சாம்சங் கேலக்ஸி நோட் 5-ல் உள்ள கேமிராவின் 10 சிறப்பம்சங்கள்

By Super Admin
|

கடந்த ஆண்டு சாம்சங் நிறுவனம் வெளியிட்ட மாடல்களில் சந்தேகமே இல்லாமல் சாம்சங் கேலக்ஸி நோட் 5 மிகச்சிறந்தது என்று கூறலாம். இந்தியாவில் இதன் விலை ரூ46,496 (32GB) ரூ. 55,900 (64GB) என்றாக உள்ளது.

இந்த ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சம் இதன் கேமிராதான். அதிகப்படியான சூரிய வெளிச்சத்திலும், ஒளி குறைவான இருட்டு நேரத்திலும் இந்த போனின் கேமரா மிக அபாரமான படங்களை எடுக்கும் தன்மை கொண்டது.

எல்லா 4ஜி ஸ்மார்ட்போன்களுக்கும் இலவச ரிலையன்ஸ் ஜியோ சிம் கார்டு பெறுவது எப்படி??


16 எம்.பி ரியர் சென்சார் உள்ள பின்புற கேமிராவும், 5 எம்.பி செல்பி எடுக்கும் முன்புர கேமிராவும் உள்ள மொபைல்போனில் எடுக்கப்படும் துல்லியமான புகைப்படங்கள் குறித்து தற்போது பார்ப்போமா!!

சாம்சங் கேலக்ஸி நோட் 5-ல் உள்ள கேமிராவின் 10 சிறப்பம்சங்கள்

1. டபுள் பிரஸ் செய்தால் கேமிரா ஒர்க் ஆகும்:

கேமிராவை ஆன் செய்ய மற்ற போன்கள் போல் தேடவேண்டிய அவசியமில்லை. ஹோம் பட்டனை டபுள் பிரஸ் செய்தால் போதும். கேமிரா ஆன் ஆகிவிடும். உடனே நீங்கள் கேமராவை இயக்கலாம்.

சாம்சங் கேலக்ஸி நோட் 5-ல் உள்ள கேமிராவின் 10 சிறப்பம்சங்கள்

2. புரோ மோட்-இல் படம் எடுக்க வேண்டுமா ப்ரோ!!

இந்த மொபைல் மூலம் புரோ மோட்-இல் படம் எடுக்க விரும்பினால் ஜஸ்ட் மோட்-ஐ ஒரு நகர்த்து நகர்த்தி புரோவை செலக்ட் செய்யுங்கள். வெளிப்புற லைட்டிங் கண்டிஷனுக்கு ஏற்ப ஃபோகஸ் செய்து படமெடுத்தால் நீங்களும் ஒரு புரொபஷனல் போட்டோகிராபர்தான்

சாம்சங் கேலக்ஸி நோட் 5-ல் உள்ள கேமிராவின் 10 சிறப்பம்சங்கள்

3.வீடியோவும் செம தூள்தான்:

இந்த ஸ்மார்ட்போனில் அமைந்த இன்னொரு மிகப்பெரிய அம்சம் வீடியோதான். பெரும்பாலான ஸ்மார்ட்போன்களில் இல்லாத 4K வீடியோ செட்டிங் வசதி இதில் உள்ளது. கேமராவில் உள்ள செட்டிங் சென்று வீடியோவை செலக்ட்ச் செய்தால் உங்களுக்கு 4K வீடியோ கிடைக்கும். அப்புறம் என்ன உடனே மொபைல் போனிலேயே ஒரு குறும்படத்தை நீங்கள் படமாக்கிவிடலாம்.

சாம்சங் கேலக்ஸி நோட் 5-ல் உள்ள கேமிராவின் 10 சிறப்பம்சங்கள்

4. இந்த புதிய வசதி வேறு எதிலாவது உண்ட?

இந்த ஸ்மார்ட்போனின் மூலம் நான்கு தனித்தனி வீடியோக்கள் எடுத்து

அவற்றை ஒன்றாக இணைத்து மகிழலாம். அதுமட்டுமின்றி அதற்கு பின்னணி இசையையும் பொருத்தலாம்.

சாம்சங் கேலக்ஸி நோட் 5-ல் உள்ள கேமிராவின் 10 சிறப்பம்சங்கள்

5. அனிமேஷனும் பண்ணலாமா?

விதவிதமாக புகைப்படங்கள் எடுத்து அவற்றை போட்டோ எடிட்டிங் செக்சனுக்கு கொண்டு போய் அனிமேட்டட் GIF ஆகவும், அனிமேஷன் ஆக்சன் காட்சிகளாகவும் மாற்றலாம்.

6. ஸ்லோ மோஷன் வசதியும் உண்டு:

இந்த ஸ்மார்ட்போனில் ஸ்லோ மோஷன் வசதி உள்ளதால் மிக எளிதாக ஸ்லோ மோஷன் வீடியோ பதிவு செய்யலாம். கேமராவில் உள்ள மோட் பட்டனை அழுத்தி ஸ்லோ மோஷன் ஆப்சனை தேர்வு செய்து 1/2, 1/4, 1/8 ஆகிய விதங்களில் ஸ்லோமோஷன் வீடியோ எடுக்கலாம்.

சாம்சங் கேலக்ஸி நோட் 5-ல் உள்ள கேமிராவின் 10 சிறப்பம்சங்கள்

7. டைம் லேப்ஸ் வசதியை எப்படி தேர்வு செய்வது?

இதற்கு முன்னர் நாம் பார்த்த ஸ்லோ மோஷன் வசதி போன்றே டைம் லேப்ஸ் வசதியும் இதில் உண்டு. நீங்கள் மோட் பட்டனை செலக்ட் செய்யும்போது ஸ்லோ மோஷன் பட்டனுக்கு பதிலாக டைம் லேப்ஸ் பட்டனை தேர்வு செய்து உங்கள் வீடியோவை டைம் லேப்ஸூக்கு மாற்றுங்கள்

சாம்சங் கேலக்ஸி நோட் 5-ல் உள்ள கேமிராவின் 10 சிறப்பம்சங்கள்

8. செல்பியிலும் புதுமை

பொதுவாக இப்பொழுது கூட்டமாகத்தானே செல்பி எடுக்கின்றோம். அதற்கு கண்டிப்பாக வைட்-செல்பி வசதி வேண்டும்தானே. அந்த வசதி இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது. முன்கேமராவை ஆன்செய்து மோட்-ல் சென்று வைட் செல்பியை ஆன்செய்தால் போதும் ஒரு ஊரே கூடியிருந்தாலும் அற்புதமான செல்பியை எடுக்கலாம்.

சாம்சங் கேலக்ஸி நோட் 5-ல் உள்ள கேமிராவின் 10 சிறப்பம்சங்கள்

9. நேரடி ஒளிபரப்பு வசதியும் உண்டு

தொலைக்காட்சி நேரடி ஒளிபரப்பு போல நீங்கள் எடுக்கும் வீடியோவை நேரடியாக யூடியூபில் ஒளிபரப்பு செய்யும் வகையில் சாம்சங் கேலக்ஸி நோட் 5 மாடலில் வசதி உள்ளது. இதற்கு நீங்கள் செய்ய வேண்டியது ஜஸ்ட் கூகுள் அக்கவுண்டுக்கு சென்று அக்கவுண்ட் வெரிபைடு செய்ய வேண்டியது மட்டும்தான்

10. 3D செல்பி எடுக்க வேண்டுமா?

செல்பியில் 360 டிகிரியில் போட்டோ எடுக்க வேண்டுமானாலும் இதில் வசதியுண்டு. நடந்து கொண்டே, ஓடிக்கொண்டே, சுற்றி சுற்றி செல்பி எடுக்கலாம்.

என்ன பாஸ், இவ்வளவு அருமையான கேமரா வசதியுள்ள இந்த ஸ்மார்ட்போனை நீங்கள் மிஸ் செய்யலாமா? உடனே போய் சாம்சங் கேலக்ஸி நோட்5-ஐ வாங்குங்கள்

Best Mobiles in India

English summary
Explore the most from your Samsung Galaxy Note 5 camera with this how to guide with details of all the options and settings, tips, tricks & more.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X