இந்திரா காந்தி தலைமையில் நிகழ்த்தப்பட்ட 'ஸ்மைலிங் புத்தா'..!

Written By:

மே 18, 1974-ஆம் ஆண்டு இந்தியாவின் முதல் அணு ஆயுத சோதனை நடத்தப்பட்டது, இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின்படி அந்த பரிசோதனையின் பெயர் போக்ரான்-1 (Pokhran-I), ஆனால் அதன் குறியீடு பெயர் : ஸ்மைலிங் புத்தா (Smiling Buddha) அதாவது சிரிக்கும் புத்தர்..!

அணு ஆயுத பரிசோதனைக்கு 'சிரிக்கும் புத்தர்' என்ற பெயரா..? என்ற சுவாரசியம் மட்டுமின்றி, இந்த ஸ்மைலிங் புத்தாவில் பல சுவாரசியங்கள் இருக்கின்றன. அவைகளைத்தான் கீழ்வரும் ஸ்லைடர்களில் தொகுத்துள்ளோம்..!

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

நோக்கம் :

அமைதி தேசம் என்று உலகம் முழுக்க அறியப்படும் இந்தியா, அமைதியான நோக்கத்திற்க்காகவே அணு ஆயுத சோதனை நடத்துகிறது என்பதை உலக நாடுகளுக்கு தெரிவிக்கும் நோக்கத்தில் உருவான பெயர் தான் - ஸ்மைலிங் புத்தா.

அமைதி :

'ஸ்மைலிங் புத்தா' திட்டம் தொடங்கப்பட்ட நாளில் இருந்து முழு வளர்ச்சி நிலையை அடைந்து பரிசோதனை செய்யும் நாள் வரையிலாக "அமைதியான அணுசக்தி வெடிப்பு " என்று தான் அனைவராலும் அழைக்கப்பட்டது.

புத்த ஜெயந்தி :

அதுமட்டுமின்றி கவுதம புத்தர் பிறந்த நாளைக் குறிக்கும் பண்டிகை தினமான புத்த ஜெயந்தி அன்று இந்த (வெடிப்பு) பரிசோதனை நிகழ்த்தப்பட்டது (மே 18, 1974)..!

மேற்பார்வை :

ராஜஸ்தான் ராணுவ தளத்தில், போக்ரான் சோதனை ரேஞ்ச்தனில் பல முக்கிய இராணுவ அதிகாரிகள் மேற்பார்வையில் ஸ்மைலிங் புத்தா பரிசோதிக்கப்பட்டது.

உதவி :

இந்தியாவின் முதல் அணுஆயுத சோதனையானது கனடாவின் தொழில்நுட்ப நிபுணத்துவம் மற்றும் நிதி, அமெரிக்காவிடம் இருந்து பெறப்பட்ட கன நீர் (Heavy Water)ஆகிய உதவியின் கீழ் நடைபெற்றது.

அணு ஏற்றுமதி :

அமைதியான நோக்கத்திற்க்காகவே நடத்தப்படுகிறது என்று கனடாவுடன் ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொண்டு நிகழ்த்தப்பட்டாலும் கூட வெடிப்பு சோதனைக்குப்பின் இந்தியாவுடன் ஆன அணு ஏற்றுமதியை கனடா நிறுத்திக்கொண்டது.

என்எஸ்ஜி :

பின்பு, அணு தொழில்நுட்பம் ஏற்றுமதி குறைக்கவும், அணு சக்தியை ஆயுத உற்பத்திக்கான தவறான வழியில் பயன் படுத்தாமல் இருப்பதை தடுக்கவும் என்எஸ்ஜி எனப்படும் நுக்லியர் சப்ளையர் க்ரூப் உருவாகவும் ஸ்மைலிங் புத்தா தூண்டுதலாக இருந்தது.

இந்திரா காந்தி :

1972-ஆம் ஆண்டே ஸ்மைலிங் புத்தா வெடிகுண்டு கட்டமைக்கப்பட்டுக் கொண்டிருந்த பாபா அணு ஆராய்ச்சி மையத்திற்கு (BARC) அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி பார்வையிட்டு வந்திருந்தார்.

தொடர் அணு வெடிப்புகள் :

ஸ்மைலிங் புத்தாவிற்கு பின்பு இது 1998 மே மாதம் முதல் அணு குண்டு பரிசோதனை என்று வெளிப்படையாக அறிவிக்கப்பட்டு தொடர் அணு வெடிப்புகள் நிகழ்த்தப்பட்டன.

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இதுபோன்ற அறிவியல் தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

English summary
Why was India's first nuclear test named Smiling Buddha. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்