ஒப்பேற்றப்பட்ட ஒபேரா மினி : அனைவருக்கும் ஒத்துழைக்கும் முக்கிய அம்சங்கள்!!

By Meganathan
|

கூகுள் க்ரோம் மற்றும் ஆப்பிள் சஃபாரி பிரவுஸர்கள் இருந்தாலும் ஒபெரா எனும் மூன்றாம் தரப்பு பிரவுஸர் தான் இந்தியர்களுக்கு ஏற்ற ஒன்றாக இருக்கின்றது. இதனாலேயே இதன் பயன்பாடு இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரிக்கின்றது.

ஒபேரா பயன்படுத்தினால் மொபைல் டேட்டா அதிகளவு சேமிக்க முடியும் என்பது அனைவரும் அறிந்ததே. இருந்தும் ஒபேரா மினி பிரவுஸர் புதிய அப்டேட் வழங்கப்பட்டுள்ளது. இந்த அப்டேட் மூலம் பிரவுஸர் பயன்பாடு முன்பை விட வேகமாக இருப்பதோடு 90 சதவீதம் வரை டேட்டா சேமிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போட்டி

போட்டி

ஒபேரா மினி பிரவுஸர் மற்றும் யுசி பிரவுஸர் இடையே போட்டி நிலவுகின்றது. கூகுள் க்ரோம் மற்றும் ஃபயர்பாக்ஸ் போன்ற பிரவுஸர் தான் யுசி பிரவுஸர். வேகத்தை ஒப்பிடும் போது யுசி பிரவுஸரை விட ஒபேரா மினி சிறந்தது ஆகும்.

அப்டேட்

அப்டேட்

ஒபேரா மினி பிரவுஸர் கூகுள் க்ரோம் பிரவுஸரை விட 72 சதவீதமும் யுசி பிரவுஸரை விட 64 சதவீதம் வேகமாக இயங்குகின்றது. ஒபேரா மினி புதிய அப்டேட் மூலம் பல்வேறு பயனுள்ள புதிய அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. டேட்டா சேமிப்பு, விளம்பரங்களைத் தடுப்பது, வீடியோக்களை சிறப்பாக வழங்குவது போன்ற அம்சங்கள் புதிய அப்டேட் மூலம் சேர்க்கப்பட்டுள்ளன.

ஸ்பீடு டயல்

ஸ்பீடு டயல்

ஒபேரா மினி பிரவுஸரில் வழங்கப்பட்டுள்ள ஸ்பீடு டயல் அம்சம் மூலம் நீங்கள் அடிக்கடி பயன்படுத்தும் இணையதளங்களைப் பதிவு செய்து கொள்ள முடியும். பின் ஸ்பீடு டயல் மூலம் பதிவு செய்த தளத்தினை நேரடியாகவும், வேகமாகவும் ஓபன் செய்ய முடியும். இதில் எல்லையில்லா தளங்களை பதிவு செய்து கொள்ளலாம்.

வீடியோ பூஸ்ட்

வீடியோ பூஸ்ட்

ஆன்லைனில் வீடியோ பார்க்கும் போது குறைந்த இண்டர்நெட் வேகம் காரணமாக வீடியோ லோடு ஆகும். ஆனால் ஒபேரா மினியின் வீடியோ பூஸ்ட் அம்சம் வீடியோவின் அளவைக் குறைத்து லோடு ஆகாமல் வீடியோக்களை பார்க்க வழி செய்யும்.

ஷார்ட்கட்

ஷார்ட்கட்

ஒபேரா மினி பிரவுஸரில் இணையதள ஷார்ட்கட்களை ஹோம் ஸ்கிரீனில் பதிவு செய்ய முடியும், இதனால் ஹோம் ஸ்கீரினில் இருந்து நேரடியாகத் தளத்திற்கு செல்ல முடியும்.

டவுன்லோடு

டவுன்லோடு

ஆன்லைன் வீடியோக்களை நேரடியாகப் பார்ப்பதை தவிர்த்து பெரும்பாலானோரும் வீடியோக்களை டவுன்லோடு செய்யவே அதிகம் விரும்புவர். இதனாலேயே ஒபேரா பிரவுஸர் பிரத்தியேக மீடியா பிளேயர் ஒன்றை வழங்கியுள்ளது. இதைப் பயன்படுத்தி பிரபல சமூக வலைத்தளம் மற்றும் இணையதளங்களில் இருந்து வீடியோக்களை டவுன்லோடு செய்ய முடியும்.

விளம்பரம்

விளம்பரம்

இணையதளங்களைப் பயன்படுத்தும் போது கடுப்பேற்றுவதில் விளம்பரங்கள் முதன்மையானதாக விளங்குகின்றது. இதனைத் தவிர்க்கவே ஒபேரா பிரவுஸரில் ஆட் பிளாக்கர் வசதி வழங்கப்பட்டுள்ளது.

இந்திய மொழிகள்

இந்திய மொழிகள்

எல்லோராலும் ஆங்கிலத்தை எளிதாகப் பயன்படுத்த முடியாது. இதனைத் தவிர்க்கவே ஒபேரா மினி பிரவுஸரில் தமிழ், இந்தி, மலையாளம், தெலுங்கு, உள்ளிட்ட 13 மொழிகளை வழங்கப்பட்டுள்ளது.

ஆன்லைன்

ஆன்லைன்

ஒபேரா புரவுஸர் இணையதளங்களின் டேட்டா அளவினை குறைத்து இணையப் பக்கங்களின் எடையைக் குறைப்பதால் டேட்டா வேகம் குறைந்தாலும் சீரான வேகத்தில் பிரவுஸிங் செய்ய முடியும்.

நைட் மோடு

நைட் மோடு

பெரும்பாலானோரும் தூங்கும் முன் தான் கருவியை அதிகம் பயன்படுத்துகின்றனர். இதனாலேயே கருவியில் நைட் மோடு அம்சம் வழங்கப்பட்டுள்ளது. இது இரவ நேரத்திலும் கண்களை பாதிக்காது.

Best Mobiles in India

English summary
7 Surprising ways Opera Mini is better than UC browser for smartphone browsing Tamil

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X