தலைசிறந்த கேமரா கொண்ட ஸ்மார்ட்போன் இது தான், ஏன் தெரியுமா.??

Written By:

ஹூவாய் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட பி9 பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் இந்தியாவில் சமீபத்தில் வெளியானது. லண்டனில் ஏப்ரல் மாதம் வெளியான கருவி இந்தியாவில் ரூ.39,999 என்ற விலைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதன் படி ஹூவாய் பி9 கருவியானது தலைசிறந்த கேமரா அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது.

ஹூவாய் பி9 கருவியானது டூயல் கேமரா செட்டப் கொண்டுள்ளது. இதோடு போட்டியாளர்களை எதிர்கொள்ள லெய்கா லென்ஸ் சக்தியும் வழங்கப்பட்டுள்ளது. கேமரா அம்சங்களைப் பொருத்த வரை லெய்கா நிறுவனத்திற்கு அறிமுகமே தேவையில்லை எனலாம்.

தலைசிறந்த கேமரா கொண்ட ஸ்மார்ட்போன் இது தான், ஏன் தெரியுமா.??

அம்சங்கள்: ஹுவாய் பி9 கருவியின் சிறப்பம்சங்களை பொருத்த வரை 5.2 இன்ச் டிஸ்ப்ளே, கிரின் 955 SoC கொண்ட ஆக்டா-கோர் 2.5 ஜிகாஹெர்ட்ஸ் பிராசஸர், 4 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி இன்டர்னல் மெமரி, ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மல்லோ இயங்குதளம் வழங்கப்பட்டுள்ளது. ஹைப்ரிட் டூயல்-சிம் ல்லாட் கொண்டிருக்கும் ஹூவாய் பி9 3000 எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகின்றது.

கேமராவை பொருத்த வரை ஹூவாய் பி9 கருவியில் 12 எம்பி டூயல் கேமரா, லெய்கா SUMMARIT லென்ஸ், 1.25 மைக்ரான் பிக்சல் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் குறைந்த வெளிச்சங்களிலும் அதிக துல்லியமான புகைப்படங்களை எடுக்க முடியும். ஹூவாய் பி9 கேமரா மூலம் படமாக்கப்பட்ட சில புகைப்படங்கள் மூலம் அதன் தரம் என்னவென்று நீங்களே பாருங்கள்..

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

குறைந்த வெளிச்சம்:

குறைந்த வெளிச்சத்தில் எடுக்கப்பட்ட இந்தப் புகைப்படத்தை பாருங்கள். இங்கு பல்வேறு நிறங்கள் இருந்தாலும், புகைப்படம் செயற்கையாக காட்சியளிக்கவில்லை.

ஃபிரேம்:

பெரிய கட்டிடங்கள் போன்றவற்றைப் படமாக்கும் போதும் புகைப்படம் நிறங்களைத் துல்லியமாக பிரதிபலிக்கின்றது.

குளோஸ்-அப்:

பொருட்களை மிக அருகாமையில் வைத்து படமாக்கும் போதும் துல்லியம் குறையாமல், நிறங்கள் இயற்கையாகப் பிரதிபலிக்கின்றது.

மேக்ரோ ஷாட்:

சம்பவம் எதுவானாலும் நிறங்களின் இயற்கை தன்மை மாறாமல் மிகவும் இயற்கையாக இருக்கின்றது இந்தப் புகைப்படத்தில் காண முடியும்.

கருப்பு-வெள்ளை நிறம்:

ஹுவாய் பி9 அதிக துல்லியமான கருப்பு வெள்ளை படங்களுக்கு ஏற்ற கேமரா கொண்டுள்ளது. இதன் மூலம் எடுக்கப்பட்ட கருப்பு வெள்ளை புகைப்படம் தான் இதற்கு உதாரணம் ஆகும்.

குறைந்த வெளிச்சம்:

குறைவான வெளிச்சம் இருக்கும் போது கருப்பு வெள்ளை படங்களின் தரம் குறையாமல் இருக்கின்றது.

டெப்த் ஆஃப் ஃபீல்டு:

டூயல் கேமரா கொண்ட பி9 கேமராவில் ஒன்று டெப்த் ஆஃப் ஃபீல்டு சென்சார் கொண்டுள்ளது. இதனால் குறிப்பிட்ட இடத்தைத் தேர்வு செய்து அதனினை மட்டும் துல்லியமாக காட்ட முடியும்.

பொக்கே எஃபெக்ட்:

ஹூவாய் பி9 கேமரா மூலம் ஃபோகஸ் பாயிண்ட்களை வைத்து விளையாட முடியும். இதனால் விலை உயர்ந்த கேமராக்களில் கிடைக்கும் பொக்கே எஃபெக்ட் போன்றவற்றையும் பெற முடியும்.

பிரதிபலிப்பு:

பி9 கேமராவானது பல்வேறு நிறங்களையும் அதன் தன்மை மாறாமல் பிரதிபலிக்க முடியும். இதனால் புகைப்படம் செயற்கத்தன்மை இல்லாமல் இயற்கையாகக் காட்சியளிக்கும்.

செல்பீ:

செல்பீ பிரியர்களுக்கு ஹூவாய் பி9 சிறப்பான தேர்வு எனலாம். வைடு ஆங்கிள் ஃபிரேம் மூலம் துல்லியம் மாறாமல் அழகான செல்பீ எடுக்க முடியும்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

English summary
10 Photos show Huawei P9 with dual Leica lense is the best camera phone
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்