ரீஃபர்பிஷ்டு போன்களை வாங்க போகிறீர்களா? அதுக்கு முன்னாடி இதை படியுங்க

By Siva
|

குறைந்த விலையில் உயர்ந்த அம்சங்கள் உள்ள ஸ்மார்ட்போன்களை நீங்கள் வாங்க விரும்பினால் ரீஃபர்பிஷ்டு செய்யப்பட்ட ஸ்மார்ட்போன்களை தேர்வு செய்யலாம். அதுசரி அது என்ன ரீஃபர்பிஷ்டு செய்யப்பட்ட ஸ்மார்ட்போன். இதுகுறித்து தற்போது பார்ப்போம்.

ரீஃபர்பிஷ்டு போன்களை வாங்க போகிறீர்களா? அதுக்கு முன்னாடி இதை

ஸ்மார்ட்போனில் உள்ள சிறுசிறு குறைகள் காரணமாக உற்பத்தி நிறுவனத்திற்கு திருப்பி அனுப்பட்ட ஸ்மார்ட்போன்களை அதன் குறைகளை சரிசெய்து விற்பனைக்கு வருவதுதான் ரீஃபர்பிஷ்டு செய்யப்பட்ட ஸ்மார்ட்போன்கள். இவ்வகை போன்களை தயாரிப்பு நிறுவனம் நேரடியாக விற்பனை செய்யாது.

ரிலையன்ஸ் ஜியோவும், உங்களுக்குள் எழும் 5 கேள்விகளுக்கான விடைகளும்..!

இவற்றில் மூன்று வகைப்படும். அவை கிரேட் ஏ, கிரேட் பி, மற்றும் கிரேட் சி

ரீஃபர்பிஷ்டு போன்களை வாங்க போகிறீர்களா? அதுக்கு முன்னாடி இதை

கிரேட் ஏ என்றால் மிக மிக மெல்லிய கோளாறுகள் இருக்கும். மற்றபடி ஒரீஜினல் போன்களில் உள்ளது போன்ற அனைத்து அம்சங்களும் இருக்கும்

கிரேட் பி போனில் சிறுசிறு டேமேஜ்கள் மற்றும் சிராய்ப்புகள் இருக்கும்

கிரேட் சி போன்கள் ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட போன்கள் ஆகும்.

இவ்வகை போன்களை வாங்குவதற்கு முன்னர் நீங்கள் கவனிக்க வேண்டிய நான்கு முக்கிய குறிப்புகள்

ரீஃபர்பிஷ்டு போன்களை வாங்க போகிறீர்களா? அதுக்கு முன்னாடி இதை

இதுபோன்ற ரீஃபர்பிஷ்டு ஆக்கப்பட்ட ஸ்மார்ட்போன்களை வாங்கும்போது முதலில் நீங்கள் கவனிக்க வேண்டியது இது திருடப்பட்டதா? அல்லது கீழே இருந்து எடுக்கப்பட்டதா? என்பதுதான்.

ஜியோவில் இண்டர்நெட் வேகம் குறைவாக உள்ளதா..? சரி செய்ய தீர்வுகள்..!

மேலும் இதுபோன்ற ஸ்மார்ட்போன்களில் உள்ள அனைத்து பாகங்களும் அதற்குரிய நிறுவனங்களுக்குரியதா? என்பதை செக் செய்ய வேண்டும். குறிப்பாக வேறு நிறுவனத்தின் பேட்டரி பயன்படுத்தப்பட்டால், மொத்த போனும் டேமேஜ் ஆகிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

ரீஃபர்பிஷ்டு போன்களை வாங்க போகிறீர்களா? அதுக்கு முன்னாடி இதை

ஒவ்வொரு போனிலும் எலக்ட்ரானிக் சீரியல் நம்பர் என்ற ஒன்று இருக்கும். நீங்கள் போனை வாங்குவதற்கு முன்னர் போனின் நிறுவனத்தை தொடர்பு கொண்டு சீரியல் நம்பரை கூறினால், அந்த போன் திருடப்பட்டதா? அல்லது ரீஃபர்பிஷ்டு ஆக்கப்பட்ட ஸ்மார்ட்போனா? என்பது தெரிந்துவிடும்.

சூப்பராய் விற்பனையான சூப்பர்போன்கள் : சூப்பர் சலுகைகளோடு நன்றி தெரிவித்த நிறுவனம்.!

இதுதான் மிகவும் முக்கியமான குறிப்பு. இந்த வகை போன்களை நிறுவனம் நேரடியாக விற்பனை செய்யாது. டீலர்கள்தான் விற்பனைதான் செய்வார்கள். எனவே பெரிய மிஸ்டேக் வந்தால் மாற்றி தருவார்களா.? என்பதை கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். வாங்கிய ஒருசில நாட்களில் பழுதடைந்தால் இந்த கியாரண்டி உங்களுக்கு கைகொடுக்கும்.

Best Mobiles in India

Read more about:
English summary
One of the cost cutting way to buy your next phone is purchasing arefurbished smartphone. So what is a refurbished smartphone?

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X