செவ்வாய் கிரகத்தில் மண்டை ஓடு, அடித்து கூறும் ஆய்வாளர்.!?

Written By:

நாசா ஆய்வாளர்கள், ஸ்டீபன் ஹாக்கிங் மற்றும் இதர ஆய்வாளர்கள் ஏலியன் வாழ்க்கை குறித்த ஆய்வுகளில் நீண்ட காலமாக ஈடுப்பட்டு வரும் நிலையில் இவர்களை மிஞ்சும் அளவு அதிசயிக்க வைக்கும் தகவல் ஒன்றை இவர் வெளியிட்டுள்ளார்.

இவர் கூறும் தகவல் சிறிய ஒற்றை அணு உயிரினங்கள் இல்லை. அடையாளம் தெரியாத பறக்கும் பொருள் சார்ந்த ஆய்வாளரான இவர் செவ்வாய் கிரகத்தில் மனித மண்டை ஓடு இருப்பதற்கான ஆதாரங்கள் கிடைத்திருப்பதாக தெரிவித்துள்ளார்.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

ஸ்காட் சி வாரிங்

யுஎஃப்ஒ சார்ந்த விஷயங்களை கூர்ந்து ஆய்வு செய்யும் ஸ்காட் கடந்த சில ஆண்டுகளாக அமெரிக்க விண்வெளி நிலையம் படம்பிடித்த சில புகைப்படங்களை ஆய்வு செய்தார்.

இண்டர்நெட்

செவ்வாய் கிரகத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியான பின் பல மணி நேர ஆய்வுகளை மேற்கொண்டதில் செவ்வாய் பரப்பில் மனித மண்டை ஓடு போன்றவை இருப்பதாக தெரிவித்துள்ளார்.

மண்டை ஓடு

புகைப்படங்களை உற்று நோக்கும் போது மண்டை ஓடு போன்ற உருவம் ஒரு பாதியாக தெரிந்தது என ஸ்காட் தனது வலைப்பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

கண்

இவை மண்டை ஓடுகள் தான் என்பதை விளக்கும் விதமாக அவைகளில் கண் இருப்பதற்கான அடையாளம் அமைந்துள்ளது, என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

புதிது

ஏலியன் சார்ந்த ஆய்வுகளில் புதிய கண்டுபிடிப்பாக ஸ்காட் கண்டறிந்திருக்கும் மண்டை ஓடு உருவங்கள் அமைந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

வினோதம்

மனித மண்டை ஓடுகளை தவிற ஏற்கனவே அங்கு பல வினோதமான பொருள்கள் இருப்பதாக புகைப்படங்கள் பல முறை வெளியாகியுள்ளன. அந்த வகையில் மனித மண்டை ஓடு புதிய கண்டுபிடிப்பாக கருதப்படுகின்றது.

பொருள்கள்

முன்னதாக செவ்வாய் கிரகத்தில் டைனோசர் எலும்புகள், கற்காலத்து கருவிகள், விலங்குகள் என பல்வேறு பொருள்கள் இருப்பதை உணர்த்துவதாக சில புகைப்படங்கள் வெளியாகின.

பேரெய்டோலியா

பெரும்பாலான ஆய்வாளர்கள் இது வெறும் பேரெய்டோலியா என்றே கூறுகின்றனர். பேரெய்டோலியா என்பது பார்க்கும் பொருள்களில் வித்தியாச தோற்றத்தை கண்டறிவது ஆகும். சிலர் மேகங்களை பார்க்கும் போது விலங்குகள், அல்லது மற்றவற்றை காண்பது போல் உணர்வது எனலாம்.

கருத்து

சிலர் இந்த புகைப்படத்தில் எல்லா பாறைகளும் ஒரே மாதிரி தான் இருக்கின்றது, இதில் எதுவும் வித்தியாசமாக தெரியவில்லை என்றும் கூறுகின்றனர். எதுவானாலும் ஏலியன்கள் சார்ந்த தகவல்கள் அல்லது விளக்கங்கள் அதிகாரப்பூர்வமாக கிடைக்கும் வரை இது போன்ற குழப்பங்கள் நிச்சயம் தொடரும் என்பதில் சந்தேகம் ஏதும் இருக்க முடியாது.

ஆய்வு

ஏலியன் வாழ்க்கை குறித்து பல்வேறு உலக நாடுகளும் ஆவலோடு ஆய்வு செய்து வரும் நிலையில் ஏலியன் இருப்பது குறித்த குழப்பங்கள் தொடர்ந்து கொண்டே தான் இருக்கின்றது.

முகநூல்

இது போன்ற தொழில்நுட்பம் மற்றும் உலகின் வினோத தகவல்களை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

English summary
UFO hunter claims human like SKULLS on Mars Tamil
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்