மோட்டோ G4 மாடலில் ஏற்படும் புளூடூத், வைஃபை பிரச்சனைகளை தீர்ப்பது எப்படி?

மோட்டோ G4 மாடலில் ஏற்படும் புளூடூத், வைஃபை பிரச்சனைகளை தீர்ப்பது எப்படி?

By Siva
|

ஆண்ட்ராய்ட் போன்களில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் ஆண்ட்ராய்ட் 7.0 நெளக்ட் ஒருசில பிரச்சனைகளை தருகிறது என்பது குறித்தும் அவற்றை எப்படி சரி செய்வது என்பது குறித்தும் ஏற்கனவே பார்த்தோம். இதில் பலர் எதிர்கொள்ளும் ஒரு பிரச்சனை சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட நெளகட் ஆண்ட்ராய்டு போன்களுக்கு ஒருசில முக்கிய ஆப்ஸ்களை குறிப்பாக இண்டர்நெட் கனெக்சனுக்கு சப்போர்ட் செய்யாதது என்பது குறிப்பிடத்தக்கது

மோட்டோ G4 மாடலில் ஏற்படும் புளூடூத், வைஃபை பிரச்சனைகளை தீர்ப்பது எப்பட

மேலும் ஒருசில முக்கிய ஆப்ஸ்கள் செயல்படாமல் இருப்பது, ஆப் லோட் ஆக அதிக நேரம் எடுத்து கொள்வது, பேட்டரி திறனை சீக்கிரம் காலி செய்வது, கூகுள் பிளே ஸ்டோருக்கு இண்டர்நெட் கனெக்சன் கட் ஆவது போன்ற பிரச்சனைகள் ஆண்ட்ராய்ட் 7.0 நெளக்ட் ஏறபடுத்துகிறது.

மேலே கூறிய பிரச்சனைகளோடு கூடுதலாக புளூடுத் மற்றும் வைஃபை கனெக்ட் செய்வதிலும் பலருக்கு பிரச்சனை இருக்கின்றது. ஆண்ட்ராய்ட் போனுக்கு வரும் இண்டர்நெட் அவ்வப்போது கட் ஆகிவிடுவதால் மீண்டும் மேனுவல் செட்டிங் சென்று இண்டர்நெட் கனெக்சனை சரி செய்ய வேண்டிய நிலை பலருக்கு ஏறப்ட்டு வருகிறது.

அனைவரும் எதிர்பார்த்த நோக்கியா 9 புதுப்பொலிவுடன்.!

இந்த பிரச்சனன பெரும்பாலும் சமீபத்தில் அறிமுகமான மோடோரோலா மோட்டோ G4 மற்றும் மோட்டோ G4 பிளஸ் மொபைல் போன்களில் ஏற்படுகிறது. இந்த இரண்டு மொபைல் போன்களில் இந்த பிரச்சனைகளை எப்படி சரி செய்வது என்பது குறித்து தற்போது பார்ப்போம்

மோட்டோ G4 மாடலில் ஏற்படும் புளூடூத், வைஃபை பிரச்சனைகளை தீர்ப்பது எப்பட

வைபை பிரச்சனையை சரி செய்வது எப்படி?

1. பலருக்கு ஏற்படும் இண்டர்நெட் கனெக்சன் கட் ஆகும் பிரச்சனையை சரி செய்ய முதலில் உங்கள் மொபைல் போன் லேப்டாப், டேப்ளட், அல்லது வேறு ஏதேனும் சாதனங்களில் கனெட்க் செய்யப்பட்டிருக்கும்போது வைஃபை கனெக்சன் திடீரென கட் ஆனால், நீங்கள் செய்ய வேண்டிய ஒரு எளிய வழி, முதலில் வைஃபை கனெக்சனை கட் செய்ய வேண்டும். பின்னர் சில நிமிடங்கள் கழித்து மீண்டும் வைஃபையை ஆன் செய்ய வேண்டும்.

2. மேற்கண்ட முதல் ஸ்டெப் முடிந்த பின்னரும் அதே பிரச்ச்னை மீண்டும் தொடர்ந்தால் நீங்கள் செய்ய வேண்டிய அடுத்த வேலைநேராக உங்கள் நெட்வொர்க்கின் வைஃபை செட்டிங் செல்லுங்கள். அங்கு உங்கள் நெட்வொர்க்கை லிஸ்ட்டில் இருந்து டெலிட் செய்து விட்டு பின்னர் மீண்டும் உங்கள் நெட்வொர்க்கில் லாக்-ஆன் செய்து பாருங்கள்

3. மேற்கண்ட இரண்டாவது ஸ்டெப்பும் உங்களுக்கு கைகொடுக்கவில்லை என்றால் நீங்கள் அடுத்து செய்ய வேண்டியது உங்கள் ஆண்ட்ராய்டு போனை சுவிட்ச் ஆப் செய்துவிட்டு சில நிமிடங்கள் கழித்து மீண்டும் சுவிட்ச் ஆன் செய்யுங்கள்

4. மேற்கண்ட மூன்று ஸ்டெப்கள் செய்தும் பயனில்லை என்றால் உங்களுக்கு எரிச்சல் ஏற்படும் என்பதில் சந்தேகம் இல்லை. இருந்தாலும் கடைசியாக இந்த ஒரே ஒரு ஸ்டெப்பையும் செய்து பார்த்துவிடுங்கள் அது என்னவெனில் நேராக Settings -> Backup & reset -> Network settings reset செய்ய வேண்டும். இப்போது மீண்டும் நெட்வொர்க்கை கனெக்ட் செய்து பாருங்கள்

மோட்டோ G4 மாடலில் ஏற்படும் புளூடூத், வைஃபை பிரச்சனைகளை தீர்ப்பது எப்பட

புளூடூத் பிரச்சனைகளை சரிசெய்ய என்ன செய்ய வேண்டும்?

ஆண்ட்ராய்டு போனில் ஏற்படும் புளூடூத் பிரச்சனைகளை சரி செய்யவும் கிட்டத்தட்ட மேற்கண்ட வழிகள் தான் உண்டு., முதலில் ஆண்ட்ராய்டு போனுடன் இணைக்கப்பட்டுள்ள உபகரணங்களை இணைப்பில் இருந்து அகற்றிவிட்டு பின்னர் மீண்டும் இணைப்பது, போனை சுவிட்ச் ஆப் செய்துவிட்டு மீண்டும் சுவிட்ச் ஆன் செய்வது, உள்ளிட்டவற்றை செய்து பார்ப்பதுதான் இந்த பிரச்சனை சரிசெய்யும் வழிமுறைகள் ஆகும்.

மேற்கண்ட வழிமுறைகள் உங்கள் ஆண்ட்ராய்டு போனில் ஏற்படும் பிரச்சனைகளை சரி செய்ய உதவும் என்று நம்புகிறோம்

Best Mobiles in India

English summary
Are you facing some issues with your Moto G4 and Moto G4 Plus running Android 7.0 Nougat

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X