இன்ச், 5.5 இன்ச் அளவுள்ள ஆப்பிள் ஐபோன் 8, வழக்கமான ஆதரவையும், 5.8 இன்ச் ஆப்பிள் ஐபோன் மிக அபாரமான வரவேற்பையும் பெறும் என்று கணித்துள்ளனர்.

நீண்ட காலமாக எதிர்பார்த்த OLED டிஸ்ப்ளே

நீண்ட காலமாக எதிர்பார்த்த OLED டிஸ்ப்ளே

ஆப்பிள் ஐபோன் 7 மாடலிலேயே OLED டிஸ்ப்ளே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வழக்கமான டிஸ்ப்ளேதான் அந்த மாடலில் இருந்தது. ஆனால் ஆப்பிள் ஐபோன் 8-ல் நிச்சயம் OLED டிஸ்ப்ளே மற்றும் LCD பேனல் இருக்கும் என்று வதந்திகள் வெளிவந்துள்ளன. மேலும் மிகவும் மெல்லிய வடிவத்தில் இந்த ஐபோன் இருக்கும் என்றும் இதனால் ஐபோன் பிரியர்களுக்கு செம விருந்து காத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

ஹோம் பட்டன் இல்லை மற்றும் வளைந்த பெசல்-லெஸ் டிஸ்ப்ளே

ஹோம் பட்டன் இல்லை மற்றும் வளைந்த பெசல்-லெஸ் டிஸ்ப்ளே

சாம்சங் கேலக்ஸி 7 எட்ஜ் மாடலில் இருந்தது போல் ஆப்பிள் ஐபோன் 8-ல் வளைந்த கண்ணாடி மற்றும் பெசல் லெஸ் டிஸ்ப்ளே இருக்கும் என்ற வதந்தி வெகு வேகமாக பரவி வருகிறது. இதற்கு முந்தைய மாடலிலேயே இந்த வளைந்த கண்ணாடி டிஸ்ப்ளேவை கொண்டு வர முயற்சித்ததாகவும், ஆனால் எதிர்பாராத காரணத்தினால் அது முடியாததால் தற்போது இந்த மாடலில் இந்த வ்சதியை கொண்டு வந்துளதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த ஐபோன் 8ல் ஹோம் பட்டனே கிடையாது.

3D டூயல் லென்ஸ் கேமிரா இருக்குமா?

3D டூயல் லென்ஸ் கேமிரா இருக்குமா?

இந்த மாடலில் LG Innotek 3D மாடலில் இருந்தது போன்று 3D கேமிரா செட் அப் உள்ளது என்று கூறப்படுஇகிறது. மேலும் சமீபத்தில் இஸ்ரேலிய நிறுவனம் ஒன்றிடம் இருந்து 3D இமேஜ் செட் அப்பை ஆப்பிள் நிறுவனம் பெற்றுள்ளதால் இந்த ஆப்பிள் ஐபோன்8-ல் 3D இமேஜ் எடுக்கும் திறன் கொண்ட கேமிரா இருக்கும் என்ற வதந்தி பரவலாக பரவி வருகிறது.

ஆப்பிள் ஐபோனுக்கு போட்டியாக கருதப்படும் சாம்சங் கேலக்ஸி S8 மாடல் மற்றும் கூகுள் பிக்சல் போன்களை விட இந்த ஆப்பிள் ஐபோன் கேமிராவின் தன்மை மிக அபாரமாக இருக்கும் என்பதை ஆப்பிள் நிறுவனத்தினரே தகவல்களை பரப்பி வருகின்றனர்.

அனைவரும் விரும்பும் வயர்லெஸ் சார்ஜர்

அனைவரும் விரும்பும் வயர்லெஸ் சார்ஜர்

தற்போது பலர் விரும்புவது வயர்லெஸ் சார்ஜைத்தான். அந்த விருப்பத்தை பூர்த்தி செய்யும் வகையில் ஆப்பிள் ஐபோன் உடன் வயர்லெஸ் சார்ஜர் வரவுள்ளது. இந்த தகவல் கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளதால் இதை வதந்தி என்று கூறாமல் இருக்கலாம்.

மேலும் இந்த சார்ஜர் அலுமினியம் பாடியுடன் கூடிய கண்ணாடியில் ஸ்மூத்தாக ஹேண்டில் செய்யும் வகையில் இருக்கும் என்பது கூடுதல் சிறப்பு.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

Best Mobiles in India

English summary
The year 2017 marks the 10th anniversary of the Apple iPhone, and for obvious reasons, the Cupertino-based tech giant is expected to celebrate the occasion in a grand way.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X