தனிச்சிறப்பு போன்களை கூடுதலாக வைத்திருப்பதால் ஏற்படும் பயன்கள்

ஸ்மார்ட்போன் இருக்கட்டும். இந்த சிறப்பு போனையும் வைத்து கொள்ளுங்கள்

By Siva
|

ஸ்மார்ட்போன் என்பது இன்றைய மனித வாழ்க்கையில் இன்றியமையாத ஒன்றாகிவிட்டது. அதிலும் நாளுக்கு நாள் டெக்னாலஜி வளர்ச்சி காரணமாக ஸ்மார்போன்களும் பல்வேறு வடிவங்களில் வெளிவந்து கொண்டிருக்கின்றது. இன்றைய தேதியில் ஸ்மார்ட்போன் இல்லாதவர்கள் கிட்டத்தட்ட இல்லை என்று கூறலாம்.

தனிச்சிறப்பு போன்களை கூடுதலாக வைத்திருப்பதால் ஏற்படும் பயன்கள்

ஆனாலும் ஸ்மார்ட்போன் வைத்திருப்பவர்களில் பாதிபேர் இரண்டாவதாக பேசிக் போன்கள் என்று கூறப்படும் தனிச்சிறப்பு போன் ஒன்றையும் வைத்திருக்கின்றனர் என்று ஆய்வின் முடிவு ஒன்று கூறுகின்றது.

கால் பேசுவதறும், டெக்ஸ்ட் எஸ்.எம்.எஸ் அனுப்புவதற்கு மட்டும் இவ்வகை தனிச்சிறப்பு போன்களை பலர் பயன்படுத்துவதாக தெரிகிறது. பேசும்போதோ, அல்லது எஸ்.எம்.எஸ் டைப் செய்யும்போதோ பேசிக் போனில் எந்தவிதமான இடையூறும் இன்றி நிம்மதியாக செயல்பட முடிகிறது என்பதே பலரின் கருத்தாக உள்ளது.

எலிக்கு பயந்தால் ஒரு நியாயம் இருக்கு, இதுக்கு பயந்தா எப்பிடி.?

இந்தியாவில் 59.9 மில்லியன் பேசிக் போன்கள் பயன்படுத்தப்படுவதாக கடந்த ஆண்டு எடுக்கப்பட்ட ஆய்வு ஒன்று கூறுகிறது. மேலும் இந்தியாவில் 55.2% பேர்கள் இரண்டாவதாக ஒரு போனை பயன்படுத்தி வருகின்றனர் என்பதும் அந்த ஆய்வில் இருந்து தெரியவருகிறது.

நீங்களும் ஸ்மார்ட்போனுடன் ஒரு தனிச்சிறப்பு போனை பயன்படுத்த போகிறீர்களா? அப்படியென்றால் அதன் பயன் என்ன என்பது குறித்தும் தெரிந்து கொள்ளுங்கள்

பேட்டரியை பாதுகாக்கலாம்:

பேட்டரியை பாதுகாக்கலாம்:

வெளியூருக்கு பயணம் செய்யும்போது அல்லது சுற்றுலா செல்லும்போது பேசுவதற்கென ஒரு தனி போன் இருந்தால், உங்கள் ஸ்மார்ட்போனின் உபயோகம் பாதியாக குறைந்துவிடும்.

சார்ஜ் செய்ய முடியாத நிலையிலோ அல்லது பவர் பேங்க் இல்லாத நிலையிலும் உங்களால் தங்கு தடையின்றி அனைவரிடமும் தொடர்பு கொள்ள முடியும். ஏனெனில் தனிச்சிறப்பு போன்கள் இரண்டு முதல் மூன்று நாட்கள் வரையில் சார்ஜ் நிற்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

விலை குறைவு மற்றும் பயன்படுத்துவது எளிது

விலை குறைவு மற்றும் பயன்படுத்துவது எளிது

பொதுவாக இவ்வகை தனிச்சிறப்பு போன்கள் ரூ.1200 முதல் 1500 ரூபாய்க்குள் வாங்கிவிடலாம். இதற்காக பெரிய பட்ஜெட் தேவையில்லை. அதேபோல் அதிகப்படியான கேட்ஜெட் தேவையில்லை என்பதோடு கையில் கொண்டு செல்வதும் மிக எளிது. கூடுதலாக எடை இருக்குமே என்ற உணர்வே இல்லாமல் கையாள்வதும் எளிதாக இருக்கும்

றவுகளுக்குள் ஒரு நல்ல புரிதல்

றவுகளுக்குள் ஒரு நல்ல புரிதல்

ஸ்மார்ட்போன்கள் பலவழிகளில் உபயோகமாக இருந்தாலும், சமூக வலைத்தளங்கள் நம்முடைய பெரும்பாலான நேரத்தை சாப்பிட்டு விடுகின்றன. ஆனால் தனிச்சிறப்பு போனில் இந்த பிரச்சனை தோன்ற வாய்ப்பே இல்லை.

மேலும் வாட்ஸ் அப் மற்றும் சேட்டிங் மூலம் ஒரு கருத்தை தெரிவிப்பதை விட அதே கருத்தை நேரில் சொன்னால் அதன் பயனே தனி என்பதை உணர வைக்கும் இந்த தனிச்சிறப்பு போன்கள். மேலும் உறவுகளுக்குள் ஒரு நல்ல புரிதல் ஏற்படும்.

வலிமையானது

வலிமையானது

ஸ்மார்ட்போன்கள் மென்மையானது. சின்னதாக ஏதாவது ஒரு உரசலோ அல்லது கீழே போட்டாலோ அவ்வளவுதான். போன் குப்பைத்தொட்டிக்கு போகும் அல்லது ஆயிரக்கணக்கில் செல்வை இழுத்துவிடும்.

ஆனால் தனிச்சிறப்பு போன்களால் இந்த பிரச்சனை இல்லை. நல்ல வலிமையாக இருக்கும். அப்படியே ஒருவேளை டேமேஜ் ஆனால் அதை ரிப்பேர் செய்ய ஆகும் செலவு ரொம்ப குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.

ஆப்ஸ்களும் உண்டு

ஆப்ஸ்களும் உண்டு

ஒருசில தனிச்சிறப்பு வாய்ந்த போன்களில் ஸ்மார்ட்போன்களில் உள்ள முக்கிய ஆப்ஸ்களையும் கொண்டுள்ளது. MP3 பிளேயர், கேமிரா, ஃபேஸ்புக், யூடியூப் ஆகியவற்றை கொண்டுள்ளது. மேலும் லாவா சமீபத்தில் வெளியிட்டுள்ள தனிச்சிறப்பு போன்களில் 4G சப்போர்ட் செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
The growth of Smartphone in the tech industry has rapidly increased with the implementation of new technologies.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X