ஆண்ட்ராய்டில் பேட்டரி பராமரிப்பு...!

By Keerthi
|

இன்று நாம் அதிகம் பயன்படுத்தும் ஆண்ட்ராய்ட் மொபைல் போன்களில், சக்தி மிக்க பேட்டரிகளே தரப்படுகின்றன. இருப்பினும், சில செயல்பாடுகளை மேற்கொள்வதன் மூலம், இந்த பேட்டரிகளின் வாழ்நாளை நீட்டிக்கலாம்.

அவற்றில் சில இங்கு பட்டியலிடப்படுகின்றன. இங்கு சுட்டிக் காட்டப்படுபவை, பொதுவான வழிகளாக, அனைத்து போன்களுக்கும் செயல்படுத்தக் கூடியதாகவும் இருக்கலாம்.

தற்போது வரும் நவீன ஆண்ட்ராய்ட் போன்களில், அவற்றில் இயங்கும் அப்ளிகேஷன் புரோகிராம்கள் மின்சக்தியை எவ்வளவு பயன்படுத்துகின்றன என்று காட்டும் வரைபடங்கள் கிடைக்கின்றன.

இவற்றைக் கொண்டு, அதிக பேட்டரி சக்தியினை எடுத்துக் கொள்ளும் புரோகிராம்களை அடையாளம் கண்டு, அவற்றைத் தேவை இல்லை எனில், நிறுத்தி வைக்கலாம்.

இலவச ஸ்மார்ட் போன் வேண்டுமா உங்களுக்கு?

#1

#1

போன் வெப்பமான சூழ்நிலையில் செயல்படுவது, பேட்டரியின் செயல்பாட்டினைக் குறைக்கும் என்பதனைப் பலர் அறியாமல் இருக்கின்றனர். எனவே, அதிக வெப்பம் உள்ள இடங்களில், மொபைல் போன்களைக் கையில் எடுத்துச் செல்வதைக் காட்டிலும், பாக்கெட்டில், கைப் பைகளில் வைத்துக் கொள்ளலாம்.

#2

#2

போன் திரையின் டிஸ்பிளே ஒளி அதிகமாக இருப்பது, பேட்டரியின் திறனை அதிகமாகவே உறிஞ்சும் என்பது அனைவரும் அறிந்ததே. ஆண்ட்ராய்ட் போன்களில் இது சற்று அதிகமாகவே இருக்கும்.

#3

#3


ஆனால், இந்த போன்களில் autobrightness setting என்ற வசதி தரப்பட்டுள்ளது. வெளி வெளிச்சத்திற்கேற்ற வகையில், இது திரைக் காட்சியின் ஒளி அளவைக் கட்டுப்படுத்தி அமைக்கும்.

#4

#4

ஆண்ட்ராய்ட் போன்கள் தானாகவே, திரையின் ஒளி அளவைக் குறைத்து, இறுதியில் முற்றிலுமாக அணைத்துவிடும் வசதி கொண்டவை. இதற்கான கால அளவை நாமாக செட் செய்திடலாம். இதனை மிகக் குறைவாக அமைத்து வைப்பது பேட்டரியின் வாழ்நாளை அதிகரிக்கும்.

#5

#5

சாம்சங் கேலக்ஸியில் போன்ற போன்களில் Smart stay என்றொரு வசதி தரப்பட்டுள்ளது. போனைப் பயன்படுத்துபவர் திரையைப் பார்த்துக் கொண்டிருப்பதனை, இது அறிந்து கொண்டு, திரை ஒளியை மட்டுப்படுத்தாமல் வைக்கிறது. பின்னர் அணைத்துவிடுகிறது.

#6

#6

பெரும்பாலான போன்களில், மின்சக்தி வீணாவதனைத் தடுத்து, Power saving என்னும் சேமிக்கும் வசதி தரப்பட்டுள்ளது. செயல்படாத, வை-பி, புளுடூத் போன்ற ரேடியோ அலைகளைப் பயன்படுத்தும் வசதிகளை நிறுத்தி வைக்கும்.

ஆனால், இந்த Power saving வசதி, போன் சிஸ்டம் செயல்படுவதனையும் மட்டுப்படுத்தும் என்பதால், இதனை பேட்டரி பவர் மிகவும் கீழாக இருக்கும்போது மட்டுமே பயன்படுத்த வேண்டும். சில போன்களில், பேட்டரியின் நிலை 30 சதவீதத்திற்கும் குறைவாக இருக்கும்போது, தானாகவே கணிதீஞுணூ ண்ச்திடிணஞ் வசதி இயக்கப்படுகின்ற வகையில் இது அமைக்கப்பட்டுள்ளது.

#7

#7

பெரும்பாலான போன்களில், போனுக்கு அழைப்பு வருகையிலும், மெசேஜ் கிடைக்கும்போதும், ஒலியோடு, போன் அதிர்வும் தரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இது பேட்டரியின் சக்தியைப் பெரும் அளவில் எடுத்துக் கொள்ளும். எனவே, ஏதாவது ஒன்றினை மட்டும் அமைத்துக் கொள்ளலாம். அதிர்வினை இயங்காமல் வைப்பது, பேட்டரியின் வாழ்நாளை அதிகப்படுத்தும்.

#8

#8

ஆண்ட்ராய்ட் போன்களில், வை-பி, புளுடூத் மற்றும் ஜி.பி.எஸ். போன்ற ரேடியோ அலைப் பயன்பாட்டு வசதிகள் அனைத்தும், பேட்டரியின் சக்தியை அதிகம் எடுத்துக் கொள்ளும்.

எனவே, புளுடூத் ஹெட்செட் பயன்படுத்தவில்லை எனில், புளுடூத் வசதியை எப்போதும் அணைத்தே வைக்கலாம். ஜி.பி.எஸ். வசதியை ஒரு சிலரே பயன்படுத்துகின்றனர். இதனையும் அணைத்தே வைக்கலாம்.

#9

#9

பெரும்பாலான ஆண்ட்ராய்ட் போன்களில், கீகளை அழுத்தும் போது, மெலிதான அதிர்வு கிடைக்கும். இதுவும் பேட்டரி திறனைக் குறைக்கும் என்பதால், இந்த வசதி பலருக்குத் தேவை இல்லை என்பதால், இதனை நிறுத்தி வைக்கலாம்.

#10

#10

ஆண்ட்ராய்ட் போன்கள் அனைத்தும் கைகளில் நாம் எடுத்துச் செல்லும் சிறிய கம்ப்யூட்டர்களே. நாட்கள் செல்லச் செல்ல, பெரிய கம்ப்யூட்டர்களில் புரோகிராம்கள் அதிகம் பதியப்படுவதைப் போல, இந்த போன்களிலும் பதியப்பட்டு செயல்படுத்தப் படுகின்றன.

இவை பேட்டரியின் வாழ்நாளைக் குறைக்கின்றன. போனை ரீ பூட் செய்திடுவது, பேட்டரியின் வாழ்நாளை அதிகப்படுத்தாது என்றாலும், அவ்வப்போது போனை ரீ பூட் செய்வது, போனை எந்த கூடுதல் புரோகிராமும் இல்லாமல் செயல்படுத்தும் நிலைக்குக் கொண்டு செல்லும். இதனால், பயன்படுத்தப்படும் மின் சக்தி குறைவாக இருக்கும்.

#11

#11

பல இணையதளங்கள், குறிப்பாக சமூக இணைய தளங்கள், திடீர் திடீரென அறிவிப்புகளை வழங்கும். பின்னணியில் இயங்குவதை இவை குறிக்கின்றன.

குறிப்பாக பேஸ்புக் மற்றும் ட்விட்டர் போன்ற தளங்கள் இவற்றை அதிகமாகவே வழங்குகின்றன. இவை கட்டாயம் பார்க்கப்பட வேண்டும் என்ற நிலையில் மட்டுமே இவற்றை இயக்க நிலையில் வைக்கவும். இல்லை எனில், தேவைப்படும்போது மட்டுமே இவற்றை இயக்கலாம்.

#12

#12

தொடர்ந்து தங்கள் தனிப்பட்ட வாழ்க்கைக்கும், வர்த்தக மற்றும் அலுவலகப் பணிகளுக்கும் போன்களைப் பயன்படுத்துபவர்கள், பேட்டரியை சார்ஜ் செய்திடும் வாய்ப்பு கிடைக்காமல் இருப்பார்கள்.

இவர்கள், கூடுதலாக, போனுக்குரிய பேட்டரி ஒன்றினை வாங்கி வைத்துக் கொள்வது நல்லது. இது சுமையாக இருந்தாலும், நாம் தொடர்பில் இருப்பதை உறுதிப்படுத்தும்.

இலவச ஸ்மார்ட் போன் வேண்டுமா உங்களுக்கு?

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X