ஸ்மார்ட் போன் மூலம் சூப்பரான போட்டோக்களை எடுக்க 10 சிறந்த வழிமுறைகள்

By Meganathan
|

இன்னைக்கு தேதியில போட்டோகிராப்பி என்ற விஷயம் ரொம்ப எளிதாகியிருக்கு என்று தான் சொல்லனும். சந்தையில் வெளியாகும் ஒவ்வொரு புதிய மாடல் ஸ்மார்ட் போனிலும் கேமரா அம்சங்கள் சிறப்பாக மேம்படுத்தப்படுவது இந்த விஷயத்தை மேலும் சுலபமாக்கியுள்ளது அனைவரும் அறிந்ததே.

#1

#1

ஒரு போட்டோவை எடுத்து முடிக்கும் வரை போனை அசையாமல் பிடித்து கொள்ளுங்கள். போட்டோ எடுக்கும் போது போன் அசைந்தால் போட்டோ நன்றாக இருக்காது.

#2

#2

முடிந்த வரை டிஜிட்டல் ஜூம் ஆப்ஷனை பயன்படுத்தாதீர்கள், முடிந்த வரை போட்டோ அருகில் சென்று படமாக்குங்கள் அல்லது போட்டோ எடுத்து முடித்தவுடன் க்ராப் செய்து கொள்ளுங்கள்.

#3

#3

எப்ப போட்டோ எடுத்தாலும் கேமரா செட்டிங்ஸ் சென்று அதிக ரெசல்யூஷனை பயன்படுத்துங்கள். இது உங்க கேமராவின் அதிக பட்ச போட்டோ க்வாலிட்டியை கொடுக்கும்.

#4

#4

உங்க ஸ்மார்ட் போன் கேமரா சீக்கிரமாகவே தூசு படுவதால் அவ்வபோது கேமராவை சுத்தம் செய்ய வேண்டும்.

#5

#5

நீங்க எடுக்கும் போட்டோவில் சரியான வெளிச்சம் இருக்கின்றதா என்று பார்த்து கொள்ளுங்கள், இல்லையென்றால் போட்டோ ப்ரேம் நடுவில் அழுத்துங்கள் இது துள்ளியமான போட்டோவை கொடுக்கும்.

#6

#6

போட்டோவை கம்போஸ் செய்யும் போது எல்லா பக்கமும் சரியான இடைவெளி கொடுக்கப்பட்டுள்ளதா என்று பாருங்கள்

#7

#7

எல்லா வகை போன்களிலும் கேமரா மோடு ஆப்ஷன் இருக்கும், உங்க போன் கேமராவின் மோட்களையும் நன்கு அறிந்து கொள்ளுங்கள், நல்ல போட்டோ எடுக்க இது நிச்சயம் உதவும்.

#8

#8

ஆன்டிராய்டு மற்றும் விண்டோஸ்களில் கிடைக்கும் கேமரா அப்ஸை பயன்படுத்தி வித்தியாசமான படங்களை எடுக்க முடியும்.

#9

#9

எப்பவும் ஒரே இடத்தை பல முறை போட்டோ எடுத்துகொள்ளுங்கள், ஒரு போட்டோ சொதப்பினாலும் மற்றொரு போட்டோ உதவும்.

#10

#10

எடுத்த போட்டோக்களை முடிந்த வரை எடிட் செய்யலாம் ஆனால் போட்டோவின் உண்மை நிலை மாறாமல் பார்த்து கொள்ளுங்கள்.

அந்த வகையில் இன்று ஸ்மார்ட் போன் போட்டோகிராப்பி ரொம்ப பிரபலமாகியிருக்கு என்பதில் எந்த மறுப்பும் இருக்க முடியாது. எல்லா விசேஷங்களுக்கும் ஸ்மார்ட் போன் மூலமாகவே போட்டோகிராப்பி வேலையை முடிப்பவர்களும் இருக்க தான் செய்கின்றனர்.

இங்கு நீங்க பார்க்க போவது ஸ்மார்ட் போன் போட்டோகிராப்பியை எளிமையான முறையில் அபாரமாக செய்திட வைக்கும் 10 எளிய வழிமுறைகளை தான். அந்த சூப்பர் ஐடியாக்களை ஸ்லைடர்களில் பாருங்க

Best Mobiles in India

Read more about:
English summary
These tips and tricks on smartphone photography will help you a lot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X