புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யும் சோனி!

By Super
|

புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யும் சோனி!
புதிய தொழில் நுட்ப வசதிகளை கொண்ட எல்டி-30 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்வதாக அறிவித்துள்ளது சோனி நிறுவனம்.

இந்த எல்டி-30 ஸ்மார்ட்போன் கிட்டதட்ட எக்ஸ்பீரியா ஜிஎக்ஸ் ஸ்மார்ட்போன் கொண்ட தொழில் நுட்ப வசதிகளை கொண்டதாக இரு்கும். இந்த எக்ஸ்பீரியா ஜிஎக்ஸ் ஸ்மார்ட்போன் கடந்த மே மாதம் அறிமுகமானது. இன்னும் வெளியிடப்படவில்லை.

எல்டி-30 ஸ்மார்ட்போன் கொடுக்கும் தொழில் நுட்ப வசதிகளின் விவரத்தினையும் பார்க்கலாம். எல்டி-30 ஸ்மார்ட்போன் ஆன்ட்ராய்டு ஐஸ் கிரீம் சான்ட்விச் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை வழங்கும்.

4.6 இஞ்ச் அகன்ற திரை வசதியினை மட்டுமல்லாது இதில் புதிய திரை தொழில் நுட்பத்தையும் பெறலாம். பிரேவியா திரை தொழில் நுட்பம் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வரயிருக்கிறது.

இந்த எல்டி-30 ஸ்மார்ட்போனின் புகைப்படங்கள் சில வலைத்தளங்களில் கசிந்துள்ளது. இதில் பார்க்கும் போது இந்த ஸ்மார்ட்போன் எக்ஸ்பீரியா ஆர்க் வடிவமைப்பை கொண்டது போல் தெரிகிறது.

எக்ஸ்பீரியா வரிசையை சேர்ந்த இந்த புதிய எல்டி-30 ஸ்மார்ட்போன் எக்ஸ்மோர்-ஆர் என்ற கேமரா சென்ஸார் தொழில் நுட்பத்தினை கொடுக்கும்.

இந்த தொழில் நுட்பத்தின் மூலம் சிறந்த துல்லியம் கொண்ட புகைப்படத்தினையும், வீடியோ ரெக்கார்டிங் கேமரா வசதியினையும் வழங்கும்.

எக்ஸ்பீரியா எல்டி-30 ஸ்மார்ட்போன் வெளியாக இன்னும் கொஞ்ச மாத கால ஆகும் என்பதால், ஆன்ட்ராய்டு ஜெல்லி பீன் ஆப்பரேட்டிங் அப்கிரேட் வசதியினை கொண்டதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சோனி எக்ஸ்பீரியா எல்டி-30 ஸ்மார்ட்போனின் விலை இன்னும் சரிவர அறிவிக்கப்படவில்லை. ஆனால் இந்த ஸ்மார்ட்போன் ரூ. 35,000 விலை கொண்டதாக இருக்கும்.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X