மூளையின் ரகசியம் : அதீத புத்திசாலிகளுக்கு மட்டுமே 'இது' தெரியும்..!

Written By:

அதீத புத்திசாலிகளுக்கு மட்டுமே தெரியும் நம்மிடம் இருக்கும் தலைசிறந்த அறிவியல் கோட்பாடுகள் எல்லாம் கோட்பாடுகள் (theories) அல்ல கருதுகோள்கள் (hypothesis) என்று, அதாவது அறிவியல் தொழில்நுட்பத்தில் நாம் நினைத்துக் கொண்டிருக்கும் அளவிலான வளர்ச்சியை அடையவில்லை என்று பொருள்..!

அதற்கு சிறந்த எடுத்துக்காட்டு மனித மூளை - உடலின் மிக சிக்கலான மற்றும் மிக சிறிதளவில் புரிந்து கொள்ளப்படும் பகுதிகளில் ஒன்றாகும் . துரதிர்ஷ்டவசமாக, அது மிகவும் எளிமையானதாக இல்லாததால் மூளையைப்பற்றி இன்னும் அதிகம் புரிந்து கொள்ள முடியாத நிலையில் தான் நாம் உள்ளோம். அப்படியாக விஞ்ஞானிகளால் இன்றும் புரிந்துகொள்ள முடியாத மூளை பற்றிய சில சுவாரசியமான ரகசியங்களை தான் கீழ்வரும் ஸ்லைடர்களில் தொகுத்துளோம்..!

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

கேள்வி #06 :

மூளை எபப்டி இவ்வளவு செயல்படுகிறது ..?

நம்பமுடியாத வண்ணம் :

மூளை ஒரு சூப்பர் கம்ப்யூட்டரின் தேவ்காம் கொண்டது என்பார்கள் ஆனால் அது உண்மையில் நம்பமுடியாத வண்ணம் மெதுவாகத்தான் உள்ளது. கம்ப்யூட்டரை விட மிக மிக மெதுவாக தான் செயல்படுகிறது.

மின்னல் வேகத்தில் :

ஆனால், அதிக செயல்பாட்டின் போது இணை செயலாக்க கணினிகள் கீழே தாமதம் நிகழ்த்தும் ஆனால் மூளையோ ஒரு ஒற்றை சிந்தனை, நடத்தை அல்லது நினைவகம் ஆகிய ஏதோ ஒன்றை பயன்படுத்தி மின்னல் வேகத்தில் வகைப்படுத்தி விடுகிறது.

கேள்வி #05

ஆளுமை எங்கே இருந்து வருகிறது..?

மரபணு

உங்கள் ஆளுமையானது உங்கள் மூளைக்குள் தான் வாழ்கிறது. ஆனால் பல நூறு ஆண்டுகளாக ஒரு நபரின் ஆளுமையானது அவரின் மூளையை வைத்து எடை போடப்படாமல், மரபணுக்களை மட்டும் வைத்து நிர்ணயிக்கப்படுகிறது.

கேள்வி #04

ஏன் நாம் தூங்குகிறோம் மற்றும் ஏன் கனவு காணுகிறோம்

தூக்கம் :

உங்கள் வாழ்க்கையின் மூன்றின் ஒரு பங்கில் நீங்கள் மயக்கத்தில், பாதுகாப்பற்ற நிலையில் தூக்கம் கொள்கிறீர்கள். தூக்கம் மிக மிக அவசியம் தான் ஆனால் தெளிவாக நாம் ஏன் தூங்குகிறோம் என்பதற்கு விடை கிடையாது.

மர்மம் :

கனவு - சீரற்ற நரம்பியல், யூகங்கள் நிறைந்த ஆழமான கற்றல், நினைவக ஒருங்கிணைப்பு போன்றவைகளால் ஏற்படலாம்  என நம்பப்படுகிறது. ஆனால் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக கனவு ஒரு மர்மம் நிறைந்த புதிர்தான்..!

கேள்வி #03

எப்படி நாம் நினைவுகளை சேமிக்கிறோம்.?

சேமிப்புக்கு காரணம் :

உண்மையில் நியூரான்களின் பல்வேறு சேர்க்கைகளின் விளைவு தான் நினைவக சேமிப்புக்கு காரணம் என்று நம்பப்படுகிறது. ஆனால் நினைவுகள் முதலில் எங்கே சேமிக்கப்படுகிறது, சிலசமயம் அவைகள் ஏன் அழிந்து போகிறது, மறந்து போகிறது.  சில தவறான நினைவுகள் வர என்ன காரணம் போன்ற கேள்விகளுக்கு பதில்கள் இங்கில்லை..!

கேள்வி #02

எப்படி எல்லாமே சுமூகமாக வேலை செய்கிறது..?

குழப்பமின்றி :

நம் மூளை வெவ்வேறு நேரங்களில், வெவ்வேறு கோணத்தில் இருந்து கிடைக்கும் பல்வேறு சமிக்ஞைகளை பெற்று கையாள வேண்டும் ஆனால் அதை அனைத்தையும் சுமூகமாக குழப்பமின்றி மூளை எப்படி நிகழ்த்துகிறது என்பது புதிர்தான்.

கேள்வி #01

உணர்வு என்றால் என்ன..?

அனுபவம் :

மூளையில் உணர்வு அனுபவம் எதனால் உருவாகுகிறது..? - இந்த சாத்தியமான மனித மனத்தின் மிகப்பெரிய மர்மமாகும்..!

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இதுபோன்ற அறிவியல்-தொழிற்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

Read more about:
English summary
Things Scientists Still Don't Understand About Your Brain. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்