எல்ஜி நிறுவனத்தின் புதிய வரவான எல்ஜி G6 மாடலின் சிறப்பம்சங்கள்

By Siva
|

போட்டிகள் நிறைந்த ஸ்மார்ட்போன் சந்தையில் எல்ஜி நிறுவனத்தின் தயாரிப்புகள் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை பெற்று வெற்றிநடை போட்டு வரும் நிலையில் சமீபத்தில் வெளியான எல்ஜி G5 மாடல் நல்ல வரவேற்பை பெற்றது.

எல்ஜி நிறுவனத்தின் புதிய வரவான எல்ஜி G6 மாடலின் சிறப்பம்சங்கள்

இந்நிலையில் இந்த மாடலின் அடுத்த மாடலான எல்ஜி G6 மாடல் வரும் 2017ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரூ.500, 1000/- செல்லாது டெக்னாலஜி துறை வரவேற்பு.!!

ஆனாலும் இந்த மாடல் குறித்த செய்திகளும் வதந்திகளும் தற்போது வரத் தொடங்கிவிட்டன. இந்நிலையில் இதுவரை வெளிவந்த செய்திகளை பார்ப்போம்.

ஸ்கேனர்தான் இதன் முதல் சிறப்பு

ஸ்கேனர்தான் இதன் முதல் சிறப்பு

இதுவரை கசிந்துள்ள தகவலின்படி எல்ஜி G6 மாடல் ஸ்மார்ட்போனில் செல்பி கேமிராவில் ஐரீஸ் ஸ்கேனர் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன்னர் சாம்சங் கேலக்ஸி நோட் 7 மாடலில் இருந்த இந்த ஐரிஷ் ஸ்கேனர், இதற்கு அடுத்து எல்ஜியில் இடம்பெறுகிறது.

மாடுலர் டிசைனுக்கு விடுதலை

மாடுலர் டிசைனுக்கு விடுதலை

இதற்கு முன்னர் வெளியான எல்ஜி 5 மாடல் ஸ்மார்ட்போன் முதல் மாடுலர் டிசைன் என்ற பெருமையை பெற்ற நிலையில் எல்ஜி G6 மாடல் ஸ்மார்ட்போன் மாடுலர் டிசைனில் இருந்து வேறுபட்ட டெக்னாலஜியில் அமைந்துள்ளதாக தெரிகிறது. மாடுலர் டிசைனுக்கு பெரிய அளவில் வரவேற்பு இல்லாததால் இந்த வேறுபாடு என்று கூறப்பட்டாலும் இந்த புதிய டெக்னாலஜி டிசைன் அடுத்த தலைமுறை இளைஞர்களுக்காக உருவாக்கப்பட்டதாக எல்ஜி நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர்.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

மொபைல் பேமெண்ட் வசதி

மொபைல் பேமெண்ட் வசதி

எல்ஜி நிறுவனம் கடந்த ஒரு வருடமாக மொபைல் பேமெண்ட் வசதியை பயன்படுத்தி வரும் நிலையில் MST டெக்னாலஜி மூலம் எல்ஜி G6 மாடல் ஸ்மார்ட்போன் மொபைல் பேமெண்ட் வசதியை உள்ளடக்கி உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. எல்ஜி பேமெண்ட் வசதியுடன் வெளிவரவுள்ள இந்த மாடலுக்கு வாடிக்கையாளர்கள் பெரும் ஆதரவு தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

4K டிஸ்ப்ளே உண்டா?

4K டிஸ்ப்ளே உண்டா?

எல்ஜி நிறுவனத்தின் முந்தைய தயாரிப்பான எல்ஜி G5 மாடலில் 5.3 இன்ச் அளவில் 2K டிஸ்ப்ளே மட்டுமே இருந்தது. ஆனால் இதன் அடுத்த தயாரிப்பான எல்ஜி G6 மாடல் ஸ்மார்ட்போனில் 4K டிஸ்ப்ளேவை பெற்றுள்ளது என்று உறுதியாக நம்பப்படுகிறது.

எல்ஜி G6 மாடல் ஸ்மார்ட்போனின் பிராஸசர் விபரங்கள்

எல்ஜி G6 மாடல் ஸ்மார்ட்போனின் பிராஸசர் விபரங்கள்

எந்த ஒரு மாடலுக்கும் பிராஸசர் தகவல் மிக முக்கியமானது. வெளிப்புற அழகை காட்டிலும் உள்புறத்தில் உள்ள பிராஸசர் விஷயங்களுக்குத்தான் வாடிக்கையாளர்கள் முக்கியத்துவம் கொடுப்பார்கள். அந்த வகையில் எல்ஜி G6 மாடல் ஸ்மார்ட்போனில் 7.0 நெளகட் உடன் எல்ஜி வ்20 சாப்ட்வேர் அடங்கியுள்ளது.

மேலும் எல்ஜி G6 மாடல் ஸ்மார்ட்போனில் குவால்கோமின் புதிய அறிமுகமான ஸ்னாப்டிராகன் 830 CPU உள்ளதால் ஹார்டுவேரை பொருத்தவரையில் அதிக பலன் தரக்கூடியதாக உள்ளது.

புதிய டேப்ளெட் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

Best Mobiles in India

Read more about:
English summary
LG G6 will not be a modular smartphone but will have some exciting tricks under its sleeve.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X