கனவிலும் எதிர்பாராத அம்சங்களுடன் விரைவில் அறிமுகம் ஆகிறது ஆண்ட்ராய்டு 'ஒ'

ஆண்ட்ராய்ட் ஓ'வில் உள்ள அபாரமான வசதிகள்

By Siva
|

ஆண்ட்ராய்ட் நிறுவனத்தின் மேதாவிகளில் பாதி பேர் சமீபகாலமாக தங்கள் மூளையை கசக்கி உருவாக்கிய ஆண்ட்ராய்ட் நெளகட் தற்போது ஸ்மார்ட்போன் உலகில் புதிய புரட்சியை செய்து வருகிறது.

கனவிலும் எதிர்பாராத அம்சங்களுடன் விரைவில் அறிமுகம் ஆகிறது ஆண்ட்ராய்டு

இந்த நிலையில் இந்த மேதாவிகளின் பார்வை தற்போது புதிய வகை ஆண்ட்ராய்ட் ஓஎஸ்-ஆன 'ஓ' என்பதின் மீது உள்ளதாக தெரிகிறது. 'ஓரியோ' என்று அழைக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படும் இந்த ஓஎஸ் மிக விரைவில் வாடிக்கையாளர்களுக்கு இனிப்பான முறையில் அறிமுகம் ஆகவுள்ளது.

'ஓரியோ' என்ற பெயர் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்றாலும் ஆண்ட்ராய்ட் நிறுவனத்தின் தலைவர் ஹிரோஷி லோகிமியர் தனது டுவிட்டரில் எங்களுடைய அடுத்த முயற்சி ஓரியோ என்று மறைமுகமாக குறிப்பிட்டுள்ளார்.

10,000 ரூபாய்க்குள்ள 4G ஸ்மார்ட்போன் வேண்டுமா? அப்ப இதை படிங்க!

மேலும் தேடுதளங்களில் நம்பர் ஒன் ஆக இருக்கும் கூகுள் நிறுவனம் தனது புதிய ஓஎஸ் அப்டேட் குறித்து கலிபோர்னியாவில் மே 17-19 வரை நடைபெறும் மாநாட்டில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவுள்ளது.

கடந்த சில தினங்களாக ஆண்ட்ராய்டு நிறுவனத்தின் அடுத்த அப்டேட் அல்லது ஆண்ட்ராய்டு 8.0 குறித்து பல்வேறு செய்திகள் வெளியாகி வரும் நிலையில் இந்த வருட இறுதியில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படும் இந்ஹ புதிய ஆண்ட்ராய்டு ஓ என்ற ஓஎஸ் குறித்து தற்போது பார்ப்போம். இந்த தகவல்கள் உறுதி செய்யப்படவில்லை என்பதையும் ஞாபகம் வைத்து கொண்டு கீழே படியுங்கள்

காப்பி-பேஸ்ட் வசதி

காப்பி-பேஸ்ட் வசதி

இந்த புதிய ஓஎஸ் மூலம் நீங்கள் ஒரு செயலியில் இருந்து இன்னொரு செயலியில் காப்பி செய்து பேஸ்ட் செய்வது எளிதாகிவிடுகிறது.

அதேபோல் நீங்கள் காப்பி செய்த விவரங்கள் வேறு எந்தெந்த இடங்களில் உள்ளது என்பதை சியர்ச் இஞ்சின் மூலமும் தெரிந்து கொள்ளும் வசதியும் உண்டு. இதனால் அதிக சிரமங்கள் இல்லாமல் பல விஷயங்களை எளிதாக தெரிந்து கொள்ளலாம்

இந்த புதிய வசதி கூகுள் நிறுவனத்தின் அல்காரிதம் மிஷின் லேர்னிங் டெக்னாலஜி மூலம் கிடைக்கின்றது. எனவே இந்த வசதி உண்மையிலேயே வாடிக்கையாளர்களுக்கு ஒரு வரப்பிரசாதம் என்பதில் சந்தேகம் இல்லை

முகவரிகளை ஷேர் செய்ய வேண்டுமா?

முகவரிகளை ஷேர் செய்ய வேண்டுமா?

ஆன்லைனில் முகவரி தேடுதல் குறித்த பணிகளை இந்த புதிய ஆண்ட்ராய்டு ஓ மிக மிக எளிதாக்கி விடும் என்று தகவல்கள் கூறுகின்றன.

ஒரு டெக்ஸ்ட் மெசேஜில் வந்த முகவரியை நீங்கள் க்ளிக் செய்தால் உடனே அந்த முகவரி கூகுள் மேப்பில் ஓபன் ஆகும். நீங்கள் அந்த முகவரியை காப்பி செய்து அதன் பின்னர் கூகுள் மேப் சென்று பேஸ்ட் செய்து தேட வேண்டிய அவசியம் இருக்காது.

கூகுள் நிறுவனத்தின் ஆர்ட்டிஃபிசியல் இந்த வேலையை தானாகவே செய்துவிடுவதால் பயனாளிகளின் வேலையை சுலபமாக்கி விடுகிறது.

இந்த வசதியும் உண்டு தெரியுமா?

இந்த வசதியும் உண்டு தெரியுமா?

ஒருசில சீன நிறுவனங்களின் மாடல்களில் குறிப்பக ஹூவாய், சியாமி, ஒன்ப்ளஸ் போன்ற மாடல்களில் இருப்பது போன்று கூகுள் நிறுவனமும் ஒரு புதிய முயற்சியில் ஈடுபட்டுள்ளது. அதாவது ஒரு பயனாளி தனக்கு தேவையான ஏதாவது ஒரு செயலியை ஓப்பன் செய்ய வேண்டும் என்று விரும்பினால் அந்த செயலியின் முதல் எழுத்தை கையால் டிஸ்ப்ளேவில் வரைந்தால் போதும், உடனே அந்த செயலி ஓப்பன் ஆகிவிட்ம்.

அதாவது நீங்கள் இப்போது மியசிக் பிளேயர் என்ற செயலியை ஓப்பன் செய்ய விரும்பினால் நீங்கள் M என்ற எழுத்தை மட்டும் டிஸ்ப்ளேவில் வரைந்தால் போதும், உடனே மியூசிக் பிளேயர் செயலி ஓப்பன் ஆகிவிடும் இந்த புதிய வசதியும் இதில் இணையவுள்ளது.

மேம்படுத்தப்பட்ட VR

மேம்படுத்தப்பட்ட VR

கடந்த ஆண்டு VR என்ற புதிய அறிமுகம் டெக்னாலஜி உலகில் ஒரு புரட்சியை செய்தது என்றால் அது மிகையில்லை. குறிப்பாக HTV வைவ், பிளே ஸ்டேஷன், VR, ஸ்கேனிங் கியர் VR போன்றவை வாடிக்கையாளர்களை பெரிதும் கவர்ந்தது.

இந்நிலையில் பயனாளிகள் கனவிலும் எதிர்பார்க்காத மேம்படுத்தப்பட்ட VR இந்ட புதிய ஆண்ட்ராய்ட் 8.0வில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

முற்றிலும் பாதுகாப்பானது:

முற்றிலும் பாதுகாப்பானது:

இந்த புதிய ஆண்ட்ராய்ட் 8.0, முற்றிலும் பாதுகாப்பு அம்சங்களை கொண்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக மன்த்லி பேட்சஸ் என்று கூறப்படும் செக்யூரிட்டி அம்சம் மேம்படுத்தப்பட்ட அம்சமாக இருக்கும்

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

Best Mobiles in India

Read more about:
English summary
While half of us are spending quality time with the Android Nougat, the brain behind this are reportedly working on its next iteration that is expected to start with the Alphabet 'O'. Having said that, there really aren't many sweet names that start with 'O', except few including Oreo.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X