2.5D கண்ணாடி டிஸ்ப்ளே என்றால் என்ன? அதன் சிறப்பம்சங்கள் யாவை?

2.5D கண்ணாடி டிஸ்ப்ளே என்பது ஸ்மார்ட்போனின் நுனியில் வளைந்து இருப்பது போன்ற தோற்றத்தை தரும்.

By Siva
|

புதியதாக ஒரு ஸ்மார்ட்போன் வாங்கும்போது அனைவரும் முதலில் கவனிப்பது டிஸ்ப்ளே தான். கடந்த சில வருடங்களாக சாதாரண டிஸ்ப்ளே வந்து கொண்டிருந்த நிலையில் சமீபத்தில் கிட்டத்தட்ட அனைத்து முன்னணி ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர்களும் 2.5D கண்ணாடி டிஸ்ப்ளேவை பயன்படுத்துகின்றனர்.

2.5D கண்ணாடி டிஸ்ப்ளே என்றால் என்ன? அதன் சிறப்பம்சங்கள் யாவை?

வாடிக்கையாளர்களே 2.5D கண்ணாடி டிஸ்ப்ளே உள்ள மாடலை கேட்டு வாங்கும் அளவுக்கு இந்த டிஸ்ப்ளே புகழ் பெற்றுவிட்டது.

2017-ல் இதெல்லாம் அப்படியே நடந்தால் ரொம்ப நல்லாயிருக்கும்.!?

அப்படி என்னதான் இருக்கின்றது இந்த 2.5D கண்ணாடி டிஸ்ப்ளேவில். சாதாரண டிஸ்ப்ளேவுக்கும் இந்த 2.5D கண்ணாடி டிஸ்ப்ளேவுக்கும் என்ன வித்தியாசம். இதுகுறித்து தற்போது பார்ப்போம்

2.5D கண்ணாடி டிஸ்ப்ளே என்றால் என்ன? அதன் சிறப்பம்சங்கள் யாவை?

2.5D கண்ணாடி டிஸ்ப்ளே என்றால் என்ன?

2.5D கண்ணாடி டிஸ்ப்ளே என்பது ஸ்மார்ட்போனின் நுனியில் வளைந்து இருப்பது போன்ற தோற்றத்தை தரும். அதற்காக ஸ்மார்ட்போனில் வளைவு இருக்கும் என்பது அர்த்தமல்ல. ஆனால் அதே நேரத்தில் ஓரத்தில் சற்று வளைவாக கண்ணுக்கு தெரியும் வகையில் இந்த கண்ணாடி டிஸ்ப்ளே அமைக்கப்பட்டிருக்கும்

7000mAh லித்தீயம் பேட்டரியுடன் ஜியோனி நிறுவனத்தின் M2017 அறிமுகம்.

2.5D கண்ணாடி டிஸ்ப்ளே என்பது திரையில் நமக்கு 2D உருவத்தை பிரதிபலிக்கும். ஆனால் அதே நேரத்தில் இந்த டிஸ்ப்ளே நமக்கு 90டிகிரி தோற்றத்தை ஏற்படுத்தாது. இவ்வகை டிஸ்ப்ளே கொண்ட ஸ்மார்ட்போன்கள் கையாள்வதற்கு ஸ்மூத் ஆக இருக்கும். சியாமி மி மேக்ஸ், ஹூவாய் ஹானர் 8, ஆப்பிள் ஐபோன் 7, 7 பிளஸ் போன்ற மாடல்களில் இவ்வகை டிஸ்ப்ளே கோர்னிங் கிளாஸ் உடன் அமைந்துள்ளது.

2.5D கண்ணாடி டிஸ்ப்ளே என்றால் என்ன? அதன் சிறப்பம்சங்கள் யாவை?

2.5D vs 3D டிஸ்ப்ளே

2.5D கண்ணாடி டிஸ்ப்ளேவுக்கும் 3D டிஸ்ப்ளேவுக்கு ஒரே ஒரு வித்தியாசம்தான். 2.5D கண்ணாடி டிஸ்ப்ளேவில் ஸ்மார்ட்போனின் நுனி வளைந்தது போன்று தோற்றமளித்தாலும் அதில் வளைவுகள் இல்லை. மேலும் இது 2D பிம்பங்களையே நமக்கு பிரதிபலிக்கும்.

ஆனால் 3D டிஸ்ப்ளேவில் ஸ்மார்ட்போனின் நுனி உண்மையிலே வளைந்து காணப்படுவதோடு அதில் 3D டெக்னாலஜியும் அடங்கியிருக்கும். எனவே நமக்கு பிம்பங்கள் 3D எஃபெக்டில் கிடைக்கும். சாம்சங் கேலக்ஸி நோட் இதற்கு நல்ல உதாரணம்

ஆக 2.5D கண்ணாடி டிஸ்ப்ளேவால் எந்தவித டெக்னாலஜி நன்மையும் இல்லை. பார்ப்பதற்கு ஒரு அழகிய தோற்றத்தை மட்டுமே இந்த டிஸ்ப்ளே தருகிறது.

இந்த டிஸ்ப்ளேவுக்காக பெரிய சைஸ் கண்ணாடிகள் முதலில் சால்ட் கரைசலில் வெப்பப்படுத்தப்படுகின்றன. உயர்ந்த வெப்பநிலையில் வெப்பப்படுத்தப்பட்டவுடன் பின்னர் குளிர்விக்கப்படுகிறது. இதனால் கண்ணாடிக்கு உறுதித்தன்மை கிடைக்கின்றது. பின்னர் அவை ஸ்மார்ட்போன் அளவுக்கு தகுந்தவாறு உருவாக்கப்படுவதால் பயன்படுத்துவதற்கு ஸ்மூத் ஆக உள்ளது.,

என்ன நன்மைகள்:

2.5D கண்ணாடி டிஸ்ப்ளேவுடன் கொண்ட மாடல் அழகிய தோற்றத்தை ஏற்படுத்தி தருவதால் மார்க்கெட்டிங் செய்ய ஏதுவாக உள்ளது. எனவேதான் பெரும்பாலான ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் 2.5D கண்ணாடி டிஸ்ப்ளே கொண்ட போன்களை தயாரிக்கின்றன.

இந்த 2.5D கண்ணாடி டிஸ்ப்ளே மாடல் ஸ்மார்ட்போனில் போன் பாடியுடன் மிகச்சரியாக பொருந்துவதால் கிட்டத்தட்ட பெஸல் லெஸ் மாடல் போலவே தோற்றம் அளிக்கினாது.

பிரச்ச்னை ஏதாவது உண்டா?

இந்த 2.5D கண்ணாடி டிஸ்ப்ளேவால் ஒரே ஒரு சிறு பிரச்சனைதான். என்னவெனில் டிஸ்ப்ளேவை கூடுதல் கவனத்துடன் பாதுகாக்க வேண்டும் என்பதுதான்.

மொத்ததில் 2.5D கண்ணாடி டிஸ்ப்ளே பெரும்பாலான வாடிக்கையாளர்கள் ஏற்றுக்கொண்ட ஒரு அம்சம் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

Best Mobiles in India

English summary
Here's the reason why Samsung, Xiaomi, Apple and other companies are using the 2.5D glass display on their smartphones.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X