மர்மம் : வரலாற்றுக்கு முந்தையகால மண்டையோடுகளில் புல்லட் ஓட்டை..!?

Written By:

தொல்லியல் அல்லது தொல்பொருளியல் என்பது கட்டிடக்கலை, தொல்பொருட்கள் (artifacts), தொல்லுயிர் எச்சம், மனித மிச்சங்கள், என்ணிமப் பொருட்கள் மற்றும் நிலத்தோற்றங்கள் என்பன உள்ளிட்ட பழங்கால வரலாற்றில் எஞ்சிய பல பொருட்களைக் வெளிக்கொணர்ந்து, ஆவணப்படுத்தி, பகுப்பாய்வு செய்வதின் மூலம் புரிந்துக்கொள்ளப்படும் மனிதப் பண்பாடு பற்றிய புரிதலாகும்..!

இதுபோன்ற தொல்லியல் ஆய்வுகளில் சில அபூர்வமான விடயங்கள் வெளிச்சத்திற்கு கொண்டு வரப்படும், சில விடயங்களோ நாம் இதுவரையிலாக நம்பிக்கொண்டுருக்கும் வரலாற்றையே மாற்றி அமைக்கும், திருத்திக்கொள்ள உதவும் வண்ணம் மர்மமானதாக இருக்கும், அப்படியான ஒரு மர்மம் தான் இந்த - வரலாற்றுக்கு முந்தையகால மண்டையோடுகள்..!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

#1

ரஷ்ய தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களிடம் வரலாற்றுக்கு முந்தையகால காட்டு எருதின் மண்டையோடு ஒரு கிடைக்கப்பெற்றுள்ளது.

#2

அதை ஆய்வு செய்ததில் மிகவும் அதிர்ச்சிகரமாக, அந்த மண்டையோட்டில் ஒரு துப்பாக்கியை சூடு நிகழ்த்தப்பட்டுள்ளது போல தோட்டா துளை ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். கிடைக்கப்பெற்ற மண்டையோட்டின் வயதை வைத்து பார்க்கும்போது இது சாத்தியமே இல்லாத மிகவும் விசித்திரமான ஒரு நிகழ்வாகும்.

#3

காட்டு எருதின் தலை பகுதியில் உள்ள துளையானது உயர் வேகத்தில் வெளியான அவரு தோட்டாவினால் ஏற்பட்ட தாக்கம் தான் என்பது வெளிப்படையாகவே தெரிகிறது.

#4

பெரும்பாலான ஆராச்சியாளர்கள் இந்த துளையானது தற்காலத்தில் பயன்படுத்தப்படும் 'புல்லட் காலிபர்' துப்பாக்கியை ஒற்றுள்ள ஒன்றால் தான் ஏற்பட்டிருக்க முடியும் என்றும் நம்புகின்றனர்.

#5

இந்த விலங்கானது, கிழக்கு சைபீரியாவில் உள்ள யகூஸியா பகுதியை பிறப்பிடமாக கொண்டது என்பதும் இவைகள் 30,000 ஆண்டுகளுக்கு முன்பு அந்த பகுதியில் வாழ்ந்தன என்பதும் ஆராச்சியளார்களை மேலும் குழப்புகிறது

#6

இந்த கண்டுபிடிப்பு மூலம் நாம் நமது வரலாற்றில் மிகவும் மேம்பட்ட, அதிநவீனமான நாகரிகத்தினர் சார்ந்த வரலாற்று உண்மைகளை தவற விட்டுள்ளோம் என்ற சந்தேகமும் கிளம்பியுள்ளது.

#7

தற்போது இந்த மண்டையோடு மாஸ்கோவில் உள்ள உயிரிகளின் தொல்லுயிரியல் அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

#8

இதே போன்ற மற்றொரு விசித்திரமான வழக்குதான், 1921-ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்ட "நியண்டர்தால் வேட்டையாடி" ஒன்றின் மண்டையோடு..!

#9

வடக்கு ரோடிஷியாவில் தற்செயலாக தொழிலாளர்களிடம் கண்களில் சிக்கிய ஒரு மர்மமான குகைக்குள் வரலாற்றுக்கு முந்தைய கல்லறை கண்டுபிடிக்கப்பட்டது.

#10

அந்த கல்லறையில் இருந்து மிக சில எலும்புகளை மட்டுமே மீட்கப்பட முடிந்ததுள்ளது, கவனமான ஆய்வுக்ளுக்கு பின்பு ஆராய்ச்சியாளர்கள் அவைகள் ஆப்பிரிக்க நியண்டர்தால் மனிதன் பரம்பரையை சேர்ந்தவர்கள் என்பதை கண்டுப்பிடித்தனர்.

#11

குறிப்பிட்ட மண்டையோட்டை ஒன்றை மட்டும் மிகத்தீவிரமாக ஆய்வு செய்ய நேர்ந்தது ஏனெனில் அந்த மண்டையோட்டில் இருபுறமும் ஒரே விட்டம் கொண்ட சுற்று துளைகள் உள்ளன, அதாவது ஏதோ ஒரு நுழைந்த மற்றும் வெளியேறிய காயத்தின் ஆதாரம்..!

#12

இந்த துளையும் ஒரு தோட்டாவினால் ஏற்பட்டது என்று நம்பப்படுகிறது என்பதும், இவர்கள் பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மனித உயிரினம் என்பது குறிப்பிடத்தக்கது.

#13

இதற்கெல்லாம் காரணம் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பூமியில் வாழ்ந்த மிகவும் மேம்பட்ட இனங்கள் தான் என்று நம்பப்பட்டாலும் அறிவியலின் கீழ் இதற்கு துல்லியமான பதில் எதுவும் கிடையாது..!

#14

ஆர்எச் நெகடிவ் இரத்த வகை வேற்றுகிரக பரம்பரையை சேர்ந்தவர்களாம்..?


நடந்தது இதுதான், ஆனால் ஏன் நடந்தது என்பது எப்போதுமே புதிர்தான்..!?


படிக்கவே கூடாத 'மிகவும் அதிர்ச்சியான' விக்கிப்பீடியா பக்கங்கள்..!

#15

மேலும் இதுபோன்ற அறிவியல்-தொழிற்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

English summary
Researchers discover bullet holes in Million year old prehistoric skulls. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்