சியோமி ரெட்மி நோட் 3 போனை விடச் சிறந்த போன் ஒன்னு இருக்கு.!

By Meganathan
|

ஹூவாய் நிறுவனத்தின் ஹானர் பிரான்டு அதிரடி கருவிகளை அட்டகாச விலையில் வெளியிட்டு இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் வேகமாக வளர்ந்து வருகின்றது. அத்தகைய நிறுவனத்தின் சமீபத்திய வெளியீடு தான் ஹானர் 5சி. இந்தியாவில் ரூ.10,999 என்ற விலைக்கு அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் ஹானர் 5சி பல்வேறு அட்டகாசமான அம்சங்களைக் கொண்டுள்ளது.

சியோமி ரெட்மி நோட் 3 போனை விடச் சிறந்த போன் ஒன்னு இருக்கு.!

இந்த விலையில் ஹானர் 5சி மற்றும் சியோமி ரெட்மி நோட்3 கருவிகள் அதிகளவு ஒற்றுமையான அம்சங்கள் தான் கொண்டிருக்கின்றன. எனினும் இவை இரண்டிலும் எந்தக் கருவி சிறந்தது என்பதை அதன் அம்சங்கள் மூலம் விவரித்திருக்கின்றோம்.

ஹானர் 5சி அல்லது சியோமி ரெட்மி நோட்3 எந்தக் கருவி சிறந்தது என்பதை ஸ்லைடர்களில் தெரிந்து கொள்ளுங்கள்.

மெட்டல் பாடி

மெட்டல் பாடி

ஹானர் 5சி கருவியானது ஏர்கிராஃப்ட்-கிரேடு கொண்ட அலுமினியம்-அல்லாய் மூலம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்தக் கருவி விலை உயர்ந்த கருவி போன்ற தோற்றம் பெற்றிருக்கின்றது. சியோமி கருவியும் மெட்டல் வடிவமைப்பே கொண்டிருக்கின்றது.

டிஸ்ப்ளே

டிஸ்ப்ளே

ஹானர் 5சி கருவியானது 5.2 இன்ச் ஃபுல் எச்டி ஐபிஎஸ் டிஸ்ப்ளே 1920*1080 பிக்சல் ரெசல்யூஷன் கொண்டுள்ளது. இதே ரெட்மி நோட் 3 கருவியில் FHD டிஸ்ப்ளே மற்றும் 1080 பிக்சல் ரெசல்யூஷன் கொண்டுள்ளது.

ஹார்டுவேர்

ஹார்டுவேர்

ஹானர் 5சி கருவியின் முக்கிய அம்சமாகக் கிரின் 650 SoC மற்றும் ஆக்டா கோர் சிபியு இருக்கின்றது. இது 16nm திறன் கொண்ட பிராசஸிங் வழங்குகின்றது. இது குவால்காம் ஸ்னாப்டிராகன் 615 பிராசஸரை விடத் திறன் கொண்டதாகும். சியோமி ரெட்மி நோட் 3 கருவியில் ஹெக்சா-கோர் ஸ்னாப்டிராகன் 801 பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது.

மெமரி

மெமரி

ஹானர் கருவியில் 2 ஜிபி ரேம் மற்றும் 16 ஜிபி இன்டர்னல் மெமரி வழங்கப்பட்டுள்ளது. இதோடு மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. ரெட்மி நோட் 3 கருவியானது 2ஜிபி ரேம் மற்றும் 16 ஜிபி இன்டர்னல் மெமரியும், மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.

கேமரா

கேமரா

ஹானர் 5சி கேமராவை பொருத்த வரை 13 எம்பி ப்ரைமரி கேமரா, எல்இடி பிளாஷ் மற்றும் 8 எம்பி முன்பக்க கேமராவும் வழங்கப்பட்டுள்ளது. ரெட்மி நோட் 3 கருவியில் 5 எம்பி செல்பீ கேமரா வழங்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு

பாதுகாப்பு

ஹானர் 5சி கருவியில் சேமிக்கப்படும் தரவுகளைப் பாதுகாக்க கைரேகை ஸ்கேனர் வழங்கப்பட்டுள்ளது. இதே அம்சம் ரெட்மி நோட் 3 கருவியிலும் வழங்கப்பட்டுள்ளது. இருந்தும் ஹானர் கருவியில் வழங்கப்பட்டுள்ள கைரேகை ஸ்கேனர் வேகமாக இயங்கும் திறன் கொண்டிருக்கின்றது.

இயங்குதளம்

இயங்குதளம்

ஹானர் 5சி கருவியானது ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மல்லோ இயங்குதளம் மற்றும் மேம்படுத்தப்பட்ட அம்சங்களை வழங்கும் EMUI 4.1 கொண்டிருக்கின்றது, ரெட்மி நோட்3 கருவியில் பழைய ஆணட்ராய்டு இயங்குதளம் மற்றும் MIUI 7 வழங்கப்பட்டுள்ளது.

பேட்டரி

பேட்டரி

ஹானர் 5சி கருவியில் 3000 எம்ஏஎச் பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. மேலும் இதன் கிரின் 650 பிராசஸர் கூடுதல் பேட்டரி பேக்கப் வழங்க வழி செய்யப்பட்டுள்ளது. ரெட்மி நோட் 3 கருவியில் 4000 எம்ஏஎச் திறன் கொண்ட கழற்ற முடியாத பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.

கனெக்டிவிட்டி

கனெக்டிவிட்டி

ஹானர் 5சி கருவியானது 4ஜி எல்டிஇ வசதி கொண்ட டூயல் சிம் ஸ்லாட் கொண்டுள்ளது. இதோடு வை-பை, GPS/AGPS, மைக்ரோ எஸ்டி ஸ்லாட், யுஎஸ்பி டைப்-சி போர்ட் கொண்டுள்ளது. ரெட்மி நோட் 3 கருவியானது டூயல் சிம் மற்றும் 4ஜி அம்சம் வழங்கப்பட்டுள்ளது.

வடிவமைப்பு

வடிவமைப்பு

ஹானர் 5சி கருவியானது குறைந்த எடை மற்றும் கையில் இருந்து நழுவாத படி வடிவமைக்கப்பட்டுள்ளது. ரெட்மி நோட் 3 கருவி சற்றே பெரியதாக இருப்பதால் பயன்படுத்த சிரமம் அளிக்கின்றது.

Best Mobiles in India

English summary
10 ways Honor 5C is better than Xiaomi Redmi Note 3 Tamil

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X