ரஷ்யாவிடம் கெத்து காட்ட அமெரிக்கா முயற்சி.!?

Written By:

ரஷ்யா மற்றும் அமெரிக்கா தங்களது பலத்தை அவ்வப்போது மக்களுக்கு நினைவூட்டும் நோக்கில் எதையாவது செய்து கொண்டே இருக்கின்றன. உலகை அச்சுறுத்தும் ஆயுத சோதனை, விண்வெளி ஆய்வுகள், உட்பட எல்லாவற்றிலும் யார் சிறந்தவர் என்ற நோக்கில் இவர்களது செயல் மற்றவர்களை வம்பிழுக்கும் என்பதற்கு செய்திகளையே சாட்சியாக வைக்கலாம்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

போர் விமானம்

நாடோ பயிற்சியின் ஒரு அங்கமாக அமெரிக்கா சார்பில் இரண்டு F-22 ரக போர் விமானங்கள் ரோமானியாவிற்கு முதல் முறையாக அனுப்பப்பட்டுள்ளது.

வேகம்

அமெரிக்காவின் F-22 ரக போர் விமானங்கள் ஒலியை விட இரு மடங்கு வேகத்தில் பயணிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அமெரிக்கா தன் ஒத்துழைப்பை எவ்வளவு வேகத்தில் வழங்கும் என்பதை வெளிப்படுத்தியுள்ளது.

தரையிறக்கம்

அதன் படி அமெரிக்க போர் விமானங்கள் மிஹெய்ல் கொகல்நிசியனோ விமான நிலையத்தில் தரையிறங்கி அடுத்த சில மணி நேரங்களில் ப்ரிட்டனிற்கு பறந்தது.

பலம்

இதன் மூலம் கருங்கடற்பகுதியில் ராணுவ பலத்தை வெளிப்படுத்தும் ரஷ்யாவிற்கு, அமெரிக்கா தனது பலத்தை வெளிக்காட்ட முயற்சிப்பதாக சிஎன்என் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிர்ச்சி

சில தினங்களுக்கு முன் அமெரிக்க கடற்படையின் போர்க்கப்பல் அருகே ரஷ்யா போர் விமானங்கள் பறந்தது குறிப்பிடத்தக்கது.

ஆத்திரம்

'அதன் படி Su-24 ரக ஆளில்லா போர் விமானங்கள் விபத்தை ஏற்படுத்தும் விதமாக ஆபத்தான முறையில் பறந்தது, ஆத்திரமூட்டும் செயலாக இருக்கின்றது' என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

புகைப்படம்

அமெரிக்கா வெளியிட்ட புகைப்படங்களில் ரஷ்ய விமானங்கள் அமெரிக்க போர் கப்பலின் அருகே பறந்தது தெளிவாக காண முடிந்தது. மேலும் இது குறித்த வீடியோவும் இணையத்தில் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பாதுகாப்பு

'கடந்த மூன்று ஆண்டுகளாக ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு இப்பகுதியை நிலையான தன்மையற்றதாக மாற்றியுள்ளதால் அமெரிக்கா இதனை பாதுகாக்கும் நோக்கில் செயல்பட்டு வருகின்றது' என ரோமானியின் அமெரிக்க தூதர் ஹன்ஸ் க்ளெம் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க

ரஷ்யா உருவாக்கிய நரகம் : 'டோபோல்-எம்'..!

விளக்க முடியாத மர்மம் நிறைந்த புகைப்படங்கள்.!!

முகநூல்

இது போன்ற தொழில்நுட்பம் மற்றும் உலகின் வினோத தகவல்களை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

English summary
U.S. Sends Warplanes To Support Romania From Russian Threat Tamil
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்