சான்றிதழ் தளத்தில் சிக்கிய 4000எம்ஏஎச் பேட்டரி, 5-இன்ச் சியோமி ரெட்மீ 5.!?

மேலுமொரு மர்மமான 5 இன்ச் ரெட்மீ கருவியொன்று சான்றிதழ் வலைத்தமான டிஇஎன்ஏஏ-வில் காணப்பட்டுள்ளது.

Written By:
சியோமி ஸ்மார்ட்போன்களுக்கு குறிப்பாக அதன் ரெட்மீ வரிசை கருவிகளுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளது. அதற்கு முக்கிய காரணமாக கருவியின் அம்சங்கள் மற்றும் வடிவமைப்பு அத்துடன் சேர்த்து மிகவும் சரியான விலை நிர்ணயம் கொண்டுருப்பது தான்.!

அப்படியாக ரெட்மீ ப்ரோ 2, சியோமி ரெட்மீ நோட் 4எக்ஸ் ஹட்சுனி மிக்கு பதிப்பு, சியோமி மி 5சி என பல வகையான சியோமி கருவிகள் சார்ந்த லீக்ஸ் தகவல்கள் ஆன்லைனைசுற்றி வட்டமடித்துக் கொண்டிருக்கும் நிலையில் தற்போது மேலுமொரு மர்மமான 5 இன்ச் ரெட்மீ கருவியொன்று சான்றிதழ் வலைத்தமான டிஇஎன்ஏஏ-வில் காணப்பட்டுள்ளது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

அறிமுகம்

கவனித்து பார்த்தல் கடந்த பல ஆண்டுகளை விட 2016-ல் சியோமி நிறுவனம் அதிக அளவிலான ஸ்மார்ட்போன்கள் வெளியிட்டுருப்பதை புரிந்துக்கொள்ளலாம். அதேபோல 2017-ஆம் ஆண்டின் ஆரம்பத்திலேயே சியோமி ரெட்மீ 4 எக்ஸ் கருவியை அறிமுகம் செய்து விட்டது.

டிஸ்ப்ளே

இந்த நிலையில் சியோமி நிறுவனம் இப்போது 5 இன்ச் டிஸ்ப்ளே கொண்ட மற்றொரு ஸ்மார்ட்போன் சார்ந்த வேலைகளில் ஈடுபடும் தகவல் வெளியாகியுள்ளது மற்றும் அக்கருவி சியோமி ரெட்மீ 5 கருவியாக இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ரெட்மீ 5

எனினும், இந்த 5 இன்ச் ஸ்மார்ட்போன் சார்ந்த பெயர் விவரங்கள் எதுவுமில்லை. ஆனால் சீனாவில் எல்லோரும் இக்கருவியை இப்போதே ரெட்மீ 5 என்று அழைக்கத்தொடங்கி விட்டன, ஆனால் இது வெறும் ஊகம் தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.

வடிவமைப்பு

டிஇஎன்ஏஏ (TENAA) சான்றிதழ் தளத்தில் காணப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட்போனின் படங்களை பார்க்கும் போது இக்கருவி ஒரு யூனிமெட்டல் உடல் வடிவமைப்பு கொண்டிருக்கும் அதாவது 2016-ல் வெளியான சியோமி கருவிகளை போன்றே இருக்கிறது.

பேட்டரி

மேலும் இக்கருவி ஒரு 4000எம்ஏஎச் பேட்டரி மற்றும் இரட்டை சிம் ஆதரவு கொண்ட ஒரு 5 அங்குல டிஸ்ப்ளே கருவியாக வெளியாகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், சான்றிதழ் தளத்தில் இக்கருவி எம்ஏஇ136 என்ற மாடல் நம்பருடன் காணப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க

இது ஸ்மார்ட்போன் அல்ல, ஸ்வாக் போன் - அப்படி என்னதான் இருக்கு.?

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

English summary
A mysterious 5-inch Xiaomi phone gets certified by TENAA; might be Xiaomi Redmi 5. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்