"கடவுள்களின் கதவு" நிஜமாகவே ஒரு 'ஸ்டார்கேட்'..!?

Written By:

நம் முன்னோர்கள் நம்பமுடியாத திறன்கள் கொண்டவர்களாய் இருந்துள்ளன என்பதை நிரூபிக்கும் ஒரு மர்மமான மற்றும் புதிரான கல் நினைவுச்சின்னம் தான் - "தி கேட் ஆப் காட்ஸ்" (The Gate of Gods). மிகவும் ஈர்க்கக்கூடிய நினைவிடங்கள் ஒன்றான இதன் உண்மை பின்னணியானது நாம் கற்பனை சேருவதை விட பல மடங்கு ஆழமான ஒன்றாக இருக்கலாம்..!

தற்போதைய பெருவில் அமைந்துள்ள இந்த மிகப்பெரிய கல் அமைப்பானது ஒரு 'ஸ்டார்கேட்' (Stargate)என்றும் நம்பப்படுகிறது. ஸ்டார் கேட் என்பது கன நேரத்தில் அண்டத்தின் எந்தவொரு இடத்திற்கும் பயணிக்க உதவும் கருவியாகும்..!

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

அமைப்பு :

ஏழு மீட்டர் உயரம் மற்றும் ஏழு மீட்டர் அகலம் கொண்ட பெரிய செதுக்கப்பட்ட பாறையின் நடுவே ஒரு மர்மமான 'கதவு போன்ற' அமைப்பு கொண்ட இவ்விடம் தெற்கு பெருவில் அமைந்துள்ள ஹயு மர்கா மலை பகுதியில் அமைந்துள்ளது.

நுழைவு வாயில் :

சிலரின் கருத்தின்கீழ் சிறிய கதவானது மரண ஆத்துமாக்களுக்கான நுழைவு வாயிலை பிரதிபலிக்கிறது என்றும் பெரிய கதவானது தெய்வங்கள் உலகை அடைவதற்கான நுழைவு வாயில் என்றும் நம்பப்படுகிறது.

1996 :

ஆர்வமூட்டும் வகையில் 1996-ல் இவ்விடத்தை முதன்முதலில் கண்டறிந்த ஜோஸ் மாமனி இந்த அமைப்பை முன்பே கனவில் கண்டதாக கூறியுள்ளார்.

புள்ளிவிவரங்கள் :

கனவில் தோன்றிய கதவில் இளஞ்சிவப்பு நிறத்தில் பல புள்ளிவிவரங்கள் கண்டதாகவும் மாமனி கூறியுள்ளார்.

தங்க வட்டு :

ஏழு கதிர்களுக்கான கடவுள்களுக்கான திறவுகோல் என்ற தங்க வட்டு ஒன்றை ஏழு கதிர்களின் கோவிலில் இருந்து எடுத்துக்கொண்டு அமரு முரு என்ற பூசாரி இங்கு வந்ததாக உள்ளூர் புனைவுகள் கூறுகின்றன.

திறவுகோல் :

அந்த பூசாரி ஸ்பானிஷ்காரர்களிடம் அந்த திறவுகோல் கிடைத்துவிடக்கூடும் என்று அஞ்சி ஹயு மலை பகுதியில் ஒளிந்து கொண்டார் என்றும் புனைவு நீளுகிறது.

சூனியக்காரர் :

பின்னர் அந்த பூசாரி கடவுள்களின் கதவை அடைந்து அங்கிருந்த பாதிரியார்கள் மற்றும் சூனியக்காரர்களிடம் தான் கொண்டுவந்த புனித திறவுகோலை காட்டியுள்ளார்.

நீல ஒளி :

பின் நிகழ்த்தப்பட்ட சடங்குகளுக்கு பின்பு நீல ஒளி வீச அங்கு கதவு வெளிப்பட்டுள்ளது பின் சூனியக்காரர்களிடம் தங்க வட்டை ஒப்படைத்து விட்டது அதனுள் நுழைந்த பூசாரியான அமரு முரு மீண்டு வெளிவரவே இல்லையாம்.

உதவி :

இப்படியாக முடியும் புனைவில் இருந்து, உள்ளூர்வாசிகள் இந்த கதவு அமைப்பானது கடவுள்களின் கதவு என்ற நம்பிக்கையை வளர்க்க உதவி இருக்கிறது.

தேவர்களின் தேசம் :

மேலும் புனைவுகள் தொலைதூர கடந்த பெரிய வீரர்கள் ஒரு வளமான மற்றும் நிலைத்த புகழ்பெற்ற வாழ்க்கையை பெற்று தேவர்களின் தேசத்துக்குப் போக இந்த கதவு உதவியதாகவும் கூறுகிறது.

கேள்விக்கு விடை :

"கடவுள்களின் கதவு" போன்ற அறிவார்ந்த புரிதலுக்கு அப்பால் உள்ள மர்மமான நினைவுச்சின்னங்கள் எல்லாம் சாத்தியம் தானா..?? என்ற கேள்விக்கு விடை கிடைத்தபாடில்லை..!

திவானக்கு :

இந்த கடவுகளின் கதவானது, திவானக்கு (Tiwanaku) என்ற சூரிய கதவை நினைவூட்டுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

சர்ச்சைக்குரிய குறிப்பு :

எப்பிஐ ஆவணங்களின் படி வேற்று கிரக இனங்கள் பலமுறை ஸ்டார்கேட் பயணம் செய்துள்ளது, அவைகளில் சில மட்டுமே மற்ற கிரகங்கள் இருந்து வந்தன மற்றவைகல் பல பரிமாணங்களில் இருந்து வந்தன என்ற சர்ச்சைக்குரிய குறிப்பு உள்ளது.

இணைப்பு கதவுகள் :

அதன் அடிப்படைடியில் பிற விண்மீன் திரள்கள், கிரகங்கள், பரிமாணங்களில் இருந்து பூமிக்கு வரும் இணைப்பு கதவுகள் பூமியில் உள்ளன என்பதை சிலர் உறுதியாக நம்பகின்றனர்.

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இதுபோன்ற அறிவியல்-தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

English summary
The “Gate of the Gods” at Hayu Marca is a Stargate. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்