அமெரிக்காவின் முக்கியத்துவம் வாய்ந்த ரகசியங்கள்.!!

Written By:

ராணுவ பயிற்சி, மற்றும் இதர பயன்பாடுகளுக்காக ராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் இருக்கும் ராணுவ தளங்களை பயன்படுத்துவது அனைத்து நாடுகளை பொருத்த வரை மிகவும் சாதாரண விஷயம் தான். ராணுவம் என்பது நாட்டின் பாதுகாப்பு சார்ந்த விஷயம் என்பதால் ராணுவ தளங்களில் அதிக கவனம் மற்றும் பல்வேறு சட்டத்திட்டங்கள் விதிக்கப்படுகின்றன.

இங்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு ரகசியமாக வைக்கப்பட்டிருக்கும் ராணுவ தளங்கள் சார்ந்த விரிவான தகவல்களை தான் தொகுத்திருக்கின்றோம்.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

ரகசிய ராணுவ தளம் 01

ஹார்ப் ஹை ஃப்ரீக்வன்ஸி ஆக்டிவ் ஆரோரல் ரிசர்ச் ப்ரோகிராம் ஆகும். (HAARP - High Frequency Active Auroral Research Program)

விமானப்படை

மண்டிலங்களின் வழியாக உயர் அதிர்வெண் விட்டங்களை சுடுவதன் மூலம் அறிவியல் ஆராய்ச்சி பணிகளை மேற்கொள்வதே விமானப்படையின் முக்கிய குறிக்கோள் ஆகும்.

சதி கோட்பாடு

பல்வேறு சதி கோட்பாடுகள் இப்பகுதியில் அறிவியல் ஆராய்ச்சியை தவிற வேறு ஏதோ வினோதமாக நடைபெற்று வருவதாக தெரிவிக்கின்றது.

ரகசிய ராணுவ தளம் 02

டக்வே ப்ரூவிங் மைதானம் : கெமிக்கல் வார்ஃபேர் டெஸ்டிங்

ஹார்டுவேர்

யூட்டாவில் அமைந்திருக்கும் டக்வே ப்ரூவிங் மைதானமானது ராணுவ ஹார்டுவேர் சார்ந்த சோதனைகளை மேற்கொள்ள பயன்படுத்தப்பட்டு வருவதாக கூறப்படுகின்றது.

றோட் தீவு

றோட் தீவு அளவு இருக்கும் இப்பகுதியில் ஏரியா 51 இல் நடைபெறுவதாக கூறப்படும் அனைத்து வித சோதனைகளும் நடைபெற்று வருகின்றது என்றும் நம்பப்படுகின்றது.

ரகசிய ராணுவ தளம் 03

தி செய்யென் மவுன்டெயின் காம்ப்ளெக்ஸ். இது வட அமெரிக்க ஏரோஸ்பேஸ் டிஃபென்ஸ் கமான்ட் தளமாகவும் கூறப்படுகின்றது.

போர்

அணு ஆயுத போரின் போது இப்பகுதியில் சுமார் 800 பேர் அதிகபட்சம் 30 நாட்களுக்கு பாதுகாப்பாக தங்க முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ரகசிய ராணுவ தளம் 04

ரேவென் ராக், Site R - World War III Hideaway
மூன்றாம் உலக போர் அல்லது, அணு ஆயுத போர் ஏற்பட்டால் தற்காலிகமாக மறைந்து கொள்ள இப்பகுதி கச்சிதமான ஒன்றாக இருக்கும்.

ஜிபிஎஸ்

6 மைல் நீளம் கொண்ட சுரங்கப்பாதை டேவிட் கேம்ப் பகுதியை இணைக்கும். மேலும் இப்பகுதியில் செல்போன் மற்றும் ஜிபிஎஸ் போன்றவை வேலை செய்யாது.

ரகசிய ராணுவ தளம் 05

ஏரியா 51, எனும் க்ரூம் ஏரி. இப்பகுதி சார்ந்த பல்வேறு தகவல்களும் பெரும்பாலானோரும் அறிந்ததே. இப்பகுதியில் பல்வேறு ரகசிய ஆராய்ச்சி மற்றும் சோதனைகள் நடைபெற்று வருகின்றது.

யுஎஃப்ஒ

இதோடு ஏரியா 51 பகுதியை சுற்றி பலமுறை யுஎஃப்ஒ எனும் அடையாளம் தெரியாத பறக்கும் பொருள்கள் காணப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

English summary
Top Secret Military Bases In The United States in Tamil
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்