உறுதி செய்யும் ஆதாரங்கள் : உலகப்போருக்கு அமெரிக்கா, ரஷ்யா, சீனா தயார்..?!

By Sharath Chandar
|

இதுவரை நடந்த உலக மகா யுத்தங்களிலேயே மிகவும் மோசமான யுத்தம் எது என்று தெரியுமா..? - இனி 'நடக்கப்போகும்' போகும் உலக யுத்தம் தான். ஆம், அடுத்த உலக யுத்தமானது மெல்ல மெல்ல தயாராகிக் கொண்டேத் தான் இருக்கிறது. சந்தேகமே இன்றி - நீயா நானா போட்டி போடும் நாடுகளான - சீனா, அமெரிக்கா மற்றும் ரஷ்யா தான் அடுத்து வரும் உலக யுத்தததிற்கு அடித்தளதளமாக இருக்கப் போகின்றன.

ஜியோ, ஏர்டெல், வோடபோன்-ஐடியா: ரூ.500-க்குள் கிடைக்கும் சிறந்த ப்ரீபெய்ட் திட்டங்கள் என்ன?ஜியோ, ஏர்டெல், வோடபோன்-ஐடியா: ரூ.500-க்குள் கிடைக்கும் சிறந்த ப்ரீபெய்ட் திட்டங்கள் என்ன?

உலக நாட்டு தலைவர்கள் கோர்ட்டு சூட்டு போட்டுக்கொண்டு ஒருவருக்கு ஒருவர் கைகுலுக்கு கொண்டே போட்டோவிற்கு போஸ் கொடுப்பதால் உலகம் முழுக்க அமைதியும் ஒற்றுமையும் நிலவுகிறது என்று நாம் நினைத்தால் அது கிட்டத்தட்ட 'விவரமறியாத' ஒரு நிலையாகும். அடுத்த உலகப்போரின் அடித்தளம் பலமான முறையில் கட்டமைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது என்பது தான் நிதர்சனம்..!

விண்வெளியில் :

விண்வெளியில் :

நாம் நினைப்பது போல அடுத்த உலக யுத்தமானது நிலத்தில் நடக்க போவது இல்லை - விண்வெளியில் நடக்கப் போகிறது..!

சூப்பர் பவர் :

சூப்பர் பவர் :

உலகின் மூன்று சூப்பர் பவர் நாடுகளான சீனா, அமெரிக்கா மற்றும் ரஷ்யா ஆகியவைகள், சக்தி வாய்ந்த அண்டவெளி அணு ஆயுதங்களை வெவ்வேறு இடங்களுக்கு அனுப்பி அதிகாரப்பூர்வமாக பரிசோதித்துக் கொண்டே தான் இருக்கின்றன.

ராணுவ பலம் :

ராணுவ பலம் :

இதுபோன்ற பரிசோதனைகள் மூலம் சம்பந்தப்பட்ட நாடுகளின் ராணுவ பலம் அதிகரித்துக் கொண்டே போகிறது என்பது தான் நிதர்சனம்..!

உலக போர் :

உலக போர் :

மிக பெரிய நாடுகளின் ராணுவ பலம் எதற்காக அதிகரிக்கப்படுகிறது..? அது எதில் சென்று முடியும்..? - என்பதற்கு, இதற்கு முன் நடந்த உலக போர்களே சிறந்த எடுத்துக்காட்டாகும்.

பத்திரிக்கை :

பத்திரிக்கை :

இதற்கு ஆதாரமாய் பிரபல அதிநவீன தொழில்நுட்பம் சார்ந்த பத்திரிக்கையான 'பாப்புலர் சயின்ஸ்' (Popular Science) - அடுத்த பனிப்போர் ஆனது திறந்தவெளி அண்டத்தில் நடக்கும் என்று சுட்டிக்காட்டியுள்ளது..!

வளர்ச்சி :

வளர்ச்சி :

மாட்டு வண்டிகளில் கூட ஜிபிஎஸ் (GPS) பொருத்தப்படும் தொழில்நுட்ப வளர்ச்சி காலத்திற்கு நாம் வந்து விட்டோம். மொபைல் போன் டவர்கள் தொடங்கி ஏடிஎம் (ATM) வரை அனைத்து கட்டுபாடுகளும் செயற்கைகோள்கள் மூலம் தான் நடக்கின்றன.

செயற்கை கோள் :

செயற்கை கோள் :

ஆகையால் இது போன்ற கட்டுப்பாட்டு செயற்கை கோள்களை மனதில் கொண்டு, சூப்பர் பவர் நாடுகள் ஒன்றை ஒன்று வீழ்த்தவும், தேசிய அளவிலான பாதுகாப்பு இல்லாத தன்மையை உருவாக்கவும் திட்டமிடுகின்றன..!

தாக்குதல் :

தாக்குதல் :

அது மட்டுமின்றி போர் என்று வந்து விட்டால் உடனடியாக செயல்படும் விதத்தில் அண்டத்தில் தாக்குதல் நடத்தும் வகையிலான கட்டுப்பாட்டு செயற்கை கோள்களும் விண்ணில் உலவிக்கொண்டு தான் இருக்கின்றன.

பாதுகாப்பு :

பாதுகாப்பு :

ஏனெனில், சூப்பர் பவர் நாடுகள் சிட்டிங் டக்குகள் (Sitting Ducks) கிடையாது அதாவது, தாக்குதலில் இருந்து தப்பிக்க எந்த விதமான பாதுகாப்பும் செய்து கொள்ளாத நிலையில் இல்லை என்று அர்த்தம்.

சீனா :

சீனா :

இது சீனாவின் தாக்குதல் நடத்தும் வகையிலான கட்டுப்பாட்டு செயற்கை கோள் ஆகும்..!

குறி :

குறி :

பிரபல 'ராய்டர்ஸ்' (Reuters) செய்தி நிறுவனமானது, "பூமியின் மேற் பரப்பானது ,படை கலங்களால் நிரப்பபட்டுள்ளது, யுத்ததிற்காக குறியாக உள்ளது..!" என்று குறிப்பிட்டுள்ளது..!

செயற்கைகோள் :

செயற்கைகோள் :

அதாவது சுமார் 1200 செயற்கைகோள் பூமியின் மேற்பரப்பில் வெவ்வேறு காரணங்களுக்காக சுற்றி கொண்டிருக்கின்றன.

தொடர்பு :

தொடர்பு :

அதாவது கப்பல் மற்றும் விமானங்களை செலுத்துவதற்காகவும், தொடர்பு சார்ந்த காரணகளுக்காகவும் பூமியின் சுற்றுவட்டப் பாதையில் செயற்கைகோள்கள் சுற்றி கொண்டிருக்கின்றன.

கண்காணிப்பு :

கண்காணிப்பு :

மேல் குறிப்பிட்ட காரணங்களுக்காக மட்டுமின்றி செயற்கை கோள்கள், வான் கோள்களுக்குரிய கண்காணிப்பு (planetary surveillance) கருதியும் உலவ விடப்படுகிறதாம்..!

முன்னிலை :

முன்னிலை :

செயற்கை கோள்களின் கணக்கில் அமெரிக்கா முன்னிலை வகிக்க, சீனா மற்றும் ரஷ்யா, அமெரிக்க செயற்கைகோள்களை அழித்துவிட்டு அந்த இடங்களில் தத்தம் செயற்கை கோள்களை நிலைநிறுத்த உழைத்துக் கொண்டேதான் இருக்கின்றதாம்..!

வாய்ப்பு :

வாய்ப்பு :

நிலத்தை போல் அல்லாது, எந்த நாட்டு செயற்கைகோளாக இருந்தாலும் சரி, பலம் மற்றும் பிழைத்திருக்கும் வாய்ப்பு ஆகையவைகள் சமமாக உண்டு.

அண்டவெளி யுத்தம் :

அண்டவெளி யுத்தம் :

அதன் அடிப்படையில் காணும் போது அண்டவெளி யுத்தமானது தெற்கு சீன கடல், உக்ரைன் போன்ற வெளிகளில் 'போர் சாத்தியங்கள்' உண்டு என்று கணிக்கப்பட்டுள்ளது..!

நிலை :

நிலை :

அமெரிக்கா மட்டுமே மொத்தம் 500 செயற்கை கோள்களை நிலைநிறுத்தி இருக்கிறது..!

ராணுவம் :

ராணுவம் :

அதில் 100 செயற்கை கோள்கள் அமெரிக்க ராணுவம் சார்ந்த வேலைகளுக்காக இயங்குகிறதாம்..!

விண்ணில் செலுத்தி :

விண்ணில் செலுத்தி :

மறுபக்கம் சீனா கடந்த சில ஆண்டுகளில் மட்டுமே மொத்தம் 130 செயற்கைகோள்களை விண்ணில் செலுத்தி உள்ளது..!

உளவு :

உளவு :

அந்த 130 செயற்கை கோள்களில் உளவு பார்க்கும் செயற்கை கோள்களும் அடங்கும் என்பது குறிப்பிடத்தகக்து..!

சோதனை விண்கலம் :

சோதனை விண்கலம் :

உளவு செயற்கை கோள்களில் சிக்கி கொள்ளாதபடி வடிவமைக்கப்பட்ட அமெரிக்காவின் சோதனை விண்கலம் இது..!

 ஏவுகனைகள் :

ஏவுகனைகள் :

விண்வெளிக்குள் 6000 மைல்கள் வரை கடந்து செல்லும் வகையிலான ஏவுகனைகள் சூப்பர் பவர் நாடுகளால் அடிக்கடி பரிசோதிக்கப்பட்டுக் கொண்டே தான் இருக்கின்றது..!

ஆயுதம் :

ஆயுதம் :

செயற்கை கோள்களுக்கு எதிரான ஆயுதம் இப்படி இருக்கலாம் என்ற கணிப்பில் கலைஞர் ஒருவரால் வரையப்பட்டது இது..!

விளக்கப்படம் :

விளக்கப்படம் :

இது பூமியின் சுற்று வட்டப்பாதையில் மிதக்கும் தேவை இல்லாத விண்கல மற்றும் செயற்கைகோள்களின் பாகங்கள் சார்ந்த 'கிராபிக்' விளக்கப்படம்..!

மேலும் படிக்க :

மேலும் படிக்க :

ஏரியா 51 : ஒட்டுமொத்த அமெரிக்க அரசும் மறைக்க விரும்பிய ஒரு இடம்..!


ஹிட்லரின் ரகசிய கண்காணிப்பில் நடத்தப்பட்ட 'கொலை சதிகள்'..!

தமிழ் கிஸ்பாட் :

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இதுபோன்றஅறிவியல் தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

Best Mobiles in India

English summary
The Next world war will be in space. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X