ஒன் ப்ள்ஸ் 3T மாடலை தவிர்த்துவிட்டு ஒன் ப்ளஸ் 4 மாடல் வரும் வரை காத்திருக்க 4 காரணங்கள்ள்

By Siva
|

இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ள புதுவரவான ஒன்ப்ளஸ் நிறுவனம் வாடிக்கையாளர்களின் ஆரம்பகட்ட நம்பிக்கையை பெற்றுள்ள நிலையில் விரைவில் ஒன் ப்ள்ஸ் 3T மாடல் ஸ்மார்ட்போனை வெளியிடவுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் விலை சுமார் ரூ.32000 என்ற நிலை உள்ளது.

ஒன் ப்ள்ஸ் 3T மாடலை தவிர்த்துவிட்டு ஒன் ப்ளஸ் 4 மாடல் வரும் வரை காத்தி

இவ்வளவு பெரிய தொகை கொடுத்து வாங்கும்போது இது ஒன் ப்ளஸ் 3 மாடலை விட ஒருசில மாற்றங்களே உள்ளதை வாடிக்கையாளர்கள் விரும்புவார்களா? அல்லது ஒன்ப்ளஸ் 4 மாடல் வரும் வரை காத்திருப்பார்களா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

வாய் பிளக்க வைக்கும் நோக்கியா ப்ரிஸம் கான்செப்ட், கலக்குறீங்க ஜி..!

ஏனெனில் விரைவில் வெளிவரவுள்ள ஒன் ப்ளஸ் 4 மாடல் ஆப்பிள் ஐபோனுக்கும் சாம்சங் S8 மாடலுக்கும் சவால் விடும் வகையில் தயாரிக்கப்பட்டு வருவதாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன

ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் இண்டர்நெட் வேகம் அதிகரிக்க வேண்டுமா? இதோ 5 சுலப வழிகள்

எனவே ஒன் ப்ள்ஸ் 3T மாடல் ஸ்மார்ட்போனை தவிர்த்துவிட்டு ஒன் ப்ளஸ் 4 மாடல் வரும் வரை காத்திருப்பதற்கு என்ன காரணங்கள் என்பதை தற்போது பார்ப்போம்

ஸ்னாப்டிராகன் 821ஐ தவிர்த்துவிட்டு ஸ்னாப்டிராகன் 830ஐ வாங்குவது நல்லது தானே?

ஸ்னாப்டிராகன் 821ஐ தவிர்த்துவிட்டு ஸ்னாப்டிராகன் 830ஐ வாங்குவது நல்லது தானே?

இதுவரை வெளிவந்துள்ள செய்திகளின்படி ஒன்ப்ளஸ் 3T மாடல் ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 821 சிப்செட் தான் உள்ளது என்றும் ஆனால் அதே நேரத்தில் ஒன் ப்ளஸ் 4 மாடல் ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 830 சிப்செட் உள்ளது என்றும் தெரிய வருகிறது. மேலும் இந்த ஒன் ப்ளஸ் 4 மாடல் 2017ஆம் ஆண்டின் டெக்னாலஜியை கொண்டது. நிச்சயமாக ஸ்னாப்டிராகன் 830 சிப்செட் அடுத்த தலைமுறையினர்களுக்காக உருவாக்கப்பட்டது என்பதால் நிச்சயம் ஒருசில மாதங்கள் காத்திருப்பதில் தவறே இல்லை.

ஆண்ட்ராய்டு 7.0 நெளகட்:

ஆண்ட்ராய்டு 7.0 நெளகட்:

அடுத்த இளையதலைமுறையினர்களுக்கு என உருவாக்கப்பட்டு வரும் ஒன் ப்ளஸ் 4 மாடல் ஸ்மார்ட்போனில் நிச்சயம் ஆண்ட்ராய்டு 7.0 நெளகட் இருக்கும் என உறுதியாக நம்பப்படுகிறது. எனவே அடுத்த வருடம் கோடையில் அல்லது ஜூன், ஜூலை மாதங்களில் வெளிவரும் இந்த ஒன் ப்ளஸ் 4 மாடல் ஸ்மார்ட்போனை வெயிட் பண்ணி வாங்குவதே புத்திசாலித்தனம். ஒன்ப்ளஸ் 3T மாடலும் ஆண்ட்ராய்டு 7.0 நெளகட் தான் என்றாலும் காத்திருப்பது நல்லது என்றே தோன்றுகிறது.

பெரிய பேட்டரி காரணமாக அதிக பவர் கொண்டது

பெரிய பேட்டரி காரணமாக அதிக பவர் கொண்டது

ஒன் ப்ளஸ் 4 மாடல் ஸ்மார்ட்போனில் நிச்சயம் 4,000mAh இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே சார்ஜ் இல்லை என்ற பிரச்சனை வர வாய்ப்பே இல்லை. மேலும் இந்த போனில் ஸ்னாப்டிராகன் 830 சிப்செட் அமைந்துள்ளதால் அதிக பவர் தானாகவே பெற்றுவிடும் தன்மை உடையது.

அடுத்த தலைமுறையினர்களுக்கு என தயாராகும் கேமிரா

அடுத்த தலைமுறையினர்களுக்கு என தயாராகும் கேமிரா

ஒன் ப்ளஸ் 4 மாடல் ஸ்மார்ட்போனில் அடுத்த இளையதலைமுறை இளைஞர்களை மனதில் கொண்டு தயாரிக்கப்படுவதால் கேமிராவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. ஒன்ப்ளஸ் 3T மாடல் கேமிராவை ஒப்பிடும்போது நிச்சயம் ஒன் ப்ளஸ் 4 மாடல் ஸ்மார்ட்போனில் அதிநவீன வசதியுடன் கூடிய கேமிராதான் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பெரிய பட்ஜெட் போன்களாக ஆப்பிள் ஐபோன்கள் போலவே இதில் டூயல் பின் கேமிரா இருக்கும் என்று இதுவரை வெளிவந்த செய்திகள் கூறுகின்றன.

மேற்கண்ட தகவல்கள் அனைத்தும் இதுவரை வெளியான வதந்திகளில் இருந்து பெற்றவைதான். இருப்பினும் இந்த போனில் உள்ள உண்மையான அம்சங்களை இந்த போன் வெளிவந்த பின்னர் விமர்சனம் செய்வோம்.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

Best Mobiles in India

English summary
Here are 4 reasons why you should skip the OnePlus 3T, an upgraded version of the OnePlus 3 and wait for OnePlus 4 instead.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X