எதிரிகளை திணறடிக்கும் அமெரிக்காவின் ஸ்டெல்த் கில்லர்.!!

Written By:

நாட்டில் எத்தனை பிரச்சனைகள் இருந்தாலும், உலகளவில் பஞ்சாயத்து மற்றும் இதர விஷயகங்களில் அமெரிக்கா எப்பவும் தன்னை முன்னிறுத்தி கொள்ள முற்படுவதை வழக்கமாக வைத்துள்ளது.

அந்த வகையில் அமெரிக்காவிடம் அந்நாட்டு திரைப்படங்களில் கான்பிக்கப்படுவது போன்று நாம் கனவிலும் கண்டிறாத அதிநவீன ஆயுதங்கள் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சிகள் அமைதியான முறையில் ரகசியமாக நடைபெற்று கொண்டிருக்கின்றது.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

1

அதிநவீன ஆயுதங்களை போன்றே அமெரிக்கா போர் விமானங்களை தயாரிப்பதிலும் அதிக ஆர்வம் கொண்டுள்ளது.

2

இதன் விளைவாக பல்வேறு போர் விமானங்கள் அமெரிக்கா வசம் இருந்தாலும் உலகின் அதிநவீன போர் விமானமாக கருதப்படும் ரேப்டார் வகை ஸ்டெல்த் விமானம் குறித்த தகவல்களை தான் விரிவாக தெரிந்து கொள்ள இருக்கின்றீர்கள்.

3

அமெரிக்காவின் அதிநவீன போர் விமானங்களில் ஒன்று தான் லாக்ஹீட் மார்டின் எஃப்-22 ரேப்டார் ஸ்டெல்த் போர் விமானம்.

4

எஃப்-22 ரேப்டார் வகை போர் விமானங்களின் தயாரிப்பு 1985 ஆம் ஆண்டு துவங்கியது.

5

முன்னதாக பயன்பாட்டில் இருந்து வந்த எஃப்-15 ரக விமானங்களுக்கு மாற்றாக வடிவமைக்கப்பட்டது தான் எஃப்-22 ரேப்டார்.

6

எதிர்கால போர் முறைகளை கவனத்தில் கொண்டு எவ்வித ரேடார்களில் சிக்காமல் இருக்க எஃப்-22 விமானத்தில் ஸ்டெல்த் தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது.

7

உலகின் முதல் ஸ்டெல்த் வகை விமானம் என்ற பெருமையை எஃப்-17 நைட் ஹாக் பெற்றுள்ளது. இந்த விமானத்தில் ஏவுகணை மூலம் தாக்கும் திறன் வழங்கப்படவில்லை மாறாக இவை நோட்டம் விட்டு திட்டமிட பயன்படுத்தப்பட்டன.

8

ஆனால் எஃப்-15 ரக விமானங்கள் தாக்கும் திறன் கொண்டிருந்தது, இருந்தும் இவைகளில் ஸ்டெல்த் தொழில்நுட்பம் இல்லாதது குறையாக கருதப்பட்டது.

9

ஏர்-டூ-ஏர் அதாவது வானில் இருந்து வானத்திலேயே தாக்குதல் நடத்தும் வசதி மற்றும் ஏர்-டூ-கிரவுன்டு அதாவது வானத்தில் இருந்து பூமியில் தாக்குதல் நடத்தும் வசதி மற்றும் லேசர் கைடடு ஆயுதங்களை தாங்கி செல்லும் வசதியும் எஃப்-22 கொண்டுள்ளது.

10

அதன் படி எஃப்-22 ரேப்டாரில் குறைந்த தூரத்தை தாக்கும் திறன் கொண்ட ஏவுகணை மற்றும் துப்பாக்கிகளும் வழங்கப்பட்டுள்ளது.

11

இந்த விமானத்தில் எம்61ஏ2 ரக துப்பாக்கிகள் பொருத்தப்பட்டுள்ளன. இவை நொடிக்கு 100 ரவுண்டுகள் சுடும் திறன் கொண்டவை ஆகும்.

12

மேலும் எஃப்-22 ரேப்டாரில் வழங்கப்பட்டுள்ள அதிநவீன ஆயுத முறைகள் இதற்கு இடைமறிப்பு திறன் வழங்குவதோடு எதிரிகளை எந்த சூழலிலும் தாக்க வழி செய்யும்.

13

மற்ற விமானங்கள் அப்பகுதியின் அனைத்து ரேடார்களில் எளிதாக தெரியும் போது எஃப்-22 எவ்வித ரேடார்களிலும் சிக்காது.

14

அதிநவீன தொழில்நுட்பங்களோடு இதில் இருக்கும் சூப்பர் க்ரூஸ் தொழில்நுட்பம் இதனினை ஒலியை விட இரு மடங்கு வேகத்தில் இயக்க வழி செய்கின்றது. வேறென்ன இந்த விமானம் ஒலியை விட இரு மடங்கு வேகத்தில் செல்லும் திறன் படைத்தது.

15

எஃப்-22 விமானத்தில் வழங்கப்பட்டுள்ள சூப்பர் க்ரூஸ் தொழில்நுட்பம் கொண்டு மணிக்கு சுமார் 1000 கிமீ வேகத்தில் பயணிக்க வழி செய்கின்றது.

16

உலகில் சூப்பர் க்ரூஸ் கொண்ட முதல் விமானம் எஃப்-22 தான் என்பதோடு ஒரே விமானமும் இது தான் என்பது குறிப்பிடத்தக்கது.

17

மற்ற ரேடார்களில் சிக்காத அதே சமயம் எஃப்-22 அருகில் பறக்கும் மற்ற விமானங்கள் சார்ந்த தகவல்களை சேகரித்து விமானிக்கு மிகவும் முக்கியமான தகவல்களை மட்டும் வழங்கும்.

18

எஃப்-22 ரேப்டார்கள் வீடியோ.

20

இது போன்ற தொழில்நுட்பம் மற்றும் உலகின் வினோத தகவல்களை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

English summary
Shocking Features World's Hi-Tech stealth Fighter Jet Tamil
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்