சூரியனில் கதவு : அதிர்ச்சியூட்டும் ஆய்வாளர்கள்.!!

Written By:

நாளுக்கு நாள் மக்கள் மத்தியில் அச்சம் மற்றும் குழப்பத்தை விளைவிக்கும் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்று கொண்டு தான் இருக்கின்றது. உலகெங்கும் ஏலியன், யுஎஃப்ஒ, என பல்வேறு குழப்பமான விஷயங்களுக்கான தேடல்கள் தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகின்றது அனைவரும் அறிந்ததே.

இந்நிலையில் ஏலியன் மற்றும் யுஎஃப்ஒ சார்ந்த ஆய்வு பணிகளில் ஈடுப்பட்டு வரும் ஆய்வாளர்கள் அதிர்ச்சியூட்டும் சில தகவல்களை தெரிவித்துள்ளனர். அப்படியாக இந்த ஆய்வாளர்கள் புதிதாக கிளப்பியிருக்கும் சந்தேகம் குறித்த விரிவான தகவல்களை தான் ஸ்லைடர்களில் தொகுத்திருக்கின்றோம்..

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

புகைப்படம்

நாசாவின் சோலார் மற்றும் ஹீலியோஸ்பியரிக் அப்சர்வேட்டரியின் சில புகைப்படங்களை வைத்து ஏலியன் சார்ந்த ஆய்வளர் ஒருவர் வீடியோ ஒன்றை யூட்யூப் தளத்தில் பதிவேற்றம் செய்திருக்கின்றார்.

கவனம்

இந்த வீடியோவில் சூரியனில் இருந்து வெள்ளை நிற ஒளி காணப்பட்டது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

சக்தி

ஏற்கனவே டைசன் ஸ்பியரில் இருந்து சக்தி பெறும் கோட்பாடு வரையப்பட்டதை போல் ஏலியன்கள் சூரியினில் இருந்து சக்தியை பெற முயற்சிக்கலாம் என்றும் கருதப்படுகின்றது.

உலகம்

மேலும் சிலர் சூரியனுள் வேற்றுகிரக வாசிகள் வாழவும் அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறுகின்றனர்.

கதவு

யுஎஃப்ஒ சார்ந்த ஆய்வாளரான ஸ்காட் சி வாரிங் சூரியனில் இருந்து கதவு ஒன்று திறந்தது என்றும் இது சூரியனில் சிறிய விரிசல் விழுவது போல தெரிந்தது என்று தனது இணையப்பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

பறக்கும் பொருள்

இந்த விரிசல் வழியே அடையாளம் தெரியாத பறக்கம் பொருள் ஒன்று உள்ளே செல்லவோ அல்லது வெளியோ வரவோ ஏற்பட்டதாக இருக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பயன்பாடு

செக்யூர் டீம் 10 எனும் யுஎஃப்ஒ ஆய்வு குழு ஏலியன்கள் சூரியனில் இருந்து சக்தியை பெற்று வருகின்றது என தெரிவிக்கின்றனர்.

ஆதாரம்

இந்நிகழ்வானது ஏலியன்கள் சூரிய சக்தியை நேரடியாக பயன்படுத்துகின்றது என்பதற்கு இப்புகைப்படங்கள் சிறந்த சாட்சியாக இருக்கின்றது என்றும் இவர்கள் தெரிவித்துள்ளனர்.

பந்து

மேலும் நாசாவின் கேமராவில் எடுக்கப்பட்ட புகைப்படங்களில் பூமியை விட 100 மடங்கு பெரிய அளவிலான ஒன்று பூமியை நெருங்கி வருவதை காண முடிகின்றது என்றும் வீடியோவில் கூறப்பட்டுள்ளது.

செவ்வாய் கிரகத்தில் நிலத்தடி தளங்கள் :

இதற்கு முன்பு செவ்வாய் கிரகத்தில் மர்மமான நிலத்தடி தளங்கள் இருப்பதாக ஆதாரங்கள் வெளியிடப்பட்டதும் குறிப்பிடத்தக்கது - அதை காண இங்கே கிளிக் செய்யவும்..!

மேலும் படிக்க :

பூமிக்குள் புதையுண்டு வாழும் திகிலூட்டும் 'உச்சவிரும்பி' இனம்..!


1200 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிமு நாகரீகத்து தொலைபேசி..!

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இதுபோன்ற அறிவியல் தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

English summary
UFO hunters spotted a DOOR opening on the sun Tamil
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்