நமக்கு தெரியாத 'இரண்டாம் நிலவொன்று' இருக்கிறது..!!

Written By:

நிலா - உலகில் உள்ள எல்லோருக்குமே பிடித்த ஒன்று. நமக்கு தெரிந்த நிலவானது - இரவில் வானில் மிளிரும் ஒரு பிரகாசமான கிரகபொருள், ஆரம்பநிலை வானியலாளர்களின் ஆராய்சிகளுக்கு மிகவும் உதவும் ஒரு விண்வெளி பொருள், இன்றைய தேதிப்படி மனித காலடி பதிவாக்கப்பட்ட ஒரே வேற்று கிரகம், அவ்வளவு தானே நிலவைப் பற்றி நமக்கு தெரியும்..!!??

சிலருக்கு நிலவைப் பற்றி அதிகம் தெரிந்திருக்கலாம். ஆனால், பூமி கிரகத்திற்கு இரண்டாம் நிலவொன்று இருக்கிறது. அது நம்மில் பெரும்பாலானோர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை..!

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

1997 :

நாம் தினம் காணும் நிலவு மட்டுமே பூமி கிரகத்தை சுற்றி வரும் இயற்கையான செயற்கைகோள் இல்லை, இன்னொன்றும் இருக்கிறது. சமீபத்தில் தான் அதாவது 1997-ஆம் ஆண்டு தான் அந்த கிரகப்பொருள் கண்டுப்பிடிக்கப்பட்டது.

3753 க்ருதினே :

அதற்கு 3753 க்ருதினே (3753 Cruithne) என்று பெயர் சூட்டப்பட்டது. மேலும் அது பூமியின் இயற்கையான அரை- சுற்றுப்பாதை செயற்கைக்கோள் (quasi-orbital) என்பதும் குறிபிடத்தக்கது.

நேர்த்தி :

அதாவது, 3753 க்ருதினே எனப்படும் கிரகப்பொருள் ஆனது நிலவை போலவே மிகவும் நேர்த்தியான முறையில் பூமியை சுற்றிவரவில்லை என்பது குறிபிடத்தக்கது.

உட்புற பகுதி :

அதற்கு மாறாக 3753 க்ருதினே ஆனது 'ஹார்ஸ்ஷூ சுற்று வட்ட பாதை' (Horseshoe orbit) எனபப்டும் சூரிய குடும்பத்தின் உட்புற பகுதியில் இருந்த படியாக பூமியை சுற்றி கொண்டிருக்கிறது.

800 ஆண்டுகள் :

3753 க்ருதினே - சூரியனை ஒருமுறை முழுமையாக சுற்றிவர 1 ஆண்டு எடுத்துக்கொள்கிறது அதுவே பூமி கிரகத்தை 'மிகவும் சிக்கலான வழியில் மோதிர வடிவத்தில் முழுமையாக ஒருமுறை சுற்றி வர 800 ஆண்டுகள் எடுத்துக்கொள்கிறது.

பிற பொதுவான நிலவுகள் :

3753 க்ருதினே மட்டுமின்றி ஹார்ஸ்ஷூ சுற்று வட்ட பாதையில் சூரிய குடும்பத்தில் உள்ள பிற பொதுவான நிலவுகளும் சுற்றிக் கொண்டிருகின்றன, குறிப்பாக சனி கிரகத்தின் இரண்டு நிலவுகள்.

தனித்துவம் :

இருப்பினும் ஹார்ஸ்ஷூ சுற்றுவட்டப்பாதையில் உள்ள பிற நிலவுகளில் இருந்து மிகவும் தனித்துவம் வாய்ந்தது, அதற்கு காரணம் - 'ஹார்ஸ்ஷூ'வில் அது நிகழ்த்தும் தடுமாற்றம் மற்றும் வெளிப்படுத்தும் முறைதான்.

குளறுபடியான வளையம் :

அதாவது , பூமியின் சுற்றுப்பாதையை சுற்றி ஒரு குளறுபடியான வளையம் செய்கிறது மற்றும் செவ்வாய் மற்றும் வீனஸ் ஆகிய இரண்டு அருகாமை கிரகங்களுக்கு இடையே மிகவும் தூரமாக ஊஞ்சலாடுகிறது.

வழிதவறிய கிரகப்பொருட்கள் :

முதல் நிலவு மற்றும் இரண்டாம் நிலவோடு பூமியின் 'சொந்தபந்த கதை' முடியவில்லை, இன்னும் இருக்கிறது. அதாவது அரை- கோளப்பாதையில் வழிதவறிய ஈர்ப்பு விசை தேடும் பல கிரகப் பொருட்கள் சுற்றி வந்துக் கொண்டிருகின்றன.

மனித காலடி :

யாருக்கு தெரியும் சூரிய குடும்பம் முடிவில்லாத ஒன்று என்பதை கற்றுக்கொடுத்த பூமியின் இரண்டாம் நிலவான 3753 க்ருதினே ஆனது, மனிதர்கள் காலடிப் பதிக்கும் முதல் சிறுகோளாக கூட இருக்கலாம்.

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இதுபோன்ற தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

Read more about:
English summary
The Second Moon You Did not Know Earth Had. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்