இந்தியாவில் வீடியோவில் பதிவான ஏலியன் வாகனம்.!

Written By:

யுஎஃப்ஒ அதாவது அடையாளம் தெரியாத பறக்கும் பொருள் அல்லது ஏலியன் வாகனம் சார்ந்த குழப்பம் உலகம் முழுக்க பரவி இருக்கின்றது. இதோடு அடையாளம் தெரியாத பறக்கும் பொருள் பதிவான வீடியோக்களின் எண்ணிக்கை தினசரி அடிப்படையில் அதிகரித்து கொண்டே தான் இருக்கின்றது.

எனினும் இன்று வரை இது குறித்த குழப்பத்திற்கு விளக்கம் அளிக்கப்படாதது, இது குறித்த ஆர்வத்தை ஆய்வாளர்கள் மத்தியில் தொடர்ந்து அதிகரிக்க தான் செய்கின்றது. கடைசியாக விமானத்தின் மேல் யுஎஃப்ஒ பறந்ததாக விமானிகள் தெரிவித்திருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

1

இது வரை உலகின் பல்வேறு பகுதிகளில் யுஎஃப்ஒ சிக்கிய வீடியோக்கள் பதிவு செய்யப்பட்ட நிலையில் இம்முறை இந்தியாவின் உத்திர பிரதேச மாநிலத்திலும் யுஎஃப்ஒ பறந்ததாக வீடியோ ஒன்று வெளியாகி இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது.

2

இதனை நேரில் பார்த்தவர்கள் முதலில் வானத்தில் இருந்து ஏதோ விழுகின்றது என்றே நினைத்திருக்கின்றனர், அதன் பின் அதில் ஏதோ வினோதமாக இருப்பதை உணர்ந்ததாக கூறப்படுகின்றது.

3

பார்க்க பாம்பு தோற்றத்தில் இருந்த யுஎஃப்ஒ ஆரஞ்சு நிற வெளிச்சத்தை பிரதிபலித்தது. வெளியான வீடியோவின் இறுதியில் யுஎஃப்ஒ மறையாமல் வெளிச்சம் அப்படியே அணைந்து போவது பதிவாகியுள்ளது.

4

இம்முறை பதிவாகியிருக்கும் யுஎஃப்ஒ நடவடிக்கையானது இதற்கு முன் பதிவாகியிருக்கும் வீடியோக்களுடன் ஒற்றுப்போகுமளவு இருக்கின்றது என யுஎஃப்ஒ சார்ந்த ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

5

வெளியான வீடியோவில் பதிவாகியிருப்பது ஆர்ப்-யுஎஃப்ஒ ஆகும். இவை பெரும்பாலும் உளவு சார்ந்த பணிகளை மேற்கொள்வதோடு இவை தனியாக இல்லாமல் உடன் மற்றொரு யுஎஃப்ஒ ஒன்றும் இருக்கும்.

6

இவ்வகை யுஎஃப்ஒ 90 கோணத்தில் திரும்பும் திறன் கொண்டிருக்கும் இது பூமியில் தற்சமயம் இருக்கும் வானூர்திகளால் மேற்கொள்ள சாத்தியமே கிடையாது என்பதும் குறிப்பிடத்தக்கது.

7

இந்தியாவில் பதிவாகியிருக்கும் யுஎஃப்ஒ பின் பகுதியானது எரிந்து கொண்டிருக்கும் வால் போன்று காட்சியளித்தாலும் இது கன சதுர வடிவம் கொண்டதால் இது டிரோன் மேக்கர் என யுஎஃப்ஒ ஆய்வாளர் ஸ்காட் வாரிங் தனது வலைப்பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

8

இந்த யுஎஃப்ஒ பூமியை சுற்றி வானத்தில் பறக்க டிரோன்களை தயாரிக்க அனுப்பப்பட்டிருக்கலாம் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். இது போன்று ஜப்பானிலும் ஒரு யுஎஃப்ஒ பதிவு செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

9

யுஎஃப்ஒ குறித்த மர்மம் நீடிக்கும் நிலையில், இந்தியாவில் பதிவு செய்யப்பட்டிருக்கும் இந்த யுஎஃப்ஒ ஏலியன் இருப்பதை உணர்த்தும் புதிய சாட்சியாகவே கருதப்படுகின்றது.

10

உலகெங்கும் இது குறித்து பல்வேறு கருத்துக்கள் வெளியாவது இது குறித்த குழப்பங்களை அதிகரிக்கவே செய்கின்றது.
இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட வீடியோ ஸ்லைடரின் கீழ் இணைக்கப்பட்டுள்ளது.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

English summary
UFO With Burning Tail Lights Up Over a Populated Area in India. Read More in Tamil.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்